80 வயதிலும் கம்பு ஊன்றிச் சென்று பனையேறும் தொழிலாளி.. முதியோர் உதவித்தொகை வழங்கும்படி அரசுக்குக் கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கடாட்சபுரத்தில் 80 வயதிலும் கம்பு ஊன்றிச் சென்று பனை ஏறும் தொழிலாளி முதியோர் உதவித்தொகை வழங்கும்படி அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். மனைவி, மகன்கள் முன்னரே இறந்துவிட்ட நிலையில் மகளின் ஆதரவில் பனையேறிப் பிழைப்பு நடத்தும் பனைத்தொழிலாளி சாலமோன், பனையேற்றுத் தொழில் இல்லாக் காலங்களில் பிழைப்பு நடத்துவது சிரமமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். Source link