126 ஆலிவ் ரிட்லி வகை ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.. கடற்கரைக்கு வந்தவர்கள் ஆமைக்குஞ்சுகளை கண்டு ரசித்தனர்

கன்னியாகுமரி மாவட்டம் துவாரகாபதி கடற்கரையில் உள்ள ஆமைக்குஞ்சு பொரிப்பகத்தில் இருந்து ஏராளமான ஆலிவ் ரிட்லி வகை ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. கடந்த 3 மாதத்திற்கு மேலாக கடற்கரை பகுதியில் ஆமைகள் இட்டு சென்ற முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து  ஆமைக்குஞ்சு பொரிப்பகத்தில், கடற்கரை மணலுக்கடியில் புதைத்து வைத்து, பாதுகாத்து வந்தனர். 45 நாட்களுக்கு மேலான நிலையில் முட்டைகளில் இருந்து 126 ஆமைக்குஞ்சுகள் வெளிவந்திருப்பதையடுத்து அவற்றை கடலில் விட்டனர்.  Source link

சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் இலகுரக வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் இலகுரக வாகனங்களுக்கு அனுமதியளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் பகுதியில் அதிவேகமாக செல்லும் வாகனங்களினால் வனவிலங்குகள் விபத்தில் சிக்கி இறக்க நேரிடுவதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக அப்பகுதியில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கடந்த … Read more

மதுரை இந்து சமய அறநிலையத்துறையில் வேலை; 8-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

Madurai HRCE JC and AC office recruitment 2022 apply soon: தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையில், மதுரை இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்களில் காலியாக அலுவலக உதவியாளர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். அலுவலக உதவியாளர் (Office Assistant) … Read more

இரட்டை இலை சின்ன வழக்கின் முக்கிய சாட்சி தூக்கிட்டு தற்கொலை.!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கி இருந்தது. அப்போது நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகர் மூலம், தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவருக்குக் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் எழுந்தது. இது குறித்து டெல்லி காவல்துறை பதிவு செய்த வழக்கில், டிடிவி தினகரன், சுகேஷ்  சந்திரசேகர் கைது செய்யப்பட்டனர். இதில், டிடிவி தினகரன் அறுபத்தி ஒன்பது நாட்கள் திகார் … Read more

எக்ஸ்.இ வகைத் தொற்று இந்தியாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

ஒமைக்ரானின் புதிய வகை துணை திரிபான  வகைத் தொற்று இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒமைக்ரானை விட இது வேகமாக பரவக்கூடியது என்றாலும் இதுவரை லண்டனில் 600 நபர்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார். தமிழ்நாட்டில் இதுவரை டெல்டா, ஒமைக்ரானை தவிர புதிய எக்ஸ்.இ வைரஸ்  பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று  கூறினார். விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் … Read more

ரஷிய உறவில் ராஜதந்திரக் கயிற்றுப் பாலமாக இந்தியா: மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் கருத்து

புதுடெல்லி: ரஷ்யா உடனான உறவில் இந்தியா ராஜதந்திரக் கயிற்றுப் பாலமாக உள்ளதாக திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். இதை அவர் மக்களவையில் நடைபெற்ற உக்ரைன் மீதான விவாதத்தில் பேசும்போது தெரிவித்தார். மக்களவையில் இன்று உக்ரைன் நாட்டின் நிலவரம் தொடர்பாக விதி எண் 193-ன் கீழ் நடைபெற்ற விவாதத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. பேசியது: “உக்ரைனில் இருந்து வரும் படங்கள் நம்மை உலுக்குகின்றன. இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போரில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கட்டிடங்கள் … Read more

கால்நடை பராமரிப்பு உதவியாளர் தேர்வு – 22 பணியிடங்களுக்கு 5 ஆயிரம் பேர் விண்ணப்பம்

7 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் தேர்வு… 10 ம் வகுப்பு தகுதிக்கான 22 காலி பணியிடங்களுக்கு குவிந்த 5 ஆயிரம் பேர்… குறைந்த கல்வி தகுதிக்கான பணிக்கு பட்டப்படிப்பு முடித்தவர்களும் கூட போட்டிபோட வேலையின்மையே காரணம் என வருத்தம் தெரிவிக்கும் மக்கள் – இதுகுறித்து பார்க்கலாம். தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்தல் நேற்று 06.04.2022 முதல் வரும் 11.04.2022 முதல் மாவட்டம் தோறும் உள்ள … Read more

சர்வதேச விண்வெளி மையத்தில் மஞ்சள் நிற உடையில் ரஷ்ய வீரர்கள்: காரணம் என்ன?

சர்வதேச விண்வெளி மையத்துக்கு கடந்த மாதம் சென்ற ரஷ்ய வீரர்கள் 3 பேர் நீல நிறம் கலந்த மஞ்சள் நிற உடையை அணிந்திருந்தது பேசு பொருளாக மாறியது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போர் புரிந்து வரும் நிலையில் இந்த 3 ரஷ்ய வீரர்களும் விண்வெளி மையத்துக்குச் சென்றனர். அப்போது அவர்கள் மஞ்சள் நிறத்தில் ஆங்காங்கே நீலம் கலந்து உடை அணிந்திருந்தனர்.இது ஏன் பேசு பொருளாக மாறியது என்று நீங்கள் நினைக்கலாம். காரணம் … Read more

என்எல்சி || மண்ணின் மைந்தர்களுக்கு பணியாணை வழங்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்.!

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களுக்கு பணியாணை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்து நீண்ட காலமாகப் பணியமர்த்தப்படாமல் காத்திருக்கும் தமிழக இளைஞர்களுக்கு பணியாணை வழங்காமல் இழுத்தடிக்கும் நெய்வேலி நிர்வாகத்தின் செயல் வன்மையான கண்டத்திற்குரியது.  உடனடியாக பணியானை வழங்க வேண்டுமென்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து … Read more

நடிகர் விஜய் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னையில் திருமண நிகழ்ச்சியில் சந்தித்த போது நடிகர் விஜய்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கை கொடுத்துக் கொண்ட நலம் விசாரித்தார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் கல்பாத்தி அகோரம் மகள் ஜஸ்வர்யா – பிரபல தொழில் அதிபரின் மகனுமான ராகுல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது மணமக்களை வாழ்த்த நடிகர் விஜய் மேடை ஏறினார். அவரை கண்டதும், முதலமைச்சர் … Read more