தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28% ஆக உயர்வு

சென்னை: நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், “கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 22.02.2021 முதல் ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு 14% அகவிலைப்படி பெற அனுமதிக்கப்பட்டிருந்தது. 1.01.2022 முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14% அகவிலைப்படி உயர்வினை வழங்குமாறு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையினை … Read more

பள்ளி வாகனத்தை மறித்து 'சாவு பயத்தை' காட்டிய காட்டுயானை

கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையிலுள்ள ‘முள்ளூர்’ பகுதியில் பள்ளி வாகனத்தை ஒற்றை காட்டு யானை வழிமறித்து கண்ணாடியை உடைத்தது. பள்ளி வாகனத்தில் குழந்தைகள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கோத்தகிரி முள்ளூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக ஒற்றை காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது நெடுஞ்சாலையில் உலாவரும் இந்த ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்து … Read more

திருச்சியில் இந்தப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்: புதிய ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி

திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த சு.சிவராசு கோவை மாவட்டத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பிரதீப் குமார் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கூறுகையில், கல்வி, விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் கூடுதல் கவனம் செலுத்துவதோடு, திருச்சியில் நீண்ட கால பிரச்சினையாக உள்ள பாதாள சாக்கடை கட்டமைப்பை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் குறை … Read more

தனக்கு தானே கல்லறை கட்டிய மூதாட்டி உயிரிழப்பு.. கன்னியாகுமரி அருகே நிகழ்ந்த சோகம்..!

தனக்கு தானே கல்லறை கட்டிய மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், சூழால் கொல்லன்விளை பகுதியை சேர்ந்தவர் ரோசி (70). இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியே வசித்து வந்துள்ளார். அந்த பகுதியில் கிடைக்கும் வேலைகளையும் அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கும் சென்று வாழ்வை நடத்தி வந்தார். அவரை உறவினர்  விஜயன் என்பவர் அடிக்கடி சந்தித்து பேசிவந்துள்ளார். இந்நிலையில், அவரின் வீட்டில் இருந்து  துர்நாற்றம் வீசியதாக அக்கம்பக்கதினர் விஜயனுக்கு தகவல் தெரிவித்தனர். … Read more

தனியார் ஜவுளிக்கடையில் ஊழியரை திசை திருப்பி புடவைகளை திருடிச்சென்ற கும்பலின் சிசிடிவி காட்சி.!

நாமக்கல் பள்ளிபாளையத்தில் தனியார் ஜவுளிக்கடை ஒன்றில் ஊழியரை திசை திருப்பி 14 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய புடவைகளை திருடிச்சென்ற கும்பலை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். புடவைகளின் எண்ணிக்கை குறைந்திருந்ததையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது அந்த கும்பல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்த பின்னர் பள்ளிபாளையம் போலீசில் கடை உரிமையாளர் புகாரளித்தார். Source link

மதுரை அரசு மருத்துவமனையில் ரூ.6 கோடியில் அமைகிறது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஜெயில் வார்டு அருகே ரூ.6 கோடியில் மருத்துவக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. 4 மாதத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுவிடும் என்று மருத்துவமனை முதல்வர் ரத்தினவேலு கூறியுள்ளார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 3500 உள் நோயாளிகள், 15 ஆயிரம் வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப்பணியாளர் 1000 பேர், பார்வையாளர்கள் 10 ஆயிரம் பேர் … Read more

சென்னை – மதுரை இடையேயான தேஜஸ் ரயிலால் இவ்வளவு நஷ்டமா?

சென்னை – மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில் மூலம் ரயில்வே துறைக்கு எவ்வளவு கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. சென்னை – மதுரை இடையே தேஜஸ் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் திருச்சி, திண்டுக்கல் ஆகிய நிலையங்களில் மட்டுமே நிற்கும் என்பதால் விரைவாக மதுரையை சென்றடைந்து விடுகிறது. அதேபோல, மதுரையில் இருந்து புறப்படும் தேஜஸ் ரயில் 6 மணிநேரத்துக்குள்ளாகவே சென்னையை … Read more

பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு? லேட்டஸ்ட் நிலவரம் என்ன?

Petrol, diesel shortage news in tamil: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் 26-வது நாளாக எந்த மாற்றமும் இல்லாமல் பெட்ரோல்,டீசல் விலை தொடர்கிறது. அதன்படி இன்று (16-ம் தேதி), சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த … Read more

ஈரோடு.! ஓடையில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.!

ஈரோடு மாவட்டத்தில் ஓடையில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது 23). இவர் சிறிய வயதாக இருக்கும்போது அவரது பெற்றோர் இறந்து விட்டதால், அவரது சகோதரியின் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இதையடுத்து சகோதரிக்கு திருமணமாகி குழந்தை இல்லை என்பதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சகோதரி உயிரிழந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்து மனவேதனையில் இருந்த குமார் நேற்று இரவு சூளை … Read more

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல  கீழடுக்கு சுழற்சி காரணமாக, 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், ஜூன் 17ஆம் தேதி நீலகிரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், ஜூன் 18ஆம் தேதி திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை … Read more