நேட்டோ அமைப்பில் இணைகிறது பின்லாந்து | Finland joins NATO

பிரசெல்ஸ்: ‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் ராணுவ அமைப்பில், 31-வது உறுப்பினராக பின்லாந்து நாடு இன்று இணைகிறது. உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில், அசுர பலத்துடன் அமெரிக்கா உள்ளது. இந்த கூட்டமைப்பில் பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி உட்பட 30 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்நிலையில், ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்துள்ள பின்லாந்து நாடு, இந்தகூட்டமைப்பின் 31வது உறுப்பினராக இன்று இணைகிறது. இது குறித்து நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் … Read more

சீனா அனுப்பிய உளவு பலூன்… ராணுவ தகவல்களை சேகரித்ததா… அமெரிக்காவில் பரபரப்பு!

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா வான்பரப்பில் மர்மமான பலூன் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இந்நிலையில், அமெரிக்க வான்வெளியில் பறந்த சீன பலூன் பல முக்கிய ராணுவ தளங்களில் இருந்து உளவுத்துறையை சேகரித்து உடனடியாக பெய்ஜிங்கிற்கு அனுப்பியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திங்கள்கிழமை இந்த அதிர்ச்சித் தகவலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. ஜனவரி மாத இறுதியில் அமெரிக்க வான்வெளியில் மூன்று பேருந்துகளின் அளவிலான சீன உளவு பலூன் கண்டுபிடிக்கப்பட்டது.  அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் இது குறித்து … Read more

இன்று பூமியை நெருங்கும் சிறுகோள்களால் மனிதர்களுக்கு ஆபத்தா?

நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன்வின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம், வரும் நாட்களில் பூமியானது சிறுகோள்களுடன் ஒப்பீட்டளவில் சில நெருக்கமான சந்திப்புகளைக் கொண்டிருக்கும் என்று குறிப்பிட்டது. பூமியை நெருங்கும் விண்கற்கள், ஒன்றுடன் ஒன்று மோதுவதால், மனித உயிருக்கு பெரும் பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ளது. சமீபத்தில், தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷனின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம், பூமிக்கு மிக அருகில் சிறுகோள்கள் வரும் என்றும், ஆதனால் பூமிக்கு ஏதேனும் ஆபத்து இருக்கிறதா என்பதை துல்லியமாக கூற … Read more

பெண் கொண்டுவந்த பரிசுப்பொருளில் வெடிகுண்டு: போர் ஆதரவு சமூகவலைதள பிரபலம் உயிரிழப்பு

மாஸ்கோ, உக்ரைன் – ரஷியா இடையே இன்று 405வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போருக்கு ரஷியாவில் ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வருகிறது. இந்நிலையில், ரஷியாவின் ஜெயின் பீட்டர்ஸ்பர்க் நகர்ல் உள்ள உணவகத்தில் நேற்று குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வரும் பிரபல சமூகவலைதள பதிவாளர் வெல்டலன் டட்டார்ஸ்கை உயிரிழந்தார். மேலும், 25 … Read more

உருமாற்றம் பெற்ற கொரோனா வைரசின் உறுதி தன்மைக்கு இறுகி, பிணைந்த ஸ்பைக் புரதம் காரணம்; ஆய்வில் தகவல்

வாஷிங்டன், கொரோனா பெருந்தொற்று 3 ஆண்டுகளாக உலக நாடுகளை புரட்டி போட்டு வருகிறது. எனினும், இதற்கான தீர்வு இன்னும் காணப்படாத சூழல் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தொடக்கத்தில் திணறின. அதனால், ஊரடங்கு அமல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முக கவசம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை கடைப்பிடித்தன. ஒருபுறம் கொரோனா வைரசை பற்றி அறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கி உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து மறுபுறம் … Read more

அமெரிக்காவில் நண்பரை அழைத்து வருவதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த இந்தியர் பேருந்து மோதி பலி..!

அமெரிக்காவில் போசன் சர்வதேச விமான நிலையத்தில் நண்பரை அழைத்து வருவதற்காக காத்திருந்த இந்தியாவைச் சேர்ந்த தரவு ஆய்வாளர் பேருந்து மோதி உயிரிழந்தார். ஆந்திராவைச் சேர்ந்த விஸ்வசந்த் கோலா, அமெரிக்காவில் மருந்து நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்த நிலையில், விமானத்தில் வந்த தனது நண்பரை அழைத்து வருவதற்காக மாசசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள போசன் விமான நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார். பி முனையத்தில் காரின் அருகில் நின்றுக் கொண்டிருந்த போது விமான பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து மோதியதில் அதே இடத்தில் அவர் … Read more