திண்டுக்கல்: JCB, Hitachi வாகனங்களை அசால்ட்டாக இயக்கி ஆச்சர்யமூட்டும் இரண்டரை வயது சிறுவன்
திண்டுக்கல் அருகே JCB, Hitachi வாகனங்களை சர்வ சாதாரணமாக இயக்கி ஆச்சரியப்படுத்துகிறார் பால்வாடி செல்லும் இரண்டரை வயது பாலகன். திண்டுக்கல் அடுத்துள்ளது குட்டத்துப்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தாமஸ். இவரது மனைவி ரோனிகா மேரி. இந்த தம்பதியினருக்கு இரண்டரை வயது மற்றும் ஒன்றரை வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. தாமஸ் ஜேசிபி மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் மற்றும் பழுதுபார்க்கும் தொழில் செய்துவருகிறார். இவரது கம்பெனியும், வீடும் ஒரே இடத்தில் உள்ளது. … Read more