திருநெல்வேலி : சாலையை கடக்க முயன்ற இறைச்சி கடைக்காரர் லாரி மோதி உயிரிழப்பு.!

இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இறைச்சிக்கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் நாச்சியார் காலனியில் முத்துபாண்டியன் (வயது 55) என்பவர் வசித்து வருகிறார். இவர் என்.ஜி.ஓ ‘ஏ’ காலனியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், முத்துப்பாண்டியன் தனது இருசக்கர வாகனத்தில் ரெட்டியார்பட்டி அருகே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர … Read more

மது போதையில் தகராறு செய்த கணவரின் முகத்தில் கொதிக்க கொதிக்க ரசத்தை ஊற்றிய மனைவி

விழுப்புரம் மாவட்டத்தில், மது போதையில் தகராறு செய்த கணவரின் முகத்தில் மனைவி கொதிக்க கொதிக்க ரசத்தை ஊற்றிய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்த நடராஜன் தினமும் மது அருந்தி விட்டு மனைவி குப்பம்மாளை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து குப்பம்மாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் 2 முறை அவரை எச்சரித்து அனுப்பி உள்ளனர். நேற்றிரவு மீண்டும் மது போதையில் தகராறு செய்த நடராஜனின் முகத்தில் சூடான ரசத்தை குப்பம்மாள் … Read more

புதுச்சேரி முதல்வரை தள்ளிய அமைச்சரின் பாதுகாவலர் மீது நடவடிக்கைக் கோரி ஆளுநர் மாளிகை முற்றுகை: கடும் மோதலால் பரபரப்பு

புதுச்சேரி: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டத்தின்போது அமைச்சர் நமச்சிவாயத்தின் பாதுகாவலர் சப்இன்ஸ்பெக்டர் ராஜசேகர், முதல்வர் ரங்கசாமியைத் தள்ளிய வீடியோ வைரலாக பரவியது. முதல்வர் ரங்கசாமியை தள்ளிய பாதுகாப்பு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், என்ஆர் காங்கிரஸ் செயலாளர் ஜெயபால், கூட்ட நெரிசலில் இந்தச் சம்பவம் நிகழ்ந்து விட்டதாகவும், இதை தொண்டர்கள் பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், புதுவை அரசுப் பணியாளர்கள் கூட்டமைப்பு … Read more

காவல்துறையைத் தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின்.. கமலஹாசன் சொல்ல வரும் செய்தி,!

காவல் நிலைய மரணங்களுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், ”காவல்துறை புகார் ஆணையம்” சீரமைக்கப்படவேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியான அக்கட்சியின் செய்திக்குறிப்பில், “விசாரணைக்கைதிகளை நடத்த வேண்டிய விதம் தொடர்பாக நீதிமன்றங்கள் பல தீர்ப்புகள், அறிவுறுத்தல்களை  வழங்கியிருந்தாலும், லாக்அப் மரணங்கள்  தொடர்வது கொடுமையானது.  குற்றவாளியே என்றாலும் தண்டிக்கவேண்டியது நீதித்துறைதான்,காவல்துறையல்ல என்ற எளியோனுக்கும் தெரிந்த சட்டமுறையை காவல்துறை கடைபிடிக்காமல் முரண்டு  பிடிப்பது கண்டனத்துக்கு உரியது. காவல்துறையைத் தன்வசம் வைத்திருக்கும் முதல்வர், காவல்நிலைய மரணங்களுக்கு … Read more

மதுரை ஆதினம் ஏன் அரசியல் பேசக் கூடாது..? அவருக்கு எம்பி பதவி கொடுத்தால் என்ன தவறு..? சீமான் கேள்வி

மதுரை ஆதினம் ஏன் அரசியல் பேசக் கூடாது? என்றும் அவருக்கு எம்பி பதவி கொடுத்தால் என்ன தவறு? என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் பேசிய அவர், கேஜிஎப் போன்ற படங்கள் தமிழ்நாட்டில் வெற்றிபெறுகிறது ஆனால் நடிகர் விஜய் உள்ளிட்டோரின் தமிழ் படங்களை வெளியிட கர்நாடகாவில் மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்றார். மேலும், நயன்தாரா திருமணம் வியாபாரமா? என தன்னிடம் கேள்வி எழுப்பப்படுவதாகவும் சீமான் கூறினார். Source link

சாதி, மதம் உட்பட எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சாதி, மதம் உட்பட எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். உலக ரத்த தான தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “விபத்து, அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசரத் தேவைகளின்போது பிறர் உயிர் காக்க குருதி கொடையளிப்போரின் நல்லுள்ளம் போற்றுவோம்! சாதி – மதம் – நிறம் – பாலினம் என எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை! குருதிக் கொடையளித்து மனித உயிர் … Read more

போக்குவரத்து நெரிசலை குறைக்க உய்யகொண்டான் கரைகளை அகலப்படுத்த முடிவு – அமைச்சர் கே.என்.நேரு

KN Nehru says Trichy river banks widen for traffic congestion: திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து குடமுருட்டி வரை 8 மீட்டர் அகலத்தில் புதிய சாலை அமைத்து மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவிருப்பதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், திருச்சி மாநகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கரூர் ரோடு … Read more

தஞ்சாவூர் : இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்.. நடுரோட்டில் சாமி சிலை வைத்து சாலை மறியல்.!

திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் சாமி சிலையை நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட ராஜகிரி அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழாவாக நடக்கும் முக்கிய விழாவின்போது சுவாமி வீதிஉலா முக்கிய வீதிகள் வழியாக வந்தது.  அப்போது பல்லக்கு தூக்கி வந்த இரு தரப்பினரிடையே தகராறு மோதலாக மாறியது. இதனையடுத்து சாமியை நடுரோட்டில் இறக்கி வைத்துவிட்டு கற்களாலும், மூங்கிலாலும் தாக்கிக் கொண்டனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து … Read more

கல்லூரிகள் மாணவர் சேர்க்கையின்போது 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் – அமைச்சர் பொன்முடி

அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், மாணவர் சேர்க்கையின்போது 69% இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தியுள்ளார். மதுரை பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி பயோடெக் படிப்பிற்கு பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அப்பல்கலைக்கழகம் அறிவித்த நிலையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்த பொன்முடி, இந்த ஆண்டு கல்லூரிகளில் முழு பாடங்களும் நடத்தப்படும் என்றார்.  Source link

தி.மலை கிரிவலப் பாதையில் கருணாநிதி சிலை அமைக்க தடை இல்லை: உயர் நீதிமன்றம்

சென்னை: திருவண்ணாமலையில் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்கப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டதையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வேளச்சேரியைச் சேர்ந்த ஜி.கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருவண்ணாமலை கிரிவல பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கிய ஜீவா கல்வி அறக்கட்டளை, அருகில் … Read more