கனடா பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களை கத்தியால் குத்திய மாணவன்

கனடாவின் நோவா ஸ்காட்டியா மாகாணம் ஹாலிபாக்ஸ் பகுதியில் உள்ள பள்ளியில் நேற்று முன்தினம் வழக்கம் போல் இயங்கியது. அப்போது ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது மாணவன் ஒருவன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை குத்தினான். இதனால் பயந்து போன மாணவர்கள் கூச்சலிட்டு அங்கும், இங்குமாக ஓட ஆரம்பித்தனர். இதனையடுத்து அருகில் உள்ள வகுப்பறையில் இருந்த ஆசிரியர் வந்து மாணவனை தடுக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த மாணவன் கத்தியால் குத்தினான். … Read more

ரஷ்யாவில் போருக்கு எதிராக கட்டிப்பிடித்து போராட்டம் நடத்திய இளைஞர் கைது

ரஷ்யாவில் போருக்கு எதிராக கட்டிப்பிடித்து போராட்டம் நடத்திய 20 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ரஷ்யா-உக்ரைன் போர் ஓராண்டை கடந்தும் நடைபெற்று வரும் நிலையில், ரஷியாவின் இஷெவ்ஸ்க் (IZHEVSK) நகர தெருவில் நிகிடாகோர்புனோவ் என்ற இளைஞர், “நீங்கள் போருக்கு எதிராக இருந்தால் என்னைக் கட்டிப்பிடி” என்று எழுதப்பட்ட பலகையுடன் நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். அவ்வழியாகச் சென்றவர்கள் அவரை கட்டிப்பிடித்து ஆதரவு தெரிவித்த நிலையில், போலீசார் நிகிடாவை கைது செய்து அழைத்துச் சென்றனர். நிகிடாவுக்கு 30 … Read more

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 2 பேர் பலி 6 பேர் காயம் என தகவல்

இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகி இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 184 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், லாகூர் உள்ளிட்ட பகுதிகளில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர். ஆறு பேர் காயமடைந்தனர். இந்து குஷ் மலைத்தொடரை … Read more

ரஷ்யாவில் சீன அதிபர்.. உக்ரைனில் ஜப்பான் பிரதமர்.. 3ம் உலகப் போர் ஸ்டார்ட்.?

ரஷ்யாவில் சீன அதிபர் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், எதிரணியில் உள்ள ஜப்பான் பிரதமர் உக்ரைனுக்கு திடீர் பயணம் பேசு பொருளாகியுள்ளது. உக்ரைனில் அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளை நிலைநிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டதால், ரஷ்யா உக்ரைன் மீது போரை தொடங்கியது. போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போர் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளது. மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுக்க ரஷ்யா கங்கனம் கட்டிக் கொண்டு வேளை செய்து வருகிறது. இது … Read more

ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு!

வாஷிங்டன், உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு சேவை நிறுவனமான டிஸ்னி, பொழுதுபோக்கு சேவை துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் அடிப்படையில் செலவுகளை குறைப்பதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அமெரிக்க நிறுவனங்களின் வரிசையில் கடந்த மாதம் டிஸ்னி நிறுவனமும் இடம்பிடித்து இருந்தது. எதிர்பார்த்த லாபத்தை ஈட்ட முடியாத காரணத்தால், தங்கள் ஊழியர்களில் 7 ஆயிரம் பேரை பணியை விட்டு நீக்க இருப்பதாக டிஸ்னி நிறுவனம் அறிவித்தது. அதன்படி முதற்கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் … Read more

அமெரிக்கர்களை உளவு பார்க்கும் டிக் டாக்.? – சீனாவின் ராஜதந்திரம்.. சிஇஒ மறுப்பு.!

அமெரிக்கர்களின் தகவல்களை டிக் டாக் சீன அரசாங்கத்திற்கு வழங்கி வருவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டிற்கு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார். கல்வான் பள்ளத்தாக்கு மோதல், அருணாச்சல பிரதேசத்தில் அத்துமீறல் உள்ளிட்ட சீனாவுடனான எல்லை பிரச்சனை காரணாக இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பயனர்களின் தகவல்கள் டிக் டாக் செயலி மூலம் சீன அரசாங்கத்திற்கு வழங்கப்படுவதாக கூறி அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் டிக் டாக் செயலியை தடை … Read more

NATOவுக்கு எதிராக கை கோர்க்கும் சீனா – ரஷ்யா! அமெரிக்க ஆதிக்கம் முடிவுக்கு வருமா!

மாஸ்கோ: நேட்டோவுக்கு எதிராக ரஷ்யாவும் சீனாவும் புதிய கூட்டணியை அறிவித்துள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் நடத்திய சந்திப்பின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் பரஸ்பர உறவுகளின் புதிய சகாப்தத்தை தொடங்கவும் முடிவு செய்துள்ளன. இதற்கிடையில், உக்ரைன் மோதல் தொடர்பாக சீனாவின் முன்மொழிவுகளை மேற்கத்திய நாடுகள் ஏற்கவில்லை என்று விளாடிமிர் புடின் குற்றம் சாட்டினார். ஜின்பிங்கும், புடினும் மேற்கத்திய படைகளை கட்டுப்படுத்த கூட்டு உத்தியை வகுக்க முடிவு செய்துள்ளனர். … Read more

உலகளவில் தண்ணீருக்கு நெருக்கடி ஏற்படும் அபாயம்: ஐ. நா. எச்சரிக்கை

நியூயார்க்: காலநிலை மாற்றம் காரணமாகவும், அதிகரித்து வரும் நுகர்வு கலாச்சாரத்தினாலும் உலகளவில் தண்ணீருக்கு நெருக்கடி ஏற்படும் ஆபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக நாடுகள் ஓர் ஆபத்தான பாதையில் பயணிக்கின்றன. நுகர்வுக் கலாச்சாரம், காலநிலை மாற்றம்,அதிதீவிர வளர்ச்சியினால் தண்ணீர் நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், அதிகப்படியான நுகர்வு மற்றும் மாசுபாட்டின் காரணமாக நீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது . அதே சமயம் காலநிலை மாற்றங்களும் புவி வெப்பமடைதலை … Read more

வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது: புதின்

மாஸ்கோ: ரஷ்யா – உக்ரைன் போரில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருக்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாட்கள் பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்த சந்திப்பில் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. இதுகுறித்து புதின் கூறும்போது, “சீனா உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத்தான் முயற்சி செய்கிறது. … Read more

பெய்ஜிங்கில் வீசிய புழுதிப்புயலால் மோசமடைந்த காற்றின் தரம்..!

சீன தலைநகர் பெய்ஜிங்கில் வீசிய புழுதிப்புயலால், அங்கு காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக புழுதிப் புயல் வீசி வருவதால் பெய்ஜிங்கில் கட்டிடங்கள், சாலைகளில் அடர்த்தியான தூசிகள் படிந்துள்ளன. இதனால் காற்றின் தரக்குறியீடு மிக மோசமான பிரிவில், 500 ஆக பதிவாகியுள்ளது. கோபி பாலைவனத்திற்கு அருகாமையில் இருப்பதால் வடக்கு சீன பகுதிகள் முழுவதும், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இது போன்ற புழுதிப்புயல் வீசுகிறது என்பது குறிப்பிடத்தக்கது Source link