பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் கல்யாணி நித்யானந்தன் மறைவு

சென்னையை சேர்ந்த பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் கல்யாணி நித்யானந்தன் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 87. சென்னையில் கடந்த 1935-ல்பிறந்த மருத்துவர் கல்யாணி நித்யானந்தனின் பூர்வீகம் மதுரை அடுத்த மேலூர். சென்னை லேடி வெலிங்டன் பள்ளி, ராணி மேரி கல்லூரியில் படித்த பிறகு, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம்பயின்றார். பல்கலைக்கழகத்திலேயே முதலாவதாக வந்து தங்கப்பதக்கம் பெற்றார். ஸ்டான்லியிலேயே முதுகலைப் படிப்பை முடித்தார், தமிழகத்தில் முதன்முதலாகமாரடைப்பு நோய் அவசர சிகிச்சைப் பிரிவு … Read more

ஊழல் குற்றச்சாட்டு ; அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் மா. சுப்பிரமணியன்

கர்ப்பிணிகளுக்கான  ஊட்டச்சத்து  பெட்டகம் வழங்கும் ஒப்பந்தத்தில்  ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது தவறை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்  கர்ப்பிணி  பெண்களுக்கு  வழங்கப்படும் ஊட்டசத்து  தொகுப்பில் முறைகேடு நடந்துள்ளதாக  தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், … Read more

எம்.ஜி.எம் குழும இடங்களில் வருமான வரி அதிரடி சோதனை.!!

பொழுதுபோக்கு பூங்கா நடத்தும் எம்ஜிஎம் குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  சென்னையில்  எம்.ஜி.எம். டிஸ்ஸி வேல்ட் என்ற பொழுதுபோக்குப் பூங்காவை எம்ஜிஎம் குழுமம் நடத்தி வருகிறது. இது கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில், பொழுதுபோக்கு பூங்கா நடத்திவரும் எம்ஜிஎம் குழுமம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.  சென்னை, நெல்லை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.  வரி ஏய்ப்பு புகார் … Read more

சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான ஆம்னி பஸ்… புதுமாப்பிள்ளை, ஓட்டுநர் உள்பட 3 பேர் பலி.!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே ஆம்னி பஸ் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் புதுமாப்பிள்ளை, ஓட்டுநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.  நாகர்கோவில் அடுத்த வடசேரியில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட ஆம்னி பேருந்து கயத்தார் அடுத்த அரசங்குளம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி கவிழ்ந்தது. விபத்தில் ஓட்டுநர் உள்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.   … Read more

கட்சியினர் எதற்கும் அஞ்சாமல் போராட வேண்டும்: காங். தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தல்

சென்னை: காங்கிரஸ் கட்சியினர் எதற்கும் அஞ்சாமல் சித்தாந்த ரீதியாக போராட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதைக் கண்டித்து நேற்று முன்தினம் சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் ராகுல் காந்தியை அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத்ததைக் கண்டித்து, சென்னை சத்தியமூர்த்தி பவன் … Read more

சமயபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி: உயிர் தப்பிய முத்தரையர் சங்க நிர்வாகி

க. சண்முகவடிவேல், திருச்சி திருச்சி சமயபுரம் அருகே முத்தரையர் சங்க நிர்வாகி கார் மீது முன்விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி புத்தூர் பகுதியை சேர்ந்தவர் திலீபன். இவர் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் சங்கம் சார்பில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கொடியேற்ற விழாவை முன்னிட்டு நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்வதற்காக சந்திரன் என்பவரை அழைத்துக்கொண்டு பார்சூனர் … Read more

மீண்டும் அதிமுகவில் பரபரப்பு.. ஒட்டப்பட்ட போஸ்டர் அதிர்ச்சியில் இபிஎஸ்.!!

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று சென்னை: ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பெற்றது. மேலும், இந்த கூட்டத்தில் முடிவுகள் குறித்து தகவல் வெளியானவை, வரும் 23ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அனுமதி இல்லை. அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க … Read more

லேடீஸ் ஹாஸ்டலுக்குள் தாவிக் குதித்த நேபாளி.. கால் ஒடிந்து நோயாளியானார்..! போலீஸ் செய்கிற வேலையா இது?

தாம்பரத்தில் பெண்கள் விடுதியின் உள்ளே ஏறிக்குதித்த நேபாளி இளைஞர் ஒருவர், தப்பிக்கும் முயற்சியில் சுவர் ஏறிக்குதித்ததால் காலில் எலும்பு முறிந்து சிக்கிக் கொண்டார். வழக்கை விசாரிக்க சோம்பல் பட்டு கால் முறிந்த நேபாளியை பெருங்களத்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் போட்டுச் சென்ற தாம்பரம் போலீசாரின் மெத்தனம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. சென்னை பெருங்களத்தூர் குடியிருப்பு பகுதியின் சாலையில் நடக்க சிரமப்பட்டு நேபாள நாட்டு இளைஞர் ஒருவர் தட்டுத் தடுமாறி தவழ்ந்து வந்தார். அங்குள்ள … Read more

அதிமுகவில் ஒற்றைத் தலைமை இருக்க வேண்டும்: ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தல்

சென்னை: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக கட்சி நிர்வாகக் குழு முடிவெடுக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 2019-ல் நடைபெற வேண்டிய அதிமுக அமைப்பு தேர்தல் கரோனாவால் தள்ளிப்போனது. இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பரில்பதவி வாரியாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி மற்றும் படிப்படியாக மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட … Read more