சத்துணவு சாப்பிட்ட 35-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாலி புதுகாலனியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. சத்துணவு சாப்பிடுவதற்கு முன்பாக மாணவ, மாணவிகள் பள்ளியில் வழங்கப்பட்ட இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்றுவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று எடக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர். Source link