பாதாளச் சாக்கடை குழாய் பதிக்கும் பணியின்போது தொழிலாளி உயிரிழந்த விவகாரம்.. 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு.!

மதுரையில் பாதாளச் சாக்கடை குழாய் பதிப்பதற்கு பள்ளம் தோண்டும்போது  மண்சரிவில் சிக்கிய தொழிலாளி, தலை துண்டித்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்த நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுவிளாங்குடியில் நடைபெற்ற பணியின் போது மண் சரிவில் சிக்கிய, சதீஷ் என்பவரை மீட்க பொக்லைன் மூலம் பணிகள் நடைபெற்ற நிலையில், அவரது தலை துண்டிக்கப்பட்டது. இதனிடையே, உயிரிழந்த சதீஷின் குடும்பத்திற்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்ச ரூபாயும், அமைப்பு … Read more

'அந்தக் கரவொலி இப்போதும் என் காதுகளில் ரீங்காரமிடுகின்றன' – 17 வயது சம்பவத்தை நினைவுகூர்ந்த முதல்வர்

சென்னை: நிகழ்ச்சி ஒன்றில், தனது 17 வயதின்போது நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில், சென்னை, குருநானக் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார் தமிழக முதல்வர் ஸ்டாலின். மாணவர்களை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின் தனது கல்லூரி காலத்தில் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார். அதில், “போட்டியில் கலந்து … Read more

இந்தியாவின் செயல்திறனை உலகமே பாராட்டுகிறது: பிரதமர் மோடி பெருமிதம்

கடந்த எட்டு ஆண்டுகளில் பல்வேறு சீர்திருத்தம் செய்யப்பட்டு வணிகம் எளிதாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி,இந்தியாவின் செயல் திறனை பார்த்து உலகமே பாராட்டுகிறது என்று பெருமிதத்துடன் கூறினார். கடந்த ஆண்டு 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 84 பில்லியன் டாலர், அதாவது சுமார் ஆறரை லட்சம் கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசின் சீர்திருத்தங்கள் மூலம் இந்தியா ஒரு வலுவான நாடாக உருவெடுத்துள்ளது என்று பிரதமர் … Read more

விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுப்பு – டெல்லி கோர்ட்

சீனர்களுக்கு விசா வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை இயக்குனரகம் பதிவு செய்த வழக்கில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப. சிதம்பரம் 2011 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சராக இருந்தபோது 263 சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கியது தொடர்பான முறைகேட்டில், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட பலர் மீது அமலாக்கத்துறை சமீபத்தில் பணமோசடி வழக்கு பதிவு செய்தது. … Read more

தன் கழுத்தை தானே அறுத்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடிய இளைஞர்.! கன்னியாகுமரியில் பரபரப்பு.!

கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் சென்னையில் இட்லி மாவு கடை நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த 31ம் தேதி சொந்த ஊருக்கு வந்த நிலையில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அனைவரிடமும் சிடுசிடுப்பாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில், நேற்று இரவு குழித்துறை நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே வந்த அந்த நபர் ஒரு கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு வலிக்கிறது என்று அலறி அடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடியிருக்கிறார். பின்னர் அரசு மருத்துவமனைக்குள் … Read more

திருப்பூரில் குடிபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை.!

திருப்பூரில் குடிபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சந்திராபுரத்தில் உள்ள டாஸ்மாக்கில் செவந்தபாளையத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே பயங்கர தகராறு நடந்துள்ளது. பின்னர் சிறிது நேரம் கழித்து டாஸ்மாக் அருகே சுரேஷ் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு சென்ற போலீசார் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தப்பியோடிய … Read more

மத்திய, மாநில அரசுகளின் சலுகையால் கோவையில் ஓராண்டில் மும்மடங்காக அதிகரித்த மின்சார கார் விற்பனை

கோவை: பெட்ரோல், டீசல் விலையேற்றத் துக்குப்பிறகு மின்சார வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாகனத்தின் மோட்டார் திறன் 250 வாட்டுக்கு அதிகமாகவோ, வேகம் 25 கிலோ மீட்டருக்கு அதிகமாகவோ உள்ள மின்சார வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்டிஓ) பதிவு செய்ய வேண்டும். இந்த திறனுக்கு கீழ் உள்ள மின்சார வாகனங்களை பதிவு செய்ய தேவையில்லை. அதன்படி, கோவை தெற்கு, வடக்கு, மையம், மேற்கு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய 6 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் 2020-21-ம் … Read more

நாளை யுபிஎஸ்சி தேர்வு… தேர்வர்களுக்காக தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அறிவிப்பு

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் காரணமாக ஜூன் 4 மற்றும் 5 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை புறநகர் ரயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் வார நாட்களை விட, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களில், 30 சதவீதம் மின்சார ரயில்கள் குறைத்து இயக்குவது வழக்கமாகும். ஜூன் 4 மற்றும் 5 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனால் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கு செல்லும் தேர்வர்கள் … Read more

மாதத்தில் 2 நாள் முகாம்… திருச்சியை துடைத்து எடுத்த தூய்மைப் பணியாளர்கள்!

க.சண்முகவடிவேல், திருச்சி திருச்சி மாவட்டத்தில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை சிறப்பாக மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் சு.சிவராசு பேசியதாவது: “தமிழக முதல்வர் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை சென்னையில் தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான முக்கிய சுற்றுலாத்தலங்கள், பிரசித்தி பெற்ற கோயில்கள், சந்தைகள், உழவர் சந்தைகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளிலும் … Read more

மதுரை : சதிஷ் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்.! தமிழக  அரசு வெளியிட்ட அறிவிப்பு.!

மதுரையில் மண்சரிவு ஏற்பட்டு உயிரிழந்த தொழிலாளர் சதீஷ் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சமும்,கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் இருந்து ரூ.5 லட்சமும் நிதி வழங்கப்படும் என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  மதுரை மாவட்டம், விளாங்கிடி கிராமத்தில் மாநகராட்சியின் சார்பில் நடைபெற்று வந்த குடிநீர் குழாய் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி சதீஷ் எனும் தொழிலாளி உயிரிழந்தார்.  சதீஷ் உயிரிழந்த தகவலை … Read more