தொழுப்பேடு பேருந்து விபத்தில் பலியான 6 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்னும் இடத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று (ஜூலை 8) காலை செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் … Read more

விஜிலன்ஸ் ரெய்டில் சிக்கிய மாஜி அமைச்சர் காமராஜ்: 49 இடங்களில் சோதனை

 Former AIADMK minister Kamaraj  Tamil News: கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் அமைச்சர்களாக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், கேபி அன்பழகன் ஆகியோரது வீடுகளில் ஏற்கனவே வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்நிலையில், அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜின் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய 49 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் 2015 முதல் 2021-ம் ஆண்டு வரை உணவுத்துறை அமைச்சராக … Read more

பல்வேறு காலியிடங்கள்.. மெட்ரோ ரயில்வேயில் வேலை வாய்ப்பு..!

மெட்ரோ ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பல்வேறு நிர்வாகிகள் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக டிப்ளமோ மற்றும் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள்  எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : மெட்ரோ ரயில்வே பணியின் பெயர் : பல்வேறு நிர்வாகிகள் கல்வித்தகுதி : டிப்ளமோ மற்றும் பட்டம் பணியிடம் : சென்னை … Read more

தொழுப்பேடு பேருந்து விபத்து: ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் 

சென்னை: தொழுப்பேடு பேருந்து விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு அருகே இன்று காலை அரசுப் பேருந்து ஒன்று முன்னால் சென்ற லாரியின் மீது மோதியதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும், 10 பயணிகள் படுகாயமடைந்தனர். இந்நிலையில், இந்தச் சம்பத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுப்ப பதிவில், “செங்கல்பட்டு … Read more

“திமுகவின் கைக்கூலியாக செயல்படுகிறார் கே.பி.முனுசாமி”- கோவை செல்வராஜ் குற்றச்சாட்டு

“அதிமுகவின் ரகசியங்களை திமுகவினரிடம் கூறி , திமுகவின் கைக்கூலியாக செயல்படுகிறார் கே.பி.முனுசாமி” என கோவை செல்வராஜ் பேட்டியளித்துள்ளார். ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரை சந்தித்த பிறகு, அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, கடந்த வாரம் ஓபிஎஸ் திமுக-வை ஆதரிப்பதாக குற்றம் சாட்டினார். ஆனால் முனுசாமி மகன் … Read more

நித்திகிட்ட என்னவோ இருக்கு… திருமணம் செய்ய ஆசைப்படும் முன்னணி தமிழ் நடிகை!

நித்தியாநந்தாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தமிழ் நடிகை ஒருவர் கூறியுள்ள தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அவரை திருமணம் செய்துகொண்டார் தனது பெயரைக்கூட மாற்ற தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். தொடர்ந்து புகைப்படம், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, வை ராஜா வை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் … Read more

#திருவள்ளூர் || வாலிபரை கத்தியால் வெட்டி தப்பி ஓடிய மர்ம நபர்கள்.! போலீசார் வலைவீச்சு.!

திருவள்ளூர் மாவட்டத்தில் வாலிபரை கத்தியால் வெட்டி தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள காஞ்சிவாயில் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மெதூர் பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.  அப்பொழுது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்கள் மற்றும் ஒரு வாலிபருடன் இரண்டு மர்ம நபர்கள் வழிமறித்து தகராறு செய்துள்ளனர். இதைப் பார்த்த மணிகண்டன், அதனை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த மர்ம … Read more

யாரையும் பழிவாங்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை நடத்தப்படவில்லை – அமைச்சர் ரகுபதி

உரிய புகாரின் அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். யாரையும் பழிவாங்கும் நோக்கில் சோதனை நடத்தப்படவில்லை எனவும் அதிமுகவில் தற்போது நடக்கும் குழப்பத்திற்கும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கும் சம்பந்தமில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். Source link

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: வங்கிகளுக்கு மநீம வலியுறுத்தல்

சென்னை: வாழ்வாதாரத்தை மீட்கப் போராடும் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வங்கிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இன்று மநீம வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”வாழ்க்கையையே சவாலாகக் கொண்டு, வாழ்வாதாரத்தை மீட்கப் போராடும் மாற்றுத் திறனாளிகளின் நீண்டநாள் கோரிக்கையான எளிதில் கடனுதவி, வங்கி, ஏடிஎம் மையங்களில் சாய்தள வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வங்கிகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் கூட்டமைப்பான டிசம்பர் 3 இயக்கம் சார்பில், சென்னை வள்ளுவர் … Read more

மூன்று தலைமுறைகள் – குடும்பத்துடன் 101 வது பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி

ஆரோக்கியமான உணவுகளை அளவோடு சாப்பிட்டதால் மூன்று தலைமுறைகளை கடந்து மூதாட்டி தனது 101 வது பிறந்த நாளை கொண்டாடினார். பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகளை மறந்து தற்போதைய இளைஞர்கள் துரித உணவை உட்கொண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் உயிர் இழக்க கூடிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கோனாபட்டு கிராமத்தைச் சேர்ந்த அலமேலு (101). இவருக்கு 4 மகன்களும் 1 மகளும் ஒன்பது … Read more