கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை வழக்கு – 813 வங்கிக் கணக்குகள் முடக்கம்

தென் மண்டலத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 494 வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்திலில் ஈடுபட்டால் கடத்தல்காரர்கள் மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என தென்மண்டல ஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களைக் கொண்ட காவல்துறை தென் மண்டல ஐஜியாக அஷ்ரா கார்க் நியமிக்கப்பட்டதிலிருந்து கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பொருட்டு தனிப்படை மற்றும் வாகன சோதனையை தீவிரப்படுத்துதல் போன்ற … Read more

உதயநிதியை அமைச்சர் ஆக்க தீர்மானம்: திருப்புமுனை உருவாக்கும் திருச்சி தி.மு.க

தமிழகத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு கட்சியில் சலுகைகள் இல்லை என்று திமுக அரசு ஒவ்வொரு மேடையிலும கூறி வந்தாலும், மறுப்பக்கம் அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் பிள்ளைகள் கட்சியில் பதவிகள் பெற்று வருவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை குறிப்பிட்டு சொல்லும் வகையில் தற்போது திருச்சியில் நடைபெற்ற திமுக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சொல்லலாம். முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் தலைமையில் திருச்சியில் மாவட்ட … Read more

தர்மபுரி || சட்டவிரோதமாக கருகலைப்பு செய்ய உதவியவர் கைது..!

சிசுவின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு செய்த சம்பவத்தில் செவிலியரின் கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருகலைப்பு நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, நேற்று முன் தினம் சட்டவிரோதமாக கருகலைப்பு செய்வதாக 7 பேரை தருமபுரி காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய செவிலியர் கற்பகம் என்பவரின் கணவர் விஜயகுமார் உள்ளிட்ட சிலரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், விஜயகுமாரை கைது செய்த காவல்துறையினர் அவரிட, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் கைதாகியுள்ள … Read more

மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமனி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மாமல்லபுரம் அடுத்த தேவனேரியில் 100 அடி உயர கம்பத்தில் பாமக கொடியை ஏற்றி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், கல்பாக்கம் அணுமின் நிலைய வேலை வாய்ப்புகளில் சுற்றுப்புற கிராம மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார். Source link

மதுரை மாநகராட்சி பணியாளர்கள் 3,000 பேர் வேலைநிறுத்தம்: தெருக்களில் குவிந்த குப்பைகள்

மதுரை: மதுரை மாநகராட்சியில் 3,000 தூய்மைப் பணியாளர்கள், பொறியியல் பணியாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கியதால் சாலைகள், தெருக்களில் குப்பைகள் அள்ளப்படாமல் மலைபோல் குவிந்திருந்தன. மதுரை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு மற்றும் பொறியியல் பிரிவில் 1,900 பணியாளர்கள், 1,900 தினக்கூலி மற்றும் ஒப்பந்த பணியாளர்கள், 2,200 அவுட் சோர்ஸிங் பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த பல ஆண்டாக மாநகராட்சி நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகமும் அவர்களிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை … Read more

ஊட்டியில் கொட்டித்தீர்த்த மழை – இருப்பிடங்களில் முடங்கிய சுற்றுலாப்பயணிகள்

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற இடங்களில் பலத்த மழை பெய்ததால் குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம்  உதகை, குன்னூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் இன்று காலை சற்று அதிக வெப்பநிலைக் காணப்பட்டது. இந்நிலையில் மதியம் முதல் உதகை  பேருந்து நிலையம், பைக்காரா படகு இல்லம், குன்னூரில் டால்பினோஸ், லேம்ஸ்ராக், பேருந்து நிலையம் உள்ளிட்டப் பகுதிகளில் பலத்த  மழைப் பெய்தது. தொடர்ந்து மாலை நேரத்தில் … Read more

வரலாற்றில் முதல்முறை… திருச்சி மாநகராட்சி ஆபீஸில் மக்கள் குறை கேட்ட முதல்வர்!

நடப்பாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் ஆகியவற்றை தூர் வார ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை மே மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்கிடையே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணை பாதுகாப்பு கருதி கடந்த 24-ம் தேதி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் திறந்துவிட்டார். இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் எந்த அளவுக்கு … Read more

தமிழக பிளஸ் 2 தேர்வில் வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்.!

தமிழக பிளஸ் டூ தேர்வில் வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்நிலையில் வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பகுதி 1-ல் கேள்வி எண் 9 அல்லது கேள்வி எண் 5 எழுதியவர்களுக்கு … Read more

இறந்தவர் உடலை டோலி கட்டித் தூக்கிச் சென்ற கிராம மக்கள்.. அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் போதிய சாலை வசதி இல்லாத மலை கிராமத்தில், இறந்தவர் உடலை டோலி கட்டி தூக்கிச் சென்ற விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நெக்கனா மலைப்பகுதியில், அண்மையில் இறந்தவர் ஒருவரின் உடலை மக்கள் 7 கிலோமீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கி சென்று அடக்கம் செய்ததாக பத்ரிக்கைகளில் செய்தி வெளியானது. இது குறித்து தாமாக முன்வந்து விசாரித்த மனித உரிமை ஆணையம், ஆறு … Read more