பைக் திருட்டில் ஈடுபட்ட நபருக்கு, தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..!

வேலூர் காட்பாடி அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். பெருமாள்குப்பம் பகுதியில் விவசாய கூலித்தொழிலாளி கோவிந்தராஜ் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கின் சைடு லாக்கை உடைத்த மர்மநபர்கள் 3 பேர் அதை எடுத்துச்செல்ல முயன்றுள்ளனர். அதை பார்த்த கோவிந்தராஜ் கூச்சலிடவே, தப்பியோடிய மூவரையும்  ஊர்ப் பொதுமக்கள் துரத்திச்சென்றனர். ஒருவன் மட்டுமே பிடிபட்ட நிலையில் அவனை நையப்புடைத்த அவர்கள் மேல்பாடி போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தனர். தப்பியோடிய … Read more

இலங்கை தமிழர்களுக்கான உதவிகள்: மத்திய அமைச்சருடன் ஆளுநர் தமிழிசை ஆலோசனை

புதுச்சேரி: இலங்கை தமிழர்களுக்கான உதவிகள் குறித்து மத்திய அமைச்சருடன் ஆளுநர் தமிழிசை ஆலோசனை நடத்தினார். மத்திய வெளியுறவுத்துறை மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்துவருகிறார். இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கான உதவிகள் குறித்து மத்திய அமைச்சருடன் ஆளுநர் தமிழிசை ஆலோசனை நடத்தினார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,” புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அரசாங்க திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான பல்வேறு ஆலோசனை … Read more

‘நேரு விளையாட்டு அரங்கில் பயிற்சிபெற அனுமதிக்கவில்லை’: மூத்த தளகட வீரர் புகார்

சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சி பெற, சென்னையில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் அனுமதிக்கவில்லை என திண்டுக்கல்லை சேர்ந்த 79 வயதான வீரர் புகார் தெரிவித்துள்ளார். வருகிற 29 ஆம் தேதி பின்லாந்தில் நடைபெற உள்ள உலக அளவிலான மாஸ்டர் தடகள போட்டியில் 195 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியா சார்பில் 75 முதல் 80 வயதோருக்கான போல்வால்ட் போட்டியில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 79 வயதான சுப்பிரமணி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். … Read more

இன்ஸ்டாகிராம் ரீல்ஸை டவுன்லோடு செய்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ்

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்து மகிழ்ந்திட தனி கூட்டமே உள்ளது. பலரும், ஜாலி ரீல்ஸ்களின் லிங்க்களை நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஷெர் செய்வது வழக்கம். அதே சமயம், அவற்றில் மிகவும் பிடித்தமான வீடியோவை மொபைலில் சேமித்து வைக்கலாம் என யோசித்து, டவுன்லோடு செய்ய முடிவு செய்வோம். ஆண்ட்ராய்டு பொறுத்தவரை, இன்ஸ்டாகிராம் வீடியோஸ் டவுன்லோடு செய்திட பல செயலிகள் உள்ளன. அதில் நீங்கள் இன்ஸ்டா கணக்கை லாகின் செய்து, வீடியோவை டவுன்லோடு செய்யலாம். இது மூன்றாம் தரப்பு செயலி என்பதாலும், லாகின் … Read more

நாடக காதலனிடம் சிக்கிய பள்ளி சிறுமி கர்ப்பம்.! வழக்கு., சிறை., அதிகாரிகளின் விசாரணை.!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 14 வயது சிறுமி ஒருவருக்கு கருகளைப்பு செய்யப்பட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியது. இதுகுறித்து அரசு அதிகாரிகள் விசாரணை செய்தபோது, அந்த தகவல் உண்மைக்கு மாறானது என்பது தெரியவந்தது. மேலும் அந்த சிறுமி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றதாகவும், அவரை ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்து ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அந்த 14 வயது சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது  குறித்து அதிகாரிகள் … Read more

போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓட முயன்றபோது வாகனம் மோதி உயிரிழந்த கஞ்சா வியாபாரி.!

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே கஞ்சா வியாபாரியை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்போது தப்பிக்க முயன்றதில் எதிர்பாராத விதமாக மற்றொரு வாகனம் மோதி உயிரிழந்தார். தேனியை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் வேடசந்தூர் அருகே தங்கியிருந்து நூற்பாலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்ததையடத்து அவரை போலீசார் கையும் களவுமாக கைது செய்து அழைத்துச் சென்றபோது, தப்பிக்க முயன்று விபத்தில் சிக்கினார்.           Source link

காயிதே மில்லத் பிறந்தநாள்: முதல்வர் மரியாதை

சென்னை: காயிதே மில்லத் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரின் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 127-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரின் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், இது குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்” இந்தித் திணிப்பு எதிர்ப்பு – தமிழ் இந்தியாவின் ஆட்சி மொழி – மத நல்லிணக்கம் – சிறுபான்மை மக்களின் … Read more

குடும்ப பிரச்னை: தாய், மகள் எடுத்த விபரீத முடிவு – கும்பகோணத்தில் சோகம்

திருநாகேஸ்வரம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அன்பழகன் (58). பர்னிச்சர் வியாபாரம் செய்து வரும் இவருக்கு ராணி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், அன்பழகனுக்கும் ராணிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ராணி அவரது தாயார் மீனாட்சி (65) ஆகிய இருவரும் மொட்டை மாடியில் தூக்கிலிட்டு … Read more

டெலிட் செய்த மெசேஜை மீண்டும் பார்க்க முடியும்… வாட்ஸ்அப் அசத்தல் அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் உள்ள டெலிட் மெசேஜ் ஆப்ஷன் பயனர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. ஆனால், பயனர்கள் ‘Delete for everyone’ஆப்ஷன் கிளிக் செய்வதற்கு பதிலாக ‘Delete for me’ கொடுத்துவிட்டால், அதனை மீட்டெடுக்க முடியாது. இதனால், முக்கியமான மெசேஜ் அல்லது போட்டோவை பயனர்கள் மிஸ் செய்ய நேர்ந்தது. இந்த புகாரை நீண்டு நாள்களாக ஆராய்ந்து வந்த வாட்ஸ்அப், அதற்கான தீர்வை கொண்டு வந்துள்ளது. தவறுதலாக டெலிட் செய்யப்பட்ட மெசேஜை உடனடியாக மீட்டெடுக்க undo பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது. மெசேஜை … Read more

ரூ.1000 மாத ஊக்கத்தொகை விவகாரம் – தமிழக அரசை வலியுறுத்தும் மருத்துவர் இராமதாஸ்.!

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு உடனடியாக ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என்று,  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வலியுறுத்தல் இதுகுறித்த இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் கற்பித்தல் தன்னார்வலர்களாக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கானோருக்கு கடந்த 4 மாதங்களாக ரூ.1000 மாத ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   இந்தக் குற்றச்சாட்டை இல்லம் தேடி கல்வித் திட்ட அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு ஊதியம் … Read more