தனக்கு தானே கல்லறை கட்டிய மூதாட்டி உயிரிழப்பு.. கன்னியாகுமரி அருகே நிகழ்ந்த சோகம்..!
தனக்கு தானே கல்லறை கட்டிய மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், சூழால் கொல்லன்விளை பகுதியை சேர்ந்தவர் ரோசி (70). இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியே வசித்து வந்துள்ளார். அந்த பகுதியில் கிடைக்கும் வேலைகளையும் அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கும் சென்று வாழ்வை நடத்தி வந்தார். அவரை உறவினர் விஜயன் என்பவர் அடிக்கடி சந்தித்து பேசிவந்துள்ளார். இந்நிலையில், அவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக அக்கம்பக்கதினர் விஜயனுக்கு தகவல் தெரிவித்தனர். … Read more