சென்னையில், பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கை ஹேக் செய்த கேரள இளைஞர்; சதி வேலையா? என போலீசார் விசாரணை

BSNL network hacked by Kerala youth in Chennai: சென்னையில், பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கை ஹேக் செய்து தனியாக டெலிபோன் எக்ஸ்சென்ஞ் நடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சென்னையில் கடந்த 15 நாட்களில் 72 லேண்ட்லைன் இணைப்புகளில் இருந்து சுமார் 10,000 – 15,000 அழைப்புகள் என அதிகப்படியான அழைப்புகள் செய்யப்பட்டுள்ளதை பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் ஆய்வு … Read more

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி.. பச்சிளம் குழந்தையை கொன்ற கணவன்.. ராணிப்பேட்டை அருகே நடந்த கொடூரம்..!

பிறந்து 40 நாட்களே ஆன குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் தோல்ஷாப் பகுதியை சேர்ந்த மனோ. இவருக்கு திருமணமாகி அம்சநந்தினி என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவர் நடு இரவில் தூங்கி கொண்டிருந்த போது குழந்தையை காணாததால் அதிர்ச்சியடைந்தனர். அக்கம்பக்கதில் குழந்தையை தேடும் போது வீட்டின் குளியலறையில் 20 லிட்டர் பெயிண்ட் பக்கெட்டில் உள்ள நீரில் குழந்தை தலைகீழாக இருப்பது தெரியவந்தது. … Read more

ஊராட்சி அலுவலக கழிவறையில் ரகசிய கேமரா பொறுத்திய ஊழியர் பணிநீக்கம்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலக கழிவறையில் ரகசிய கேமரா பொறுத்தியதாக கூறப்படும் தற்காலிக ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார். சாமல்பட்டியை சேர்ந்த சுதாகர் என்ற அந்த நபர் 4 ஆண்டுகளுக்கு மேலாக சத்துணவு பிரிவில் டேட்டா எண்டிரி ஆப்பரேட்டராக பணியாற்றி வந்துள்ளார். சுமார் 20 நாட்களுக்கு முன் அவரது செல்போனை உறவினர் ஒருவர் ஆராய்ந்த போது ரகசிய கேமரா மூலம் எடுக்கப்பட்ட ஆபாச காணொளிகள் இருந்துள்ளன. அதிர்ச்சி அடைந்த அந்த நபர், சுதாகரின் செல்போனை சம்பந்தப்பட்ட அலுவலக … Read more

2 நாளில் ரூ.8.35 லட்சம் வசூல் : சென்னை மலர் கண்காட்சி முதல்வர் பார்வையிட்டார் 

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாட்டு செய்யப்பட்டுள்ள முதலாவது சென்னை மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி கடந்த ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் மலர் கண்காட்சிக்கு அரசு ஏற்பாடு செய்தது. கலைவாணர் அரங்கில் 3ம் தேதி தொடங்கிய மலர் கண்காட்சி … Read more

கர்ப்பிணி பெண்களின் ஊட்டச்சத்து மாவில் முறைகேடு? அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு ராதாகிருஷ்ண விளக்கம்

கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், சுகாதாரத்துறை டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து திமுக அரசின் மீது விமர்சனங்களை வைத்து வருகிறார். திமுக அரசில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது என்று குற்றம்சாட்டி வருகிறார். அந்த வகையில், அண்மையில், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவில் முறைகேடு நடந்துள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு … Read more

சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் – தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்.! 

குடி(சாதி)வாரிக் கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக நிலைபெறச்செய்ய வேண்டும். இத்தோடு, மொழிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த முன்வர வேண்டும் என்று, தமிழக அரசுக்கு  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பீகாரில் குடி(சாதி)வாரி கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சரியான நேரத்தில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்நடவடிக்கையை முன்னெடுத்த அம்மாநில அரசிற்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன். ஆண்டாண்டு … Read more

கழிவறையில் பிறந்து 40 நாட்களேயான ஆண் குழந்தையின் சடலம்-பெற்றோர், பாட்டியிடம் தீவிர விசாரணை

அரக்கோணம் அருகே பிறந்து 40 நாட்களேயான ஆண் குழந்தை நள்ளிரவில் கழிவறை பக்கெட் தண்ணிரில் தலைகீழாக மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெற்றோர், பாட்டியிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். காதலித்து திருமணம் செய்துக் கொண்ட மனோ – அம்சா நந்தினி தம்பதிக்கு கடந்த 40 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. நேற்றிரவு தாயின் அருகில் படுத்துறங்கிய குழந்தை நள்ளிரவில் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. உறவினர்கள் வீடு முழுவதும் தேடிய நிலையில், கழிவறையில் இருந்த பக்கெட்டில் … Read more

இந்து தமிழ் திசை செய்தி எதிரொலி | செக் போஸ்ட்டுகள் அகற்றம்; நடவடிக்கை தொடரும்: சென்னை மாநகராட்சி

சென்னை: இந்து தமிழ் திசை செய்தி எதிரொலியாக சென்னையில் ஒரு சில சாலைகளின் நுழைவு வாயிலில் குடியிருப்புவாசிகள் அமைத்த செக் போஸ்ட்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர். மேலும் இது போன்ற செக் போஸ்ட் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. பேருந்து சாலைகள், உட்புறச் சாலைகள் என்று பிரிக்கப்பட்டு சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் யார் வேண்டுமானாலும் … Read more

அறிவுப்பூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன், ஆனால்… அண்ணாமலையை கிண்டல் செய்த அமைச்சர் மா.சு

தமிழக அரசு கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கும் ஊட்டச்சத்து மாவு டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்த நிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன், “அண்ணாமலை அறிவுபூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன், ஆனால், ஆதாரம் இல்லாமல் பேசுகிறார்” என்று கிண்டல் செய்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசில், மின்சாரத் துறை உள்ளிட்ட துறைகளில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டி வந்தார். மேலும், திமுக அரசில் நடந்த ஊழல்களின் பட்டியலை வெளியிடுவதாக … Read more

#BigBreaking || தமிழக மக்களுக்கு சற்றுமுன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! 

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த ஏ.குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த 4 சிறுமிகள் உட்பட 7 பேர் கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்று, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சிறுமிகள் உட்பட 7 பேரும் நீரில் மூழ்கிதாகவும், மயங்கிய நிலையில் அவர்களை மீட்ட ஊர் பொதுமக்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, இந்த துயர … Read more