அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்றம்.! பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கிய திமுக உடன்பிறப்புகள்.!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு திருவண்ணாமலையில் சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்து, அம்மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அவரின் அந்த மனுவில், “திருவண்ணாமலை, வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவரால் 1992-ம் ஆண்டு 92.5 அடி நிலம் விற்கப்பட்டது. அந்த நிலத்தின் அருகில் உள்ள 215 சதுர அடி பொது இடத்தை ஆக்கிரமித்து, அங்கு திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி சிலை வைக்க திமுகவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தொடர்ந்து, … Read more

தமிழக ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு.. நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தல்!

சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்டு நிலுவையில் உள்ள சட்ட முன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், முதலமைச்சர், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் வழங்கிட வலியுறுத்தப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தமைக்கு ஆளுநரிடம் முதலமைச்சர் நன்றி தெரிவித்ததாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது. … Read more

தி.மலையில் கருணாநிதி சிலைக்கான இடைக்காலத் தடை தொடர்கிறது; வழக்கு ஜூன் 6-க்கு தள்ளிவைப்பு

சென்னை: திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 6-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வேளச்சேரியைச் சேர்ந்த ஜி.கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருவண்ணாமலை கிரிவல பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கிய ஜீவா கல்வி அறக்கட்டளை, அருகில் உள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து மறைந்த முன்னாள் … Read more

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை வைக்க தடையை நீக்க வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு

திருவண்ணாமலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை வைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையும் மாநில நெடுஞ்சாலையும் இணையும் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்க மாவட்ட திமுக சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இந்த பகுதியில் சிலை வைப்பதால் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பக்தர் கார்த்திக் என்பவர் சிலை வைக்க … Read more

உயிரோடு இருப்போமா? திருச்சி முகாமில் கதறும் ஈழத் தமிழர்கள்

Sri lanka Tamil refugees hunger strike for release request in Trichy: திருச்சி சிறை வளாகத்திலுள்ள அகதிகள் முகாமில் வெளிநாட்டிலிருந்து முறையாக பாஸ்போர்ட் விசா மூலம் இந்தியாவுக்குள் வராமல் நேரடியாக வந்தவர்கள், காலாவதியான பாஸ்போர்ட் உள்ளவர்கள் என 84 இலங்கை தமிழர்கள் உட்பட பல்கேரியா, சூடான், நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 110 பேர் திருச்சி அகதிகள் முகாமில் தமிழக அரசால் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கை அகதிகள் தங்களை விடுவிக்கக் கோரி துாக்கமாத்திரை … Read more

திட்டங்களை சிந்தாமல், சிதறாமல் கொண்டு போய் சேர்க்க வேண்டும் – அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய முதலமைச்சர் முக ஸ்டாலின்.!

சென்னை தலைமைச் செயலகத்தில் ஒவ்வொரு அரசுத்துறை வாரியாக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். இன்று 2-வது நாளாகவும் அரசுத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “நேற்றையதினம் இதேபோன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் 16 துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.  ஆய்வின் இறுதியில், அரசுச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் எவ்வாறு அரசின் திட்டங்களை வடிவமைத்து, செயலாக்கத்திற்குக் கொண்டு வர வேண்டுமென்று விரிவாக எடுத்துக் கூறியிருந்தேன். இன்று ஆய்வுக்கு எடுத்துக் … Read more

மக்களுக்கு பயனளிக்கும் புதிய யுக்திகளை நடைமுறைப்படுத்த வேண்டும் – முதலமைச்சர்

மக்களுக்கு பயனளிக்கும் புதிய யுக்திகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் துறைச் செயலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், குடிநீர் வசதி, ஊரக வீட்டு வசதித் திட்டம், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். நிலம் எடுப்பு மற்றும் அனுமதிகள் வழங்கல் போன்வற்றை துரிதப்படுத்த வேண்டும் என்றும் புதியத் தொழில்கள் தொடங்கப்படுவதை ஊக்குவிக்க … Read more

21 சட்ட மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் தருக: ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்

சென்னை: சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் உள்ள 21 சட்ட மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். சென்னை, கிண்டியில் ஆளுநர் மாளிகை ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார். அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோர் உடன் இருந்தனர். இந்தச் சந்திப்பின்போது, சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் … Read more

நீச்சல் தெரியாமல் தெர்மாகோல் உதவியுடன் குட்டையில் குளித்த கல்லூரி மாணவன் பலி

நீச்சல் தெரியாமல் தெர்மாகோல் மூலம் கல்குவாரியில் குளித்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த தேவசாமிநாதன் (57), என்பவரின் மகன் தினேஷ் தேவா (23). இவர், வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று தனது நண்பர்களுடன் சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் குளிப்பதற்கு வந்துள்ளார். அப்போது நீச்சல் தெரியாத தினேஷ் தேவா தெர்மாகோல் உதவியுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத நிலையில், … Read more

காலையில் வெறும் வயிற்றில் நெல்லி ஜூஸ்… இவ்வளவு நன்மை இருக்கு!

Tamil Health Amla Juice Benefits : உடலில் நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு சத்தான உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம். குறிப்பாக இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களை எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற பயன்களை கொடுக்கிறது. அந்த வகையில் சிறந்த ஊட்டச்சத்து வழங்குவதில் நெல்லிக்காய்க்கு முக்கிய பங்கு உண்டு. வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் உள்ளடங்கியுள்ள நெல்லிக்காய் பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை … Read more