சுப. உதயகுமாரன் எழுதும் தன்னைத்தான் காக்கின் – 14

சுப. உதயகுமாரன் [14] பரிந்துணர்வு கொள்வோம் [] ஒரு பேருந்தில் நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கும்போது, கைக்குழந்தையுடன் ஒரு பெண் ஏறினால், எழுந்து நின்று உங்கள் இருக்கையை அந்தப் பெண்ணுக்குத் தருவீர்களா? அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பீர்களா? [] ஓர் அஞ்சல் அலுவலகத்துக்கு நீங்கள் போகும்போது, உங்களுக்கு முன்னால் வந்து வரிசையில் நிற்போர் தங்கள் வேலைகளை முடிக்கட்டும் என்று காத்திருப்பீர்களா? அல்லது முண்டியடித்து உங்கள் வேலையை முடித்துக்கொள்ளப் பார்ப்பீர்களா? [] ஒரு நண்பர் ஏதோ ஒரு கொண்டாட்டத்திற்காக, உங்களை ஓர் … Read more

தமிழக அரசின் அலட்சியம்.. பறிபோன உயிர்.. விஜயகாந்த் கண்டனர்.!!

காட்டு யானை தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் ஆரோட்டு பாறை செல்வபுரத்தைச் சேர்ந்த விவசாயி நாதன் என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்.  வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் சொந்த மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் மூன்று பேர் காட்டு … Read more

தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு

தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் முதல் தவணை, 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என சுமார் ஒரு கோடியே 45லட்சம் பேர் உள்ளனர். சென்னையில் தடுப்பூசி செலுத்த 1600 சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.   Source link

இபிஎஸ்ஸுக்கு 2,452 பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு – சொந்த மாவட்டமான தேனியிலேயே ஆதரவை இழக்கும் ஓபிஎஸ்

சென்னை: சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை கூட்டம் தொடங்குவதற்கு சற்று நேரம் முன்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவுள்ளது. இதற்கிடையில், இபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 2,452 ஆக உயர்ந்துள்ளது. ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனியிலேயே அவரது ஆதரவு உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இபிஎஸ் தரப்பு திட்டமிட்டபடி நாளை பொதுக்குழுவை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. … Read more

பிஎஸ்என்எல் அலைக்கற்றையை திருடிய 2 இளைஞர்கள் கைது! 2000 சிம் கார்டுகள் பறிமுதல்!

தேனி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் அலைகற்றையை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பேசி வந்த கேரளாவை சேர்ந்த இரண்டு வாலிபர்களை தேனி நகர போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சீனத் தயாரிப்பு மிஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வெளிநாட்டு அழைப்புகள் மூலம் பணம் சம்பாதித்தனரா அல்லது தீவிரவாதிகள் உள்ளிட்ட சட்டவிரோத அமைப்புகளுக்கு உதவினார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேனியில் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் இளநிலை தொலை தொடர்பு அலுவலர் முனியாண்டி … Read more

வேளாங்கண்ணி கடற்கரையில் பெரும் சோகம்… கடல் அலையில் சிக்கி 3 சிறுமிகள் பலி.!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ராஜா கம்பீரம் கிராமத்தை சேர்ந்தவர் சேவியர். இவரது மகள்கள் ஆரோக்கியா ஷெரின் மற்றும் ரியானா. அதே பகுதியை சேர்ந்த பெஞ்சமின் என்பவரின் மகள் சஹானா. இவர்கள் தங்கள் கிராமத்தை சேர்ந்த 12 பேருடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் தேவலாயத்துக்கு சொந்தமான விடுதியில் தங்கினர். பின்னர் இன்று காலை வேளாங்கண்ணியில் பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்துவிட்டு கடலில் குளித்தனர். அப்போது ஆரோக்கிய ஷெரின், ரியானா,  சஹானா ஆகிய 3 … Read more

நாயின் வாய்க்கு சங்கிலி பூட்டு போட்டு விட்ட விபரீத வில்லன்கள்..! போராடி மீட்ட சம்பவம்..!

சம்பளமில்லா காவலாளியாக இரவு பகலாக வீதியை காக்கும் நாய் ஒன்றை பிடித்து விபரீத எண்ணம் கொண்ட சிலர் அதன் வாயை இரும்பு சங்கிலியால் கட்டி வீதியில் பசியோடு அலையவிட்ட சம்பவம் சாத்தான்குளம் அருகே அரங்கேறி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த தட்டார்மடம் கிராமத்தில் கிடைத்ததை சாப்பிட்டு விட்டு வீட்டையும், வீதியையும் காவல் காத்த நாய் ஒன்றின் வாய் சங்கிலியால் கட்டி பூட்டுப் போடப்பட்ட நிலையில் பரிதாபமாக வலம் வந்தது. வாய் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருந்ததால் வாய் … Read more

வானிலை முன்னறிவிப்பு: கோவை, நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு 

சென்னை: தமிழகத்தில் கோவை மற்றும் நீலகரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு … Read more

சேலம்.! இளைஞர் விஷம் குடித்து தற்கொலை.!

சேலம் மாவட்டத்தில் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டை சிங்களந்தா பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன்(வயது 24). இவர் சரியாக வேலைக்கு போகாமல் மது அருந்துவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இதனைப் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த சரவணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு … Read more

இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் – ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகள் வருமாறு: ஆளுநர் ஆர்.என்.ரவி: அமைதியான, வளமான வாழ்க்கையை வாழ்வதற்கு, நமது இளம் தலைமுறையினருக்கு நற்சிந்தனை, கருணை, பெருந்தன்மை ஆகியவற்றை வழங்குவதற்கு இந்நன்னாளில் உறுதி கொள்வோம். இந்த தியாகத் திருநாளானது நம் அனைவருக்கும் அன்பின் வலிமையையும், நல்லிணக்கத்தையும், உடல்நலன், மகிழ்ச்சியையும், நமது பெரும் முயற்சிகளில் வெற்றியையும் அளிக்கட்டும். முதல்வர் … Read more