ரோஸ்மில்க் குடித்த சிறுவன் உயிரிழப்பு.. காவல்துறயினர் விசாரணை..!

ரோஸ்மில்க் குடித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கண்ணகி நகர் குடிசைமாற்று வாரியத்தில் வசித்து வருபவர் மணிகண்டன் . இவரது மகன் வசந்தகுமார் அங்குள்ள ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டின் அருகே உள்ள கடையில் ரோஸ்மில்க் குடித்து விட்டு விளையாடி கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயக்கமுற்ற அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த பொதுமக்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த விசாரணை மேற்கொண்டு … Read more

புலிகள் காப்பகத்தில் புள்ளி மானை வேட்டையாடும் செந்நாய்.!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புள்ளி மானை செந்நாய் வேட்டையாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில், ஆசனூர் அருகே சாலையோர வனப்பகுதியில் நடமாடிய புள்ளிமானை செந்நாய் துரத்திப் பிடித்து வேட்டையாடும் காட்சியை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். Source link

கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது: இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் “கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது” வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு, கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதை 2022 ஆம் ஆண்டு ஜூன் 3-ம் நாள் அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்க ஏதுவாக, விருதாளரை தேர்வு செய்ய திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமனை தலைவராகவும், நடிகரும், நடிகர் … Read more

24 ஆண்டுகளாக மீன் சுத்தம் செய்யும் வேலை; போராடி மகளை ரஷ்யாவில் மருத்துவம் படிக்கவைத்த தாய்

கணவர் இறந்து 24 ஆண்டுகளான நிலையில், மாற்றுத்திறனாளி மகனுடன் வாழ்க்கையில் போராடி வரும் மீன் கழுவி சுத்தம் செய்யும் பெண்ணொருவர், தன் மகளை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்து மருத்துவராக்கியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் புறநகர் பகுதியில் வசித்து வருபவர் ரமணி. இவருக்கு ரவிச்சந்திரன் என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி 11 மாத கைக்குழந்தையாக இருக்கும்போது ரமணியின் கணவர், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு, உறவினர்கள் எல்லாம் … Read more

10 நிமிட டெலிவரி காலக்கெடு; அபராதம், ஊதிய குறைப்பால் அவதிப்படும் ஊழியர்கள்

Soumyarendra Barik Penalties for delays, cuts in weekly pay: Life gets riskier for 10-minute delivery executives: விரைவான வர்த்தக தொடக்க நிறுவனங்களின் முக்கிய மையமாக வேகம் இருப்பதால் சாலைப் பாதுகாப்பைப் பற்றிய கவலைகள் அதிகரித்து வந்தாலும், Blinkit மற்றும் Zepto போன்ற நிறுவனங்கள் புதிய ஊக்கத்தொகை அடிப்படையிலான ஊதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன, இதில் சில சந்தர்ப்பங்களில் தாமதமாக டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. புதிய விதிமுறைகள் ஆர்டர்களுடன் இன்னும் வேகமாக … Read more

முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமியை நேரில் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்.!

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று திருவள்ளூர் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜிகே மணி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 2000 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிகள் முக்கிய தீர்மானமாக பாட்டாளி … Read more

சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.!

திருவள்ளூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இண்டிகோ கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. திருத்தணியை சேர்ந்த ராஜேஷ்குமார் – ஆஷா தம்பதியர் நேற்று காரில் திருவள்ளூர் சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். புதூர் அருகே சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக காரை ஓரமாக நிறுத்தி இருவரும் இறங்கியுள்ளனர். சிறிது நேரத்திலேயே காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. மின் கசிவால் தீப்பிடித்திருக்கலாம் என … Read more

மார்க்கெட் செஸ் வரி விதிப்பு; திமுக அரசின் வணிக விரோத கொள்கை: ஓபிஎஸ் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் முதல் அட்டவணையில் புதிதாக பல வேளாண் விளை பொருட்களை சேர்த்து அதன்மூலம் வணிகர்களை ஒரு விழுக்காடு சந்தை வரி (Market Cess) செலுத்த ஆளாக்கியுள்ள திமுக அரசின் வணிக விரோத கொள்கைக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “பிறர் பொருளையும் தமது பொருள் போலக் கருதி நடுநிலையுடன் செயல்படுவதே வணிகர்களுக்கு அழகாகும்” என்ற … Read more

சென்னை: ரோஸ்மில்க் குடித்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

ரோஸ்மில்க் குடித்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை கண்ணகி நகர் குடிசைமாற்று வாரியத்தில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனர் மணிகண்டன் என்பவரின் மகன் வசந்தகுமார் (11). 5ம் வகுப்பு படித்து வந்த இவர், நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள கடையில் ரோஸ்மில்க் வாங்கிக் குடித்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயக்கமுற்ற அவரை, ஆம்புலன்ஸ் மூலமாக ஈஞ்சம்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து … Read more

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு; விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 3 ஆம் இடம்

NEET exam 2022 Tamilnadu is third in applications: தமிழகத்தை ஆளும் தி.மு.க.,வும் அதன் கூட்டணி கட்சிகளும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து வந்தாலும், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழ்நாடு 3 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) எனப்படும் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த நீட் தேர்விலிருந்து … Read more