அடிக்கும் வெயிலுக்கு இதமான வெண்டைக்காய் மோர்க்குழம்பு ரெசிபி!

மோரில் வைட்டமின் B12, கால்சியம், ரிபோப்ளேவின் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் சூட்டை தணிக்கும். அதேபோல, வெண்டைக்காயில், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி-6, வைட்டமின் பி9 என ஏராளமான சத்துகள் உள்ளன. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. இப்படி ஆரோக்கிய … Read more

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஊட்டி பயணம்.!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஊட்டி செல்கிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து காலையில் விமானம் மூலம் புறப்படும் அவர், மதியம் கோவை விமான நிலையத்திற்கு சென்றடைகிறார்.  அதன் பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையம், கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக கார் மூலம் ஊட்டிக்கு மாலை 5.30 மணிக்கு செல்கிறார். அதன்பிறகு ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார். மேலும், வருகிற 9-ந்தேதி வரை ஊட்டியில் ஆளுநர் இருக்கிறார்.  ஆனால் … Read more

படிச்சுட்டுதான், வேலைக்கு வந்துருக்கோம்.. மரியாதை இல்லாமல் அடிக்கிறார்கள்..!

கோவையில் ஸ்விக்கி நிறுவன ஊழியரை போக்குவரத்து காவலர் தாக்கும் வீடியோ காட்சி வெளியான நிலையில், அந்த காவலரை கைது செய்தும் பணி இடை நீக்கம் செய்தும் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.  கோவை மாவட்டம் நீலாம்பூரை சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரியான மோகன சுந்தரம் என்பவர் ஸ்விக்கியில் உணவு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.இவர் நேற்று, தனது இருசக்கர வானத்தில் சென்றபோது, போக்குவரத்து காவலரான சதீஷ் என்பவர், பளார் என கன்னத்தில் அறைந்ததுடன், வாகன சாவியையும் கைப்பற்றினார். இந்த … Read more

13 மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் (பொறுப்பு) பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் 5, 6-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் … Read more

வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட தமிழக கோயில்களின் சிலைகள் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை ஒப்படைப்பு.!

வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட தமிழக கோயில்களின் 10 ஐம்பொன் சிலைகள், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை ஒப்படைக்கப்பட உள்ளன. இதற்காக சிலைகள் அனைத்தும் நேற்றிரவு கும்பகோணம் சிலை திருட்டு தடுப்பு காவல் துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. புன்னைநல்லூர் கைலாசநாதர் கோவில் நடராஜர் சிலை, ஆழ்வார்குறிச்சி நரசிங்க நாதர் கோவில் கங்காள மூர்த்தி சிலை, நந்திகேஸ்வரர் சிலை, சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் விஷ்ணு சிலை உள்ளிட்டவை பல்வேறு காலகட்டங்களில் களவாடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தி … Read more

சென்னை ஐஐடி உதவிப்பேராசிரியர் பணி நியமனத்துக்கான தேர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு

சென்னை: சென்னை ஐஐடி உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கான தேர்வில், இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட 23 நகரங்களில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயில்கின்றனர். அவற்றில் 6,511 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே, ஐஐடி-களில் சுமார் 40 சதவீதம் (4,370) ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் … Read more

கார் மீது கண்டெயினர் லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு.. தப்பியோடிய லாரி ஓட்டுநர் கைது.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!

புதுச்சேரியில் கார் மீது கண்டெயினர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தது குறித்து சிசிடிவி கேமரா காட்சியின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முத்துக்குமாரசாமி என்பவர் தனது காரில் ரெட்டியார்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்திசையில் வேகமாக வந்த கண்டெயினர் லாரி, சாலை நடுத்தடுப்பை உடைத்து அந்த கார் மீதும் அதற்கு முன் சென்ற பைக் மீதும் மோதியது. இதில், காரில் இருந்த முத்துக்குமாரசாமி, அவரது ஓட்டுநர் ஆகியோர் உயிரிழந்தனர். போலீசார் நடத்திய … Read more

போதைப் பொருள் விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் – கமல்ஹாசன் கருத்து

சென்னை: போதைப் பொருள் விவகாரம் உலகளாவிய பிரச்சினை. அதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த 3-ம் தேதி வெளியானது. சென்னை சத்யம் திரையரங்கில் இத்திரைப்படத்தை கமல்ஹாசன் தனது ரசிகர்களுடன் அமர்ந்து ரசித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முதன்முதலில் ‘மரோசரித்ரா’ திரைப்படத்தை ஆந்திராவில் வெகுவாக பாராட்டினார்கள். அதேபோல, ‘சகலகலா வல்லவன்’ திரைப்படத்தை பெரிதும் எதிர்பார்த்தார்கள். வெளிநாடுகளில் 2 ஆயிரம் … Read more

பெற்ற மகள்கள் காதல் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரம்.. மதுபோதையில் மனைவியை அடித்து கொன்ற கணவன்!

நாகப்பட்டினம் அருகே, இரு மகள்கள் காதல் திருமணம் செய்துகொள்ள மனைவியே காரணம் என கூறி, மதுபோதையில் அவரை அடித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். நாகூர் அடுத்த கடம்பங்குடியை சேர்ந்தவர் சிங்காரவேல். இவருக்கு 4 மகள்கள் உள்ள நிலையில், இருவர் பெற்றொர் சம்மதத்துடனும், இருவர் காதல் திருமணமும் செய்துகொண்டுள்ளனர். இந்த நிலையில் வழக்கம்போல நேற்று இரவும் மது போதையில் வந்த சிங்காரவேலு மனைவி முத்துலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இரு மகள்கள் ஓடிப்போக நீதான் காரணம் … Read more