எம்.ஜி.எம் குழும இடங்களில் வருமான வரி அதிரடி சோதனை.!!

பொழுதுபோக்கு பூங்கா நடத்தும் எம்ஜிஎம் குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  சென்னையில்  எம்.ஜி.எம். டிஸ்ஸி வேல்ட் என்ற பொழுதுபோக்குப் பூங்காவை எம்ஜிஎம் குழுமம் நடத்தி வருகிறது. இது கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில், பொழுதுபோக்கு பூங்கா நடத்திவரும் எம்ஜிஎம் குழுமம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.  சென்னை, நெல்லை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.  வரி ஏய்ப்பு புகார் … Read more

சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான ஆம்னி பஸ்… புதுமாப்பிள்ளை, ஓட்டுநர் உள்பட 3 பேர் பலி.!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே ஆம்னி பஸ் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் புதுமாப்பிள்ளை, ஓட்டுநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.  நாகர்கோவில் அடுத்த வடசேரியில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட ஆம்னி பேருந்து கயத்தார் அடுத்த அரசங்குளம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி கவிழ்ந்தது. விபத்தில் ஓட்டுநர் உள்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.   … Read more

கட்சியினர் எதற்கும் அஞ்சாமல் போராட வேண்டும்: காங். தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தல்

சென்னை: காங்கிரஸ் கட்சியினர் எதற்கும் அஞ்சாமல் சித்தாந்த ரீதியாக போராட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதைக் கண்டித்து நேற்று முன்தினம் சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் ராகுல் காந்தியை அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத்ததைக் கண்டித்து, சென்னை சத்தியமூர்த்தி பவன் … Read more

சமயபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி: உயிர் தப்பிய முத்தரையர் சங்க நிர்வாகி

க. சண்முகவடிவேல், திருச்சி திருச்சி சமயபுரம் அருகே முத்தரையர் சங்க நிர்வாகி கார் மீது முன்விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி புத்தூர் பகுதியை சேர்ந்தவர் திலீபன். இவர் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் சங்கம் சார்பில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கொடியேற்ற விழாவை முன்னிட்டு நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்வதற்காக சந்திரன் என்பவரை அழைத்துக்கொண்டு பார்சூனர் … Read more

மீண்டும் அதிமுகவில் பரபரப்பு.. ஒட்டப்பட்ட போஸ்டர் அதிர்ச்சியில் இபிஎஸ்.!!

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று சென்னை: ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பெற்றது. மேலும், இந்த கூட்டத்தில் முடிவுகள் குறித்து தகவல் வெளியானவை, வரும் 23ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அனுமதி இல்லை. அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க … Read more

லேடீஸ் ஹாஸ்டலுக்குள் தாவிக் குதித்த நேபாளி.. கால் ஒடிந்து நோயாளியானார்..! போலீஸ் செய்கிற வேலையா இது?

தாம்பரத்தில் பெண்கள் விடுதியின் உள்ளே ஏறிக்குதித்த நேபாளி இளைஞர் ஒருவர், தப்பிக்கும் முயற்சியில் சுவர் ஏறிக்குதித்ததால் காலில் எலும்பு முறிந்து சிக்கிக் கொண்டார். வழக்கை விசாரிக்க சோம்பல் பட்டு கால் முறிந்த நேபாளியை பெருங்களத்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் போட்டுச் சென்ற தாம்பரம் போலீசாரின் மெத்தனம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. சென்னை பெருங்களத்தூர் குடியிருப்பு பகுதியின் சாலையில் நடக்க சிரமப்பட்டு நேபாள நாட்டு இளைஞர் ஒருவர் தட்டுத் தடுமாறி தவழ்ந்து வந்தார். அங்குள்ள … Read more

அதிமுகவில் ஒற்றைத் தலைமை இருக்க வேண்டும்: ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தல்

சென்னை: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக கட்சி நிர்வாகக் குழு முடிவெடுக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 2019-ல் நடைபெற வேண்டிய அதிமுக அமைப்பு தேர்தல் கரோனாவால் தள்ளிப்போனது. இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பரில்பதவி வாரியாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி மற்றும் படிப்படியாக மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட … Read more

Rasi Palan 15th June 2022: இன்றைய ராசிபலன்

Rasi Palan 15th June 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 15th June 2022: இன்றைய ராசி பலன், ஜூன் 15ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  … Read more

மாநிலக் கல்விக் கொள்கை குறித்து.. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை.!

 மாநிலக் கல்வி கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க, கல்வியாளர்கள், வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, மாநில கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைத்தது. அந்த குழுவில் பல்வேறு பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். அனைவருக்கும் … Read more