உலக செய்திகள்
வங்கதேசத்தில் பஸ் விபத்து; 19 பேர் பலியான பரிதாபம்| Bus accident in Bangladesh; It is a pity that 19 people died
டாக்கா : வங்கதேசத்தில் சாலையோரப் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 19 பேர் பலியாகினர்; 30 பேர் காயமடைந்தனர். நம் அண்டை நாடான வங்கதேசத்தில் நேற்று குல்னாவில் இருந்து டாக்கா நோக்கி சென்ற பஸ், மதாரிப்பூர் மாவட்டத்தின் ஷிப்சார் உபாசிலாவில் உள்ள குதுப்பூர் பகுதியில் வந்த போது சாலையோரம் இருந்த 30 அடி ஆழப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 1௬ பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும், மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் … Read more
சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட்; உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய அதிபர்.!
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண் பிறப்பித்த நிலையில், உக்ரைனில் உள்ள ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதியான மரியுபோலுக்கு ரஷ்ய அதிபர் இன்று பயணம் மேற்கொண்டார். உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஓராண்டுகள் கழிந்தும் போர் தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராஜதந்திர நடவடிக்கைகள் போரை தொடர செய்துள்ளதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதி வருகின்றனர். இந்த சூழலில் உக்ரைன் குழந்தைகளை நாடு கடத்தியதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கைது … Read more
கொரோனா தரவுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை !
வாஷிங்டன், கொரோனா தரவுகளைப் பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தொற்று பரவலுக்கு சீனா தான் காரணம் என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், தரவுகளில் சீனா வெளிப்படைத் தன்மை காட்டுவதில்லை என தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா பரவத் துவங்கிய காலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் தரவுகள் பகிரப்பட வேண்டும் என உலக சுகாதார … Read more
ஈக்வடாரில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பல்பொருள் அங்காடியில் இருந்த அலறியடித்து ஓட்டம் பிடித்த வாடிக்கையாளர்கள்
ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போது, குயாகில் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் இருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த வீடியோ வெளியாகியுள்ளது. எல் ஓரோ மாகாணத்தில் சனிக்கிழமை 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் இரு முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதில், சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்ததாகவும், 380க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈக்வடாரின் புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் … Read more
தஜிகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு
தஜிகிஸ்தான், தஜிகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இன்று காலை 11.31 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 170 கி.மீ ஆழத்திலும், ரிக்டர் அளவில் 4.4 ஆகவும் பதிவாகியுள்ளது என்று தேசிய நிலநடுக்க முகமை தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. தினத்தந்தி Related Tags : தஜிகிஸ்தான் நிலநடுக்கம் Tajikistan earthquake
மெக்சிகோ உலக ரேலி சாம்பியன்ஷிப்பில் முன்னிலையில் இருந்த லாப்பியின் கார் விபத்து!
மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலக ரேலி சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னிலையில் இருந்த பின்லாந்தை சேர்ந்த எசபெக்கா லாப்பியின் கார் விபத்துக்குள்ளானதையடுத்து அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். கடந்த 16-ம் தேதியில் இருந்து மலைப்பகுதியில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் லாப்பியின் கார் விபத்தையடுத்து பிரான்ஸை சேர்ந்த 8 முறை சாம்பியனான செபாஸ்டின் ஓஜியர் முன்னிலையில் உள்ளார். ஓஜியரை விட 35.8 வினாடிகள் பின்னால் வந்த பிரிட்டனை சேர்ந்த எல்ஃபின் எவன்ஸ் 2-வது இடத்தில் உள்ளார். இறுதி நாளான இன்று மீதமுள்ள … Read more
போர் தொடங்கி ஓராண்டு கடந்த நிலையில் முதல் முறையாக உக்ரைன் எல்லைக்குள் சென்ற ரஷிய அதிபர் புதின் – மரியுபோல் நகரில் ஆய்வு
மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. போர் இன்று 389-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று … Read more
விளாடிமிர் புடின் உலகின் ‘இந்த’ 123 நாடுகளில் அடியெடுத்து வைத்தால் கைது: ICC
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) வெள்ளிக்கிழமை கைது வாரண்ட் பிறப்பித்தது. புடினைத் தவிர, ரஷ்யாவின் குழந்தைகள் உரிமை ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா-பெலோவாவுக்கு எதிராகவும் ஐசிசி கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. புடினுக்கு எதிரான இந்த கைது வாரண்ட் ‘போர் குற்றத்திற்காக’ பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ICC தெரிவித்துள்ளது. உக்ரேனிய குழந்தைகளை வலுக்கட்டாயமாக ரஷ்யாவிற்கு சட்டவிரோதமாக அழைத்துச் சென்றதாகவும் ரஷ்ய ஜனாதிபதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புடின் இப்போது உலகின் 123 நாடுகளுக்குச் சென்றால், … Read more
மரியுபோல் தியேட்டர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினத்தை ஒட்டி பொதுமக்கள் அஞ்சலி!
மரியுபோல் தியேட்டர் குண்டுவெடிப்பின் ஓராண்டு நினைவு தினத்தை ஒட்டி, செக் குடியரசின் தலைநகர் பிராக்கில் உள்ள தியேட்டருக்கு வெளியே மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். உக்ரைனிய அகதிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பலர் ஒன்று கூடி, ரஷ்ய மொழியில் “குழந்தைகள்” என எழுதப்பட்ட பதாகையை வைத்து அதன் மீது மெழுகுவர்த்தி ஏற்றி, குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கடந்தாண்டு மார்ச் மாதம், உக்ரைனின் மரியுபோலில் உள்ள தியேட்டர் மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில், அங்கு … Read more