ப்ரி பயர் கேமின் user id, password-ஐ சக நண்பர்கள் திருடிக் கொண்டதால் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

ஆன்லைன் விளையாட்டால் ஒருவர் பலி ப்ரீ பயர் என்ற ஆன் லைன் விளையாட்டால் கரூரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை ப்ரி பயர் கேமின் user id, password-ஐ சக நண்பர்கள் திருடிக் கொண்டதால் வாட்ஸ் அப்-பில் ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை கரூர் சிவசக்தி நகரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ப்ரீ பயர் விளையாட்டிற்கு அடிமையாகிய நிலையில் தற்கொலை Source link

சென்னையில் கருணாநிதி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட செலிவியர்கள் கைது

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட செலிவியர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மருத்துவத் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று 2015-ம் ஆண்டில் இருந்து 12,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருவதாகவும், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் செவிலியர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி … Read more

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி: கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழப்பு

அம்பை அருகே கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த பாபநாசம் அருகேயுள்ள வி.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சவுந்தரராஜன் (72), அழகு திருமலை முத்தம்மாள் (62) தம்பதியர். இவர்களது மகன் சுருளிராஜன் என்பவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சவுந்தராஜனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக உறவினர்கள் அவரை அம்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து … Read more

இந்தி எதிர்ப்பு சூத்திரர் சர்ச்சை: டிகேஎஸ். இளங்கோவனை கண்டித்த பா.ஜ.க

Tamil Nadu Tamil News: 37வது நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் கூட்டம் தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையேயான தொடர்பு மொழியாக ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும் அவர், இந்தி ஆங்கிலத்திற்குத் தான் மாற்றே தவிர உள்ளூர் மொழிகளுக்கு அல்ல என்றும் கூறியிருந்தார். மத்திய அமைச்சரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையானது. எதிர்கட்சினர் … Read more

யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து.!!

யூடியூபர் சாட்டை துரைமுருகன் யூடியூபில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து கடுமையான விமர்சனம் செய்தும், அவதூறான கருத்துக்களை பேசிய வீடியோ வெளியிட்டார். இதையடுத்து துரைமுருகன் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். ஜாமின் மனுவை விசாரித்த நீதிமன்றம் இனிமேல் இதுபோன்ற அவதூறுகளை பரப்ப மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டு … Read more

40 வருடங்களுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி… பள்ளி நாட்களை நினைவு கூர்ந்து, புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டை சந்தோச நாடார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், 40 வருடங்களுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது அவர்களுக்கு பதநீர், கருப்பட்டி உள்ளிட்ட உணவு பொருட்களும் 1980 மற்றம் 90 காலக்கட்டத்தில் அப்போதைய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தின்பண்டங்களான புளிப்பு மிட்டாய், தேன் மிட்டாய், பால் ஐஸ், புளிப்பு ஜாம் போன்றவையும் வழங்கப்பட்டன. 40 வருடங்களுக்கு பிறகு தங்களுடன் படித்த சக மாணவ, மாணவிகளை பார்த்த … Read more

சிதம்பரம் நடராஜர் கோயில் | இந்து சமய அறநிலையத்துறை ஆய்வுக்கு தீட்சிதர்கள் மறுப்பு

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிர்வாகத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்தனர். சைவ திருத்தலங்களில் முதன்மை பெற்றது சிதம்பரம் நடராஜர் கோயில். இக்கோயிலிலுள்ள கனகசபையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பொது தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதனைக் கண்டித்து பக்தர்கள் தெய்வத்தமிழ் பேரவை மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. இதையடுத்து தமிழக … Read more

சென்னை: போக்குவரத்து உதவி ஆய்வாளர் தற்கொலை – பணிச்சுமை காரணமா என விசாரணை

ஆவடி அருகே போக்குவரத்து உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் அம்பேத்கர் நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் சுப்ரமணியன் (57). இவர், மணலி போக்குவரத்து காவல் பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சுப்ரமணியன், இன்று வழக்கம்போல் அலுவலகம் செல்ல தயாரானவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து நெடு நேரமாகியும் சுப்ரமணியன் … Read more

ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்ட தமிழக சிற்பங்கள்… காணாமல் போனது எப்போது?

சமீபத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 சிலையில் டெல்லியில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. சிலை ஒப்படைக்கப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, கடவுளை வீட்டிற்கு கொண்டு வருவது நமது பாரம்பரியத்தை பாதுகாத்தல், மேம்படுத்துதல் அரசாங்கத்தின் முன்முயற்சியாகும். சுதந்திரம் பெற்றது முதல் 2013 வரை, வெறும் 13 சிலைகள் மட்டுமே மீட்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், 2014 முதல் தற்போது வரை 228 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மீட்கப்பட்ட சிலைகளின் விவரங்கள் … Read more

அவசர சட்டம் பிறப்பிக்கக் கோரி போராட்டத்தை அறிவித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்.!

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக தமிழ்நாடு மாற்றப்பட்டு வரும் நிலையில்,  அதைத் தடுக்க தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதில் தமிழக அரசால்  செய்யப் படும் ஒவ்வொரு நாள் தாமதமும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் கடந்த 2021-ஆம் ஆண்டில் ஈட்டிய வருமானம் … Read more