தலிபான் ஆட்சியாளர்கள் இடையே கருத்து மோதல் – பொதுவெளியில் அதிருப்தியை வெளிப்படுத்திய ஆப்கன் அமைச்சர்

காபூல்: ஆப்கன் ஆட்சியாளர்களிடையே கருத்து மோதல் இருப்பது தெரியும் வகையில் உள்துறை அமைச்சர் சிராஜுதின் ஹக்கானி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கனிஸ்தானில் செல்வாக்கு மிக்க பயங்கரவாத அமைப்பான தலிபான்கள், கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் மீண்டும் அங்கு ஆட்சியைப் பிடித்தார்கள். இதற்கு முன் இருந்ததுபோல், இம்முறை தங்கள் ஆட்சி இருக்காது என்றும், சர்வதேச சமூகத்துடன் நல்லுறவை பேண தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஆப்கன் அரசு முன்னெடுக்கும் என்றும் கூறி இருந்தனர். தலிபான் ஆட்சியாளர்களுக்கு பாகிஸ்தான் … Read more

”உலகளவில் தண்ணீர் பிரச்னை தலைதூக்கியபோது, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு இந்தியாவில் தொடக்கம்..” – பிரதமர் மோடி..!

பூமியில் குறிப்பிட்ட அளவே நீர்இருப்பு உள்ளதால், தண்ணீரின் முக்கியத்துவத்தை உலக நாடுகள் உணர்ந்திருப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்தவாறே காணொலி வாயிலாக, ராஜஸ்தானின் சிரோகியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சர்வதேச அளவில், தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை தலைதூக்கியபோது, ஜல் சக்தி அபியான் எனும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம், கடந்த 2021 ஆம் ஆண்டில், நம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியாவில், தண்ணீரை சேமிப்பது, குடிமக்களாகிய நமது கடமை என … Read more

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு

மணிலா: பிலிப்பைன்ஸில் இன்று 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “பிலிப்பைன்ஸில் மாஸ்பேட் தீவில் உள்ள மியாகா பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியது. இதன் ஆழம் 11 கி.மீட்டர். நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் அச்சமடைந்து வீதிக்கு வந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து நில அதிர்வுகளை மக்கள் … Read more

பிலிப்பைன்ஸ் நாட்டிலும் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்| A powerful 6.1 magnitude earthquake struck the Philippines

மணிலா: துருக்கி, சிரியாவில் கடந்த 6ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பாக இந்தியாவில் சில பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. நேற்று (பிப்.,15) நியூசிலாந்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொலைதொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டதால் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் … Read more

வட கொரியா புதிய உத்தரவு: அதிபர் கிம்மின் மகள் பெயரை சாமான்யர்கள் சூட்டிக் கொள்ள தடை

பியாங்யாங்: வடகொரியா வித்தியாசமான உத்தரவுகளுக்கு பெயர் பெற்ற நாடு. அந்த வகையில் புதிதாக ஒரு நூதன அறிவிப்பை வெளியிட்டுள்ளது வடகொரியா. அந்த உத்தரவின்படி, அந்நாட்டு தலைவர்களின் பெயரை இனி அந்நாட்டு மக்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது கிம்மின் மகளின் பெயரை வைத்திருக்கும் பெண்கள், சிறுமிகள் தங்கள் பெயரை மாற்றிக் கொள்ளுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வடகொரியா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கிம் ஜு ஏ என்ற பெயருள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் … Read more

பெரு நாட்டின் பாலைவனத்தில் 7 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய திமிங்கல மண்டை ஓடு கண்டுபிடிப்பு..!

பெரு நாட்டின் பாலைவனத்தில் 7 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய திமிங்கல மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருவை சேர்ந்த பழங்கால ஆராய்ச்சியாளர்கள் குழு, ஒகுகேஜே பாலைவனத்தில் இதனை கண்டுபிடித்தனர். திமிங்கலத்தின் இந்த மண்டை ஓடு 7 மில்லியன் ஆண்டுகளாக பாலைவனப் பகுதியில் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மண்டை ஓட்டின் நீளம் 4.3 அடி எனவும், திமிங்கலம் 16 முதல் 18 அடி வரை இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. திமிங்கலத்தின் மண்டை ஓடு லிமாவின் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்கு … Read more

அமெரிக்காவின் அலபாமாவில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்ததில் 2 பேர் உயிரிழப்பு..!

அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணமான அலபாமாவில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். UH-60 பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் அலபாமாவின் ஹார்வெஸ்ட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வானில் இருந்து கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் டென்னசி நேஷனல் கார்டுக்கு சொந்தமானது என்றும், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

ஜப்பானிய தீவில் குவிந்த ஆயிரக்கணக்கான காகங்கள்: இயற்கை பேரழிவு வருமா என அச்சம்| Thousands of crows flock streets of Japanese island; video goes viral

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹோன்சு: ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் குவிந்ததால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏதேனும் இயற்கை பேரழிவு வருகிறதென்றால், பறவைகள் கூட்டம் கூட்டமாக வேறு இடங்களுக்கு பயணிக்கும். கடந்த 2004ல் ஏற்பட்ட சுனாமியின்போதும் இதேபோன்ற நிகழ்வு நடந்துள்ளது. அந்த வகையில் ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது. அங்குள்ள … Read more