ஓ.பி.எஸ் உண்ணாவிரதம்? ரவீந்திரன் துரைசாமி கூறுவது என்ன?

ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், அதிமுகவில் தனது செல்வாக்கை நீருபிக்க ஓ.பி.எஸ் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தலாம் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்ததைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ் – இ.பி.ஸ் இடையேயான மோதல் ஒரு பெரிய சூறாவளியாக வீசிவருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் விடியற் காலை தீர்ப்புக்கு பிறகு, ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு பெரும் களேபரமாக முடிந்தது. அப்போது, … Read more

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு : நாள் குறித்த தேர்தல் அதிகாரி.!

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கு தேர்தல் கமிஷன் ஆணையம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. வரும் ஆகஸ்டு 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை வாக்காளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்க வாய்ப்பு வழங்கப்படும்.    மேலும், வருகின்ற 2023 மார்ச் 31-ம் தேதிக்குள் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 100 சதவீதம் விபரங்களை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, “பட்டியலை செம்மைப்படுத்தும் வகையில் வாக்காளரின் ஆதார் விபரங்களை … Read more

ஜெயலலிதாவின் சகோதரர் எனக்கூறி ஜெயலலிதாவின் சொத்துகளில் பங்கு கோரி 83 வயது முதியவர் மனு தாக்கல்.!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளில் 50 சதவீத பங்கு தரக்கோரி, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மைசூரின் வியாசர்புரத்தை சேர்ந்த 83 வயது முதியவர் வாசுதேவன். தனது தந்தை இரண்டாவதாக திருமணம் செய்த வேதவள்ளியின் மகள் ஜெயலலிதா, தனக்கு சகோதரி எனவும், ஜீவானம்சம் கேட்டு தனது தாய் தொடுத்த வழக்கில் வேதவள்ளி, ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் எதிர் மனுதாரர்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தீபா, தீபக் மட்டுமே ஜெயலலிதாவின் … Read more

31-வது கரோனா தடுப்பூசி முகாம்: 17 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் 

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடைபெறற 31-வது கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 16 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த மே 8 ஆம் தேதி, ஜூன் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. … Read more

நடுக்கடலில் போலீஸ் குவிப்பு – தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தும் படகுகள் விரட்டியடிப்பு

கடலூர், புதுவை மீன்பிடி பகுதிகளில் தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தும் படகுகள் விரட்டியடிக்கப்பட்டது. நடுக்கடலில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.  கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் மற்ற மீனவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, நேற்று சாமியார் பேட்டை பகுதியில் கடலூர் மாவட்டம், புதுவை மாநிலம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலுள்ள 60 மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும், இரட்டை மடி வலை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும், அதிக திறன் கொண்ட … Read more

ஜூலை 13-ல் கோட்டபய ராஜினாமா: இந்த தேதியின் முக்கியத்துவம் என்ன?

Nirupama Subramanian Explained: What is significant about July 13, the date Sri Lanka’s Gotabaya Rajapaksa has announced for his resignation?: சனிக்கிழமை (ஜூலை 9) இரவு, கொழும்பு கோட்டைப் பகுதியில் உள்ள அதிபர் கோட்டாபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தையும், காலி முகத்திடலில் உள்ள அதிபரின் செயலகத்தையும் “கோட்டா வெளியேறு” கோஷத்துடன் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தொலைக்காட்சியில் உரையாற்றும்போது, அதிபர் கோட்டபய … Read more

4800 கோடி ரூபாய்… சிபிஐ விசாரணை… நாளை விசாரணைக்கு வரும் எடப்பாடி பழனிச்சாமியின் வழக்கு.!

தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, 4800 கோடி ரூபாய் டெண்டர் முறை கேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதனை எதிரித்து எடப்பாடி கே பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து … Read more

உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் இடம்பிடித்த மதுரை மாணவிகள்..!

உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் இந்திய அணியில் மதுரையை சேர்ந்த 2 மாணவிகள் இடம்பிடித்துள்ளனர். ரேஷ்மாஸ்ரீ, ஸாகினி ஆகிய அந்த பத்தாம் வகுப்பு மாணவிகள், 8 ஆண்டுகளாக மாநில, தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை குவித்துள்ளனர். அக்டோபர் மாதம் அர்ஜென்டினாவில் நடைபெறும் உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில், ரோலர் ஹாக்கி பிரிவில் இந்திய அணிக்காக விளையாட தேர்வாகி உள்ளனர். மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் இருவரையும் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் … Read more

சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணையில் தலைமைச் செயலாளர் திடீர் ஆய்வு

சென்னை: சோழிங்கநல்லூர் ஆவின் பால்பண்ணையில் தலைமைச் செயலாளர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு பல அறிவுறுத்தல்களை வழங்கினார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் சென்னையில் அம்பத்தூர், மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் பால் மற்றும் பால் உபபொருட்கள் பால் பண்ணைகளை இயக்கி வருகிறது. இதில் சோழிங்நல்லூர் பால் பண்ணையில் இன்று தலைமைச் செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் பால் பண்ணையின் உற்பத்தி, குளிரூட்டும் பிரிவு, தரக்கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் பொறியியல் … Read more

பணி நேரத்தில் நீண்ட நேரம் ஆப்சென்ட் ஆன அரசு மருத்துவர்.. நூற்றுக்கணக்கான நோயாளிகள் அவதி!

ஆரணி அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் மருத்துவரொருவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இல்லாத காரணத்தினால் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்த அவலம் நிகழ்ந்துள்ளது. ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற நோயாளிகள் சிலர், அங்கு நீண்ட நேரம் மருத்துவர் வராத காரணத்தினால் பெரும் அவதிக்குள்ளானர்கள். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் மம்தா உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் … Read more