தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலையில் 2 நாட்களாக கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத் தீ
வாசுதேவநல்லூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் 2 நாட்களாக கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத் தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள செல்லுபுளி பீட் வனப்பகுதியில் கடந்த 27ஆம் தேதி திடீரென காட்டுத் தீ பற்றி எரிந்தது. உடனே புளியங்குடி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் சங்கரன்கோவில், … Read more