ஈரோடு: வீட்டின் பூட்டை உடைத்து கார், நகை, பணம் கொள்ளை – போலீசார் விசாரணை

குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து கார், நகை, பணம் கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி, மாதம் பாளையம் ஊராட்சி கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (50) கம்ப்யூட்டர் டிசைனரான இவர் தனது மனைவி நித்யா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கோடை விடுமுறையை கொண்டாட தனது குடும்பத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை கேரளாவுக்கு சுற்றுலா … Read more

அறிவாலயத்தில் கையூட்டு பெறுவதாக பேசுவதா? அண்ணாமலையை கண்டித்து ஊடகத் துறையினர் ஆர்ப்பாட்டம்

சென்னையில் பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர் ஒருவர் சென்னை வந்திருந்த பிரதமர் மோடியை வரவேற்பதற்கு பா.ஜ.க சார்பாக விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததாக கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த அண்ணாமலை, கேள்வி கேட்டவரை நோக்கி உங்களுக்கு “200 ரூபாய் நிச்சயம்.. அறிவாலயத்தில் வாங்கிக் கொள்ளலாம் என ஆரம்பித்து படிப்படியாக ரூ.3000 வரை வாங்கிக்கொள்ளலாம் என அவமதிக்கும் வகையில் பேசினார். இதற்கு பல … Read more

திருவண்ணாமலையில் பெண்களை வசியம் செய்து பணம் பறிக்கும் மர்ம ஆசாமிகள்.! வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்.!

திருவண்ணாமலையில் இளம்பெண்கள் பணி செய்யும் கடைகளை நோட்டமிட்டு, போலி ஜோதிடர் இருவர், பெண்களை வசியம் செய்து பணத்தை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை, செய்யாறு அருகே காந்தி மூட்டுவலி மெடிக்கலுக்கு காவி வேட்டி அணிந்து கொண்டு பிச்சை எடுப்பதுபோல வந்த 2 மர்ம நபர்கள், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 2 பெண் ஊழியர்களிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது அந்த பெண்கள் பத்து ரூபாய் அவர்களுக்கு கொடுத்துள்ளனர். அதை … Read more

எச்.டி.எப்.சி வங்கி கிளையில் மோசடி? 100 வங்கி கணக்குகளுக்கு தலா ரூ.13 கோடி பணப் பரிமாற்றம்..!

சென்னை தி.நகர் பர்கிட் சாலையில் உள்ள எச்.டி.எப்.சி வங்கி கிளையில் இருந்து வாடிக்கையாளர்களின் 100 வங்கி கணக்குகளுக்கு தலா 13 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 100 வங்கி கணக்குகளையும் முடக்கிய வங்கி அதிகாரிகள், தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. புதிய சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்ததே … Read more

12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு

சென்னை: 12 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,சென்னை மாநகராட்சியின் தெற்கு மண்டல துணை ஆணையராக சிம்ரன்ஜீத் சிங் கலான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கூடுதல் செயலாளராக விஜயலட்சுமி, கூட்டுறவு சங்கங்கங்களின் கூடுதல் பதிவாளராக சங்கர் நிமிக்கப்பட்டுள்ளனர். சமூக நலன், மகளிர் உரிமைத்துறை கூடுதல் இயக்குநராக கார்த்திகா, சென்னை குடிநீர் வழங்கல் … Read more

ஊட்டி கோடை விழா: சுற்றுலா பயணிகளின் மனதை கவர்ந்த பழக் கண்காட்சி

நீலகிரி மாவட்ட கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியான குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நேற்று துவங்கிய பழக் கண்காட்சியை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக்கண்காட்சி நேற்று துவங்கியது. இரண்டு நாள் நடைபெறும் இந்த பழக் கண்காட்சியில் தேனி, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பல வகையான 3 டன் பழங்களைக் கொண்டு பல்வேறு உருவங்களை உருவாக்கி காட்சிப்படுத்தப்பட்டன. இதில், 1500 கிலோ திராட்சையில் … Read more

முதல் பார்வையில் தெரிந்தது பெண் முகமா, பூக்களா?

ஆப்டில் இல்யூஷன் படங்கள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்படும் காலம் இது. ஆப்டில் இல்யூஷன் படங்கள் ஒரு பொழுதுபோக்கு புதிரி விளையாட்டுகளாக மட்டுமல்லாமல் ஆளுமையைக் குறிப்பிடுபவையாக உள்ளன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருவதாக மட்டுமல்லாமல், படத்தைப் பார்ப்பவரின் ஆளுமையையும் குணலனையும் குறிப்பிடுகின்றன. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாவும் தெரியக்கூடியவை. ஒருவரின் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவருடைய … Read more

இயக்குனர் டி ராஜேந்திரனின் உடல்நலக்குறைவு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு.!

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும், இயக்குனருமான டி ராஜேந்திரரை, முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். நெஞ்சுவலி காரணமாக கடந்த 19ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இயக்குனர் டி ராஜேந்தர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வயிற்றில் இரத்தக்கசிவு ஏற்பட்டு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து, அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று அந்த தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்ற தமிழக … Read more

கடந்த ஓராண்டில் 102 டன் போதைப் பொருட்கள் பறிமுதல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டில் 6 கோடியே 80 லட்சம் மதிப்பிலான 102 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை பெசன்ட் நகரில் பிரம்மகுமாரிகள் சமாஜமும், ரேலா மருத்துவமனையும் இணைந்து உலக புகையிலை நாள் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைப்பயணம் நடத்தப்பட்டது. இந்த நடைபயணத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மே 29) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்குப் … Read more

ஆவடி: திருமணமான 9 மாதத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு – ஆர்டிஓ விசாரணை

ஆவடி அருகே திருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், செந்தில் நகர் பிருந்தாவன் அவென்யூவில் வசிப்பவர் ஐயப்பன் (35). இவர் பிராட்வேயில் உள்ள பாத்திரக் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தரண்யா (25). உறவினர்களான இவர்களுக்கு கடந்த 9 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஐயப்பன் வேலைக்குச் சென்ற நிலையில், தனது மனைவி தரண்யாவை கைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் … Read more