உங்கள் குரல் – தெருவிழா @ ஒடுகத்தூர் | "அம்ருத் திட்டத்தில் ரூ.16.80 கோடியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம்"

ஒடுகத்தூர் பேரூராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.16.80 கோடியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க விரிவான திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் நடைபெற்ற ‘உங்கள் குரல் தெருவிழா’ நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சத்யாவதி பாஸ்கரன் தெரிவித்தார். பொதுமக்கள் தங்கள் வாழும் பகுதியில் நிலவும் பொது பிரச்சினைகள் தொடர்பாக அந்தந்த பகுதிகளின் உள்ளாட்சி பிரதிநிதிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணும் வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் … Read more

நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயிலுக்கு முதல் 'பிரேக்-வுமன்’ நியமணம்!

உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலுக்கு முதல் பிரேக்வுமன் பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகை வரை நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலைரயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 1899 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இம்மலை ரயில் போக்குவரத்து 2005 ஆம் ஆண்டு யுனஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. செங்குத்தான மலை மீது பல்சக்கிரங்கள் பொருத்தப்பட்ட இருப்பு பாதையில் ஊர்ந்து செல்லும் இம்மலை … Read more

IND vs SA: அவேஷ் கான் வெளியே, யார் உள்ளே? இரு அணிகளின் உத்தேச லெவன் இதுதான்!

Live updates of India Vs South Africa, 4th T20 Match in tamil: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. எனவே, தொடரில் தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது டி-20 போட்டி குஜராத் மாநிலம் … Read more

இது எவ்வளவு கொடியது… உடனடியாக அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் – பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்.!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இன்னும் ஓர் உயிர்ப்பலி: அவசர சட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மணலியைச் சேர்ந்த நடராஜ் என்ற வண்ணம் பூசும் தொழிலாளி ஆன்லைன் சூதாட்டத்தில் பெருமளவு பணத்தை இழந்து கடனாளி ஆனதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது.  அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நடராஜின் தற்கொலை ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்ட பிறகு கடந்த … Read more

ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒருவர் பலி; அவசர சட்டம் தேவை: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: வல்லுனர் குழுவின் அறிக்கையை திட்டமிட்டபடி ஒரு வாரத்திற்குள் பெற்று உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “சென்னை மணலியைச் சேர்ந்த நடராஜ் என்ற வண்ணம் பூசும் தொழிலாளி ஆன்லைன் சூதாட்டத்தில் பெருமளவு பணத்தை இழந்து கடனாளி ஆனதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. அவரது … Read more

ஓபிஎஸ்-க்கு 'நோ' – `ஒற்றைத் தலைமையே வருக’- எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர் போஸ்டர்கள்!

திருவண்ணாமலையில் ஓ பன்னீர் செல்வத்தின் பெயரும், படமும் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணியில் ஒரு கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் இருந்து ஆரணிக்கு செல்கின்றார். சேலம் டூ ஆரணிக்கு, திருவண்ணாமலை வழியாக அவர் செல்ல இருக்கிறார். இடையே திருவண்ணாமலை மற்றும் சில இடங்களில் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் ஒரு இடத்தில் வைக்கப்பட்டு இருந்த போஸ்டரில் `ஒற்றை தலைமையே … Read more

ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆடும் கேப்டன் ரோகித்… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!

Rohit Sharma Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது ஓய்வில் இருந்தாலும், கிரிக்கெட் ஆடி மகிழ்ந்து வருகிறார். 33 வயதான அவர் சமீபத்தில் மும்பையில் ஒரு சில பள்ளி சிறுவர்களுடன் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். அது வீடியோவாக பதிவிடப்பட்ட நிலையில், ட்விட்டரில் சன்ஸ்கிருதி யாதவ் என்பவர் பகிர்ந்துள்ளார். அவர் அந்த வீடியோ பதிவில், “ரோகித் சர்மா இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக மும்பை வொர்லியில் கல்லி (ஸ்ட்ரீட்) கிரிக்கெட் விளையாடுகிறார்.” என்று குறிப்பிட்டுள்ளார். … Read more

இன்றைய (17.06.2022) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 1620 ரூபாய் உயர்ந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4755 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 38040-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more

பொதுசுகாதார துறையின் நூற்றாண்டு விழா இலச்சினை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்

சென்னை: பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழா இலச்சினையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியீட்டார். தமிழகத்தில் பொதுசுகாதாரத்துறை 1922ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கர்னல் எஸ்.டி.ரஸ்ஸல் என்பவரை இயக்குநராகக் கொண்டு தொடங்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு வரை நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக வரும் டிசம்பர் மாதத்தில் சர்வதேச பொது சுகாதாரத்துறை மாநாடு சென்னையில் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். சென்னையில் நடைபெற உள்ள இந்த பன்னாட்டு பொது … Read more

`முதலில் போகப் போவது இரட்டை இலை சின்னம்!'- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஜூன் 16-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம்… விட்டுக்கொடுக்கப் போவது பன்னீரா? எடப்பாடியா?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. … Read more