தண்டவாள விரிசல் | சிவப்புக் கொடியுடன் 200 மீட்டர் ஓடி சென்னை – ராமேசுவரம் ரயிலை நிறுத்திய ஊழியர்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை கண்டறிந்த கீ மேன் 200 மீட்டர் தூரம் ஓடிச்சென்று சிவப்பு கொடியைக் காட்டி, ரயிலை நிறுத்தியதால் சென்னை-ராமேசுவரம் விரைவு ரயில் விபத்திலிருந்து தப்பியது. ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாலாந்தரவை ரயில்நிலையம் அருகே ரயில்வே ஊழியர் (கீ மேன்) வீரப்பெருமாள்(35) தண்டவாளங்களை சரி செய்யும் பணியில் இன்று காலை ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வாலாந்தரவை ரயில் நிலைய நடைமேடையின் மேற்குப்பகுதியில் … Read more