அமெரிக்காவில் நண்பரை அழைத்து வருவதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த இந்தியர் பேருந்து மோதி பலி..!

அமெரிக்காவில் போசன் சர்வதேச விமான நிலையத்தில் நண்பரை அழைத்து வருவதற்காக காத்திருந்த இந்தியாவைச் சேர்ந்த தரவு ஆய்வாளர் பேருந்து மோதி உயிரிழந்தார். ஆந்திராவைச் சேர்ந்த விஸ்வசந்த் கோலா, அமெரிக்காவில் மருந்து நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்த நிலையில், விமானத்தில் வந்த தனது நண்பரை அழைத்து வருவதற்காக மாசசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள போசன் விமான நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார். பி முனையத்தில் காரின் அருகில் நின்றுக் கொண்டிருந்த போது விமான பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து மோதியதில் அதே இடத்தில் அவர் … Read more

நேட்டோ அமைப்பில் இணையும் ரஷியாவின் அண்டை நாடான பின்லாந்து – அதிகரிக்கும் பதற்றம்

ஹெல்சின்கி, உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ ஆகும். நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் மிகப்பெரிய ராணுவ பலத்துடன் அமெரிக்கா உள்ளது. இந்த ராணுவ கூட்டமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி உள்பட 30 நாட்கள் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன. இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததையடுத்து ஐரோப்பிய நாடுகள் இடையே போர் அச்சம் ஏற்பட்டது. இதனால், ஐரோப்பிய நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தினால் அது 3-ம் … Read more

ஆங்கில மொழியை பயன்படுத்தினால் அபராதம்! தாய்மொழியே சிறந்தது! இத்தாலி நாட்டு சட்டம்

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் கட்சி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த சட்டத்தின்படி, நாட்டின் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளில் எந்தவொரு வெளிநாட்டு மொழியையும், குறிப்பாக ஆங்கிலத்தை பயன்படுத்தினால், 1,00,000 யூரோ வரையிலான தொகை அபராதமக விதிக்கப்படும் என்று இத்தாலி அரசு கூறுகிறது. .    ChatGPTக்குப் பிறகு, முறையான தொடர்புக்கு ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய இத்தாலி முயல்கிறது.  இத்தாலியில் உள்ள குடிமக்கள் முறையான தகவல்தொடர்புக்காக ஆங்கிலம் அல்லது வேறு ஏதேனும் வெளிநாட்டு மொழியைப் பயன்படுத்துவது விரைவில் தடை செய்யப்படும் … Read more

பிளேபாய் கவர்ச்சி இதழுக்கு போஸ் கொடுத்த பெண் மந்திரி

பாரீஸ் உலகெங்கிலும் அதிக வாசகர்களை கொண்ட பிரபல கவர்ச்சி இதழ் ‘பிளேபாய்’ பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் மந்திரி மார்லின் ஷியாப்பா(40) போஸ் கொடுத்துள்ளார். வழக்கமாக பிளேபாய் இதழுக்கு போஸ் கொடுப்பவர்கள் ஆடையில்லாமல் தான் கொடுப்பார்கள். ஆனால், மார்லின் ஷியாப்பா அப்படிச் செய்யாமல், டிசன்டாகவே போஸ் கொடுத்திருந்தார். இருப்பினும், மந்திரி ஒருவர் வயது வந்தோர் இதழுக்கு எப்படி போஸ் கொடுக்கலாம் என்று சர்ச்சை எழுந்து உள்ளது. பெண்கள், ஓரினச்சேர்க்கை உரிமைகள், கருக்கலைப்பு ஆகியவை குறித்து பிளேபாய் இதழுக்கு … Read more

சீனா மக்கள்தொகை சரிவு எதிரொலி: காதலில் ஈடுபட மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கும் கல்லூரிகள்

பீஜிங்: சீனாவில் மக்கள்தொகை குறைவதை கருத்தில்கொண்டு மாணவர்கள் காதலில் ஈடுபட வார விடுமுறையை கல்லூரிகள் வழங்கி வருகின்றன. சீனாவில் 1961-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 2022-ஆம் ஆண்டில் மக்கள்தொகை எண்ணிக்கை குறைந்துள்ளது. 2021-ஆம் ஆண்டில் சீன மக்கள்தொகை எண்ணிக்கை 1.41260 பில்லியன் ஆக இருந்த நிலையில், 2022-ஆம் ஆண்டின் முடிவில் சீனாவில் 1.41178 பில்லியன் மக்கள் மட்டுமே உள்ளதாகவும் சீன தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. 2021-ஆம் ஆண்டில் சீனாவில் 1000 பேருக்கு 7.52 என்ற … Read more

‘இனி இங்கிலீஷ் பேசுவ’ .. 82 லட்சம் அபராதம் விதித்த இத்தாலி.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனியின் பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சியால் முன்மொழியப்பட்ட புதிய சட்டத்தின்படி, அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளில் ஆங்கிலம் மற்றும் பிற வெளிநாட்டு வார்த்தைகளைப் பயன்படுத்தும் இத்தாலியர்களுக்கு 1 லட்சம் யூரோக்கள் (ரூ. 82,46,550) வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது. CNN செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, கீழ் அறை பிரதிநிதிகளின் உறுப்பினரான ஃபேபியோ ராம்பெல்லி இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி … Read more

”தாக்குதல் நடத்த வந்த 10க்கும் மேற்பட்ட உக்ரைன் டிரோன்கள் அழிப்பு..” – ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம்..!

தாக்குதல் நடத்த வந்த 10க்கும் மேற்பட்ட உக்ரைனின் டிரோன்களை சுட்டு வீழ்த்தி விட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள குப்யான்ஸ்க், கிராஸ்னி லிமான், டொனெட்ஸ்க், கெர்சான்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி, ரேடார் சாதனங்கள், கவச வாகனங்கள், ஹெளவிட்சர் பீரங்கிகள் மற்றும் பிற ராணுவ தளவாடங்களை அழித்து விட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதேபோல், 4 பக்கங்களில் இருந்தும் தாக்குதல் நடத்திய ரஸ்ய படையினருக்கு … Read more

இசை நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்த ரேடியோ சேனலை இழுத்து மூடிய தலீபான்கள்!

காபூல், ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலீபான்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்ததில் இருந்தே பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டு வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு எதிராக அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக மேற்கத்திய நாடுகளும் ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடத்தும் தலீபான்களை விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்களால் நடத்தப்பட்டு வந்த ரேடியோ சேனல் ஒன்றை தலீபான்கள் மூட உத்தரவிட்டுள்ளனர். ரம்ஜான் மாதத்தில் இசை நிகழ்ச்சியை ஒலிபரப்பி இஸ்லாமிய எமிரேட்ஸ் சட்டங்களை மீறி விட்டதாக கூறி … Read more

கட்டணம் செலுத்த மறுத்த ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையின் ட்விட்டர் பக்க ப்ளூ டிக் அகற்றம்

நியூயார்க்: ட்விட்டர் வெரிஃபிகேஷனுக்காக தொகையை தர மறுத்ததால் பிரபல செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸின் ட்விட்டர் பக்க ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், அதில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அவரது நடவடிக்கைகளில் ஒன்றுதான் ‘ப்ளூ டிக்’ அங்கீகாரம் பெற்றுள்ள பயனர்களிடத்தில் அதற்கென மாதந்தோறும் கட்டண சந்தா வசூலிப்பது. எலன் மஸ்க்கின் நடவடிக்கைக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு இருந்து வந்தது. ஆனாலும் தன் முடிவில் மஸ்க் உறுதியாக இருந்தார். அதையடுத்து குறிப்பிட்ட … Read more