சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!

4 நாட்களுக்கு சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளித்திருப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.தரைமட்டத்தில் இருந்து சுமார் 4700 அடி உயரத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு  தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர்.  இங்கு ஒவ்வொரு மாதமும் பிரதோ‌ஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு மலையேற அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. அதன் படி, ஆனி பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் … Read more

அரசியலில் ஓபிஎஸ் உடன் பயணித்ததற்கு வெட்கப்படுகிறேன் – கே.பி.முனுசாமி

அரசியலில் ஓபிஎஸ் உடன் இணைந்து பணியாற்றியதற்கு தாம் வெட்கப்படுவதாகவும், வேதனைப்படுவதாகவும் அதிமுக மூத்த நிர்வாகி கே பி முனுசாமி தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவுடன் இணைந்து ஓபிஎஸ் செயல்படுவது போன்ற சூழல் வந்ததால் தான் அவரை விட்டு தாம் விலகியதாக கூறினார். இதனிடையே, ஓபிஎஸ்-ன் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திலிருந்து இன்று மேலும் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை … Read more

சென்னையில் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை நடத்தினர். சீன நாட்டைச் சேர்ந்தவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கப் பதிவு செயய்ப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த மே மாதம் டெல்லியிலிருந்து சென்னை வந்த சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்தின் … Read more

நகைகளை கழற்றி வைத்துவிட்டு தூங்கிய தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தொழிலதிபரின் வீடு புகுந்து 65 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை திருச்செந்தூர் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்செந்தூரில் கீழ வெயிலுகந்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் முருகேசன் – கலாவதி தம்பதியர் இவரது மகன் பாலகுமார் என்பவர் திருச்செந்தூரில் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், தொழிலதிபர் பாலகுமார் தனது வீட்டின் மாடியில் தூங்கும்போது தான் அணிந்திருந்த 20 பவுன் தங்க நகையை கழற்றி அலமாரியிலுள்ள லாக்கரில் வைத்துவிட்டு தூக்குவது வழக்கம், அதேபோல் … Read more

குடும்ப உறவுகளை கொண்டாட வரும் ‘செவ்வந்தி’: சன் டி.வி புதிய சீரியல்

சன் டி.வி.யில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள செவ்வந்தி சீரியலின் ப்ரமோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் உள்ள சன். டி.வி.யின் பூவே உனக்காக சீரியல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென முடிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் தமிழ் சீரியல் வட்டாரத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் எந்த சேனலாக இருந்தாலும் ஒரு சீரியல் முடிந்துவிட்டால் அடுத்து சில நாட்களில் புதிய … Read more

ஆன்லைன் ரம்மி விளையாடியதை தட்டிகேட்ட மனைவி.. கணவன் துணிகரம்..!

ஆன்லைன் ரம்மி விளையாடியதை கண்டித்த மனைவியை கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், தாளக்குடி பகுதியை சேர்ந்தவர் நரசிம்மராஜ்.  இவருக்கு திருமணமாகி சிவரஞ்சனி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக சிவரஞ்சனியின் பெற்றோர் அவரை தொடர்ப்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால்,   அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால், வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.  ஆனால் வீடு பூட்டியிருந்ததை கண்டு ஆத்திரமடைந்த அவர்கள்  நரசிமன்னின் சகோதரிக்கு அழைத்து … Read more

அரசு மருத்துவமனை கழிப்பறையில் சடலமாக கிடந்த ஆண் சிசு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள கழிப்பறையில் குறைபிரசவத்தில் 7 மாதத்தில் பிறந்த ஆண் சிசு சடலமாக கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அளித்த புகாரின் பேரில், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை கழிவறையில் வீசிச் சென்றவர்கள் யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. Source link

ராமேசுவரம் அருகே அரியமான் கடலில் ஆபத்தான படகு சவாரி

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே அரியமான் கடலில் ஆபத்தான படகு சவாரி நடத்துபவர்கள் மீது மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ராமேசுவரம் அருகே அரியமான் கடற்கரை சுற்றுலாவுக்கு புகழ்பெற்று விளங்குகிறது. தினந்தோறும் அரியமான் கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்கள் என்றால் பயணிகளின் கூட்டம் இரண்டு மடங்காகிவிடும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடலோரத்தில் குளிப்பதற்கும், குடும்பத்துடன் வருவோர் படகு சவாரி செய்யவும் அதிகளவில் … Read more

'குலசேகரபட்டினத்தில் நவீன வசதிகளுடன் ராக்கெட் ஏவுதளம்' – மயில்சாமி அண்ணாதுரை

உலக அளவில் நவீன வசதிகளுடன் குலசேகர பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளம் மூலம் உருவாகும் வேலை வாய்ப்பை தமிழக இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மயில்சாமி அண்ணாதுரை பேசினார். கலைஞர் கணினி கல்வியகத்தின் சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் சைதாப்பேட்டை தொகுதியில் 12 ஆம் வகுப்பில் 500-க்கு மேல் மதிப்பெண் பெற்ற சுமார் 200 மாணவ, மாணவிகளுக்கு 2000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் விழா சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் … Read more

புதிய பாதை 2… பார்த்திபன் இயக்கத்தில் சிம்பு?

தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குநர்களின் பெயர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயமாக பார்த்திபனின் பெயர் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் சினிமாவில் அவர் செய்யும் வித்தியாசமான முயற்சிகளும், நடிப்பில் அவர் காட்டும் வித்தியாசமும்தான். 90-களின் தொடக்கத்தில் புதிய பாதை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பார்த்திபன், தொடர்ந்து பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள், உள்ளே வெளியே, சரிகம பதனி. புள்ளக்குட்டிக்காரன், ஹவுஸ்புல், கதை திரைக்கதை வசனம் இயக்கம். உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதில் கடந்த … Read more