#BigBreaking || சசிகலாவை சந்திக்கிறாரா ஓபிஎஸ்… சற்றுமுன் ஓபிஎஸ் ஆதரவாளர் அதிரடி பேட்டி.!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்து முடிந்துள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றபடி அதிமுகவின் இந்த பொதுக்குழு கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் இடம், பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மனு ஒன்றை அளித்த மனுவை ஏற்றுக்கொண்டு, அடுத்த மாதம் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.  … Read more

அருவியில் பெண்களிடம் தகாத முறையில் நடந்த கொண்ட முன்னாள் ராணுவ வீரர் உட்பட 5 பேர் கைது..!

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் பெண்களிடம் தகாத முறையில் நடந்ததுடன், வனக்காலவர்களை தாக்கிய புகாரில் மூன்று முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் உள்ளிட்ட 5 பேர் அருவியில் குளித்தபோது தவறாக நடந்து கொண்டதாக வனத்துறையினரிடம் பெண்கள் சிலர் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட நபர்களை பிடித்தபோது அவர்கள் வனத்துறையினருடன் கைக்கலப்பில் ஈடுபட்டு தாக்கியதாகவும், கத்தியை பயன்படுத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர்களில் ஒருவர் மதுபோதையில் கீழே விழுந்ததில் தலையில் காயம் … Read more

லஞ்சம் பெறும் காவல்துறையினருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: லஞ்சம் வாங்கும் காவல் துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டுமின்றி, குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பெரியார் நகரில் டாஸ்மாக் மதுபானக் கடை அருகில் பெட்டிக் கடை நடத்தி வந்தவரிடம் வாரந்தோறும் 100 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சிறப்பு உதவி ஆய்வாளர் கே.குமாரதாசுக்கு மூன்றாண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்திவைத்து உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து குமாரதாஸ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியத்திடம் விசாரணைக்கு வந்தது.வழக்கை … Read more

“உதயநிதி, இன்பநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கையில் திமுகவை பார்க்கிறோம்”- சி.வி.சண்முகம்

“உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கையில் திமுக-வில் என்ன நடக்கிறதென நாங்களும் பார்ப்போம்” என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும், வைத்திலிங்கம் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்டலாம். அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் எழுதினால் பொதுக்குழுவை 30 நாட்களுக்குள் கூட்டப்பட … Read more

தைரியமாக கேள்வி கேட்கும் பாக்யா… அதிர்ச்சியில் கோபி – உண்மை தெரிய வருமா?

பாக்கியலட்சுமி சீரியலில் கணவர் கோபி மீது சந்தேகப்படும் பாக்யா அவரை மடக்கி மடக்கி கேள்வி கேட்பதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் சமீப எபிசோடுகள் பெரும் பரபரப்பை ஏறபடுத்தி வருகிறது கோபி பாக்யாவின் கணவர் என்று தெரிந்துகொண்ட ராதிகா கோபியை விட்டு விலகி செல்கிறார். ஆனால் ராதிகாவின் அம்மா கோபிக்கு ஆதரவாக இருக்கிறார். ஆனால் ராதிகா தனது முடிவில் தெளிவாக இருக்கிறார். மறுபுறம் கோபியும் ராதிகாவை … Read more

சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்று வலி மயக்கம்.. 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி புது காலணி அரசு நடுநிலைப் பள்ளியில் சத்துணவு மற்றும் சத்து மாத்திரை சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு வயிற்று வலி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி புது காலணி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சத்து மாத்திரையும் அதன்பிறகு மதியம் சத்துணவு வழங்கப்பட்டுள்ளது. இதனை சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு தலை சுற்றல் வயிற்று வலி மற்றும் மயக்கம் … Read more

திசையன்விளையில் பட்டா மாறுதலுக்கு ரூ.6,000 லஞ்சம் கேட்ட சர்வேயர் கைது

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பட்டா மாறுதலுக்கு ஆறாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட நில அளவையரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். மணலிவிளை பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் தனக்கு சொந்தமான 4 சென்ட் நிலத்திற்கு பட்டா மாறுதல் கோரி திசையன்விளை வி.ஏ.ஓ. அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். இதற்காக அன்பழகன் என்ற சர்வேயர், லஞ்சம் கேட்டதை அடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் மகாலெட்சுமி புகாரளித்தார். இதனை அடுத்து, கேட்ட பணத்தை தருவது போல் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சர்வேயரிடம் … Read more

காரை கிராமத்தில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு ஆய்வாளர்கள் வலியுறுத்தல்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் முதுமக்கள் தாழி உள்ளிட்ட ஈமச்சின்னங்கள் கண்டறியப்பட்ட பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் காரை கிராமத்தில் 26 ஏக்கர் பரப்பளவில், புதிய கற்காலத்தைச் சேர்ந்த தொன்மை வாய்ந்த புதைவிடம் இருப்பதை இந்திய தொல்லியல் துறை கண்டறிந்து, அதைப் பாதுகாக்கப்பட்ட சின்னமாக 26.6.1946 அன்று அறிவித்துள்ளது. மேலும், அந்த இடத்தில் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னம் என … Read more

’பொதுக்குழு என்ற பெயரில் அக்கிரமம்; ஓபிஎஸ்ஸை தாக்க திட்டம் தீட்டி இருந்தனர்’ – புகழேந்தி

நடைபெற்று முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்ஸை தாக்குவதற்கு திட்டம் தீட்டி இருந்ததாகவும் காவல்துறை உதவியால் ஓபிஎஸ் பத்திரமாக வெளியே வந்ததாகவும் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளரும் ஒ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளருமான புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது புகழேந்தி, “23 பொதுக்குழு தீர்மானங்களில் எந்தவித திருத்தமும், வேறு எந்த தீர்மானமும் கொண்டு வரக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 23 தீர்மானமும் நிராகரிக்கப்படுகின்றது என்றால், அதிமுக நிர்வாகிகள் … Read more

மீண்டும் ஒன்று சேர எங்கள் நிபந்தனை இதுதான்: தஞ்சையில் வைத்திலிங்கம் பேட்டி

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். ஒற்றுமையாக இருக்க  வேண்டும். கூட்டு தலைமை வேண்டும் என்பதுதான் எங்கள் அணியின் நிலைப்பாடு என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நேற்று பரபரப்பாக நடைபெற்று முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துடன் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறிய துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் இன்று தஞ்சாவூர் வந்தார். தஞ்சாவூர் எல்லையை வந்தடைந்த … Read more