325 காலியிடங்கள்.. பரோடா பேங்கில் வேலைவாய்ப்பு.!!

பரோடா பேங்கில் அதிகாரபூர்வ இணையதளத்தில்  சிறப்பு அதிகாரிகள் (SO)  காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக டிப்ளமோ, பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கன்னியாகுமரி கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : பரோடா பேங்கில் பணியின் பெயர் : சிறப்பு அதிகாரிகள் கல்வித்தகுதி : டிப்ளமோ, பட்டம் பணியிடம் : தமிழ்நாடு தேர்வு … Read more

ராமதாஸ், அன்புமணி மீதான வழக்குகள் ரத்து – உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி மீதான வழக்குகளை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டில் இரவு 10 மணிக்கு மேல் கூட்டம் நடத்தி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ், தற்போதைய பாமக தலைவர் அன்புமணி, முன்னாள் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் மீது மாமல்லபுரம் … Read more

Tamil news today live : இலங்கை ஆர்பாட்டம்- 66 பேர் மருத்துவமனையில் அனுமதி

Go to Live Updates பெட்ரோல் – டீசல் விலை சென்னையில் 49வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இலங்கை ஆர்பாட்டம்- 66 பேர் மருத்துவமனையில் அனுமதி இலங்கையில் நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே வசிக்கும் அதிபர் மாளிக்கைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர்.  இதனால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடினார். இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 3 … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (10.07.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 10/07/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 20/16/14 நவீன் தக்காளி 16 நாட்டு தக்காளி 13/10 உருளை 32/25/23 சின்ன வெங்காயம் 30/26/20 ஊட்டி கேரட் 55/45/40 பெங்களூர் கேரட்  பீன்ஸ் 60/50/40 பீட்ரூட். ஊட்டி 45/40 கர்நாடக பீட்ரூட் 20/18 சவ் சவ் 18/15 முள்ளங்கி 15/14 முட்டை கோஸ் 25/20 வெண்டைக்காய் 25/20 உஜாலா கத்திரிக்காய் 15/12 வரி கத்திரி … Read more

’வருமுன் காப்போம்’ திட்டத்தில் கண்புரை பரிசோதனையும் இனிமேல் சேர்க்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் கண்புரை பரிசோதனை சேர்க்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கண் அறுவை சிகிச்சை தொடர்பான 2 நாள் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று தொடங்கியது. கருத்தரங்கின் தலைமைச் செயலரும், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவக் குழுமத் தலைவருமான அமர் அகர்வால் தலைமை வகித்தார். பொருளாளரும், ராஜன் கண் மருத்துவமனை தலைவருமான மோகன்ராஜன், அறிவியல் குழுத் தலைவர் மஹிபால் எஸ்.சச்தேவ், அகில இந்திய கண் … Read more

கிராம நிர்வாக அலுவலர், உதவியாளரை ஆக்கிரமிப்பாளர்கள் தாக்கும் அதிர்ச்சி வீடியோ!

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோரை, ஆக்கிரமிப்பாளர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கம்பனேரி புதுக்குடி கிராமத்திற்கு உட்பட்ட பன்னீர்குளம் என்ற குளத்தை மேலகடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் (வயது 40) மற்றும் ஆல்பர்ட் (50) என்ற இரண்டு நபர்களும் சேர்ந்து ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் அதிகாரிகள் … Read more

தோப்பூர் டு ஒத்தக்கடை மெட்ரோ ரயில்? மதுரையில் சென்னை அதிகாரிகள் ஆய்வு

Madurai Metro rail project feasibility check by Chennai officials: மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மதுரையில் மெட்ரோ ரயில் சேவை துவக்கப்படும் என தமிழக அரசு கடந்தாண்டு அறிவித்தது. இந்நிலையில் மார்ச் பட்ஜெட் கூட்டத்தில் மதுரை மெட்ரோ ரயில் குறித்த அறிக்கை தயாரிப்பு பணி நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையும் படியுங்கள்: சசிகலாவால் நள்ளிரவில் அலறிய மைக்குகள்; பரபரப்பான காவலர்கள்  … Read more

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை.. விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடந்த ஜூன் 30-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதையடுத்து,  உயர்கல்வியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 அளிக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஜூலை 10ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டது. இந்த வகையில் … Read more

ஓபிஎஸ்ஸிடம் இருந்து விலகியது ஏன்? – முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி விளக்கம்

சென்னை: திமுகவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் செயல்பட்டதால் அவரிடம் இருந்து விலகியதாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் இபிஎஸ் இல்லம் முன்பு செய்தியாளர்களிடம் கே.பி.முனுசாமி நேற்று கூறியதாவது: நான் திமுகவுடன் தொடர்பு வைத்து, பெட்ரோல் பங்க்கை பெற்றிருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் குற்றம்சாட்டி இருந்தார். அந்த பெட்ரோல் பங்க்கை நடத்துவதற்கான உத்தரவு கடந்த 2017-ல் அதிமுக ஆட்சியில் என் மகனுக்கு வழங்கப்பட்டது. கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நான்கரை ஆண்டுகள் இபிஎஸ்ஸுடன் துணை … Read more

மொத்த வாக்கு 289!பதிவானதோ 329! உள்ளாட்சி இடைத்தேர்தலில் கூடுதல் வாக்குகள் பதிவானதாக புகார்

உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரமேல் ஊராட்சி 3 வது வார்டில் கூடுதல் வாக்குகள் பதிவாகி இருப்பதாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட அகரமேல் ஊராட்சியில் 3 வது வார்டு உறுப்பினருக்கான பதவி காலியாக இருந்ததால் நேற்று காலை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, சுயேட்சை என மூன்று பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மொத்தம் 343 வாக்காளர்கள் உள்ள இந்த வார்டில் காலை முதல் விறு, விறுப்பாக வாக்குபதிவு … Read more