கடலூர்: மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை – இன்று பள்ளிக்கு விடுமுறை

ஆவினங்குடி பள்ளி மாணவியை சக மாணவர்கள் 4பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை, அவருடன் படிக்கும் சக மாணவர்கள் 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று ஆவினன்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் … Read more

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு… தாக்குதல் நடந்தது எப்படி?

ஜப்பான் நாட்டில் வரவிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அந்நாட்டு அரசு செய்தி தொடர்பாளர் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது ஜப்பான் நாட்டில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலுக்கான அரசியல்கட்சி தலைவர்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, வரவிருக்கும் மேற்கு ஜப்பானின் நாராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். Shinzo Abe … Read more

சுயநலத்திற்காக அதிமுகவை கூறு போட நினைக்கிறார்கள்.. தொண்டர்கள் மத்தியில் வேதனையில் பேசிய சசிகலா.!!

விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியில் சசிகலா அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தல் அளித்தனர். அதை எடுத்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  இதையடுத்து, திருச்சிற்றம்பலம் மூன்று முனை சந்திப்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, பல அடக்குமுறைகள் இருந்த போதும் அம்மாவும், நானும் சேர்ந்து கழகத்தை கட்டி காத்த உள்ளோம். அம்மாவிடம் இருந்த என் நட்பு புனிதமானது. அம்மா … Read more

கௌதாரி பறவைகளை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய பொறியாளர்கள் 2 பேர் கைது.!

மாவட்டத்தில் கௌதாரி பறவைகளை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய கட்டிட பொறியாளர்கள் 2 பேரை போலீசார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அரசன்குளம் காட்டுப்பகுதியில் இருவர் பறவைகளை வேட்டையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அவ்வழியாக வந்த காரை போலீசார் சோதனையிட்ட போது உள்ளே 2 துப்பாக்கிகளும், சுட்டுகொல்லப்பட்ட 7 கெளதாரிகளும் இருந்துள்ளன. காரில் இருந்த கட்டிட பொறியாளர்கள் முருகன், அசோக் ஆகியோரை போலீசார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் இருவருக்கும் தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர். Source link

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடநூல், குறிப்பேடு, சீருடை வழங்குவதில் தாமதம் கூடாது: ராமதாஸ்

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடநூல், குறிப்பேடு, சீருடை வழங்குவதில் தாமதம் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளதாவது: ”தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களில் 60% மட்டுமே பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பேடுகள் (நோட்டுப் புத்தகம்), சீருடைகள் ஆகியவை யாருக்கும் இன்னும் வழங்கப்படவில்லை. இது கண்டிக்கத்தக்கது. திட்டமிடலில் ஏற்பட்டத் தவறு தான் இந்தக் குழப்பங்களுக்கு காரணம் … Read more

பக்ரீத் பண்டிகை – செஞ்சி வாரச் சந்தையில் ரூ.6 கோடிக்கு மேல் விற்பனையான ஆடுகள்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வாரச் சந்தையில் 6 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், சேலம், தர்மபுரி, வேலூர், ஆம்பூர் மாவட்டம் மற்றும் புதுவை பெங்களுர் போன்ற மாநிலங்களில் இருந்து இங்கு நடைபெறும் சந்தையில் வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வார்கள். இந்நிலையில், வரும் 10 ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை வருவதை முன்னிட்டு இன்று செஞ்சி வாரச்சந்தைல் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. பெங்களுர் … Read more

ஆல்ரவுண்டராக மிரட்டிய “குங் ஃபூ” பாண்டியா… கேப்டன் ரோகித் புதிய சாதனை!

ENG vs IND 1st T20 Highlights Tamil News: இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதிய முதலாவது டி20 ஆட்டம் சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நேற்றிரவு 10.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். … Read more

தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு.. இன்றைய விலை நிலவரம்.!!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்துள்ளது.. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4672 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 37376-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more

தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து… 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. சென்னை –  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொழுப்பேடு என்ற இடத்தில் அதிவேகமாக சென்ற பேருந்து, இரும்பு கம்பி ஏற்றி சென்றுச் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்து முழுவதுமாக சேதமடைந்த நிலையில், … Read more

தொழுப்பேடு அருகே முன்னால் சென்ற லாரியின் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 5 பேர் பலி

தொழுப்பேடு: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு அருகே அரசுப் பேருந்து ஒன்று முன்னால் சென்ற லாரியின் மீது மோதியதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும், 10 பயணிகள் படுகாயமடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை அரசுப் பேருந்து ஒன்று 50 பயணிகளுடன் சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, இரும்புக் கம்பி ஏற்றிக்கொண்டு முன்னால் சென்ற லாரியின் … Read more