இந்தோனேசியாவில் மீண்டும் வெடித்து சிதற தொடங்கிய மெராபி எரிமலை..!

இந்தோனேசியாவின் மெராபி எரிமலை மீண்டும் வெடித்துச் சிதற தொடங்கி உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 9,721 அடி உயரத்தில் உள்ள இந்த எரிமலை நேற்று வெடித்து வெடித்து சிதறியதில் அடர் சாம்பலுடன் நெருப்பு குழம்பு வெளியேறியது. எரிமலையிலிருந்து வெளிவரும் சாம்பல் அருகில் உள்ள கிராமங்களை மூழ்கடிக்கும் என்றும், எரிமலையை சுற்றி 7 கிலோமீட்டர் வரை யாரும் செல்ல வேண்டாம் என்றும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.  Source link

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கி இடிந்தன..!

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு 13 பேர் உயிரிழந்தனர். ஈக்வடாரின் இரண்டாவது பெரிய நகரமான குயாகுவிலில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாலா நகருக்கு அருகே ஏற்பட்ட இந்நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்பு க் குழுவினர் தெரிவித்தனர். Source link

இம்ரான் கானுக்கு எதிரான கைது வாரண்டை ரத்து செய்தது பாகிஸ்தான் நீதிமன்றம்..!

பரிசுப்பொருள் முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான கைது வாரண்டை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பிரதமராக இருந்தபோது தனக்கு வந்த பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்தது தொடர்பான வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்த இம்ரான் கானை கைது செய்ய, ஜாமீன் பெறமுடியாத வகையில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக இம்ரான் கான் வெளியில் சென்றிருந்தபோது அவரது வீட்டின் முன்பிருந்த பேரிகார்டுகளை உடைத்து போலீசார் உள்ளே நுழைய … Read more

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்ற ஜூன் மாதம் செல்லும் பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் விருந்து

புதுடெல்லி: அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று வரும் ஜூன் 3-வது வாரத்தில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஜூன் 21 முதல் 25-ம் தேதி வரை பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். பிரதமரின் பயண தேதி விரைவில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும். அமெரிக்க பயணத்தின்போது அந்த நாட்டின் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் … Read more

ஆஸி., ஆற்றில் லட்சக்கணக்கான மீன்கள் இறப்பு: மக்கள் அதிர்ச்சி| Millions of fish die in Aussie river: People shocked

சிட்னி, -ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் லட்சக்கணக்கான மீன்கள் இறந்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பசிபிக் தீவு நாடான ஆஸ்திரேலியாவின் நியூ சவூத் வேல்ஸ் மாகாணத்தில் டார்லிங் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் நேற்று லட்சக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீன்வளத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின், ஆற்றில் இறந்து மிதந்த மீன்களை … Read more

கொரோனா தரவுகளில் வெளிப்படை வேண்டும்: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை| Corona needs transparency in data: WHO warns China

ஜெனீவா- கொரோனா தொற்று குறித்த உண்மையான தரவுகளை பகிர்வதில், சீனா வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. நம் அண்டை நாடான சீனாவின் வூஹான் நகரில், 2019 டிசம்பர் இறுதியில், முதன் முதலில் கொரோனா பரவியது. இந்த தொற்று, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா தொற்றுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பொது மக்களுக்கு செலுத்தப்பட்ட பின் தான், பல நாடுகள் இயல்பு … Read more

மர்மங்கள் நிறைந்த மினசோட்டா நதி! காணாமல் போகும் நதி நீர்!

மினசோட்டா நதி: மினசோட்டா ஆறு என்பது அமெரிக்காவில் உள்ள ஒரு நதி மற்றும் இது அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் இருப்பதால், அதன் பெயர் மினசோட்டா நதி. இது மிசிசிப்பி ஆற்றின் துணை நதி என்றும் அதன் நீளம் சுமார் 534 கிலோமீட்டர். இந்த நதியின் ஆதாரம் மினசோட்டாவில் உள்ள ஒரு ஏரி மற்றும் இந்த ஏரி பெரிய கல் ஏரி என்று அழைக்கப்படுகிறது. மினசோட்டா ஆறு நகரங்களுக்கு தெற்கே மிசிசிப்பியுடன் இணைகிறது. இந்த … Read more

ஆபாச அசைன்மெண்ட்… பாலியல் கதை எழுத சொன்ன பள்ளி – அதுவும் ஃபேன்டஸி கதை!

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளி, அதன் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வித்தியாசமான அசைன்மெண்ட்டை பெற்றோர்களும், இணைய பயனர்களும் விமர்சித்து வருகின்றனர். பறவையின் இறகுகள், சுவையூட்டும் சிரப்புகள் மற்றும் மசாஜ் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி, தங்களின் “பாலியல் கற்பனை” குறித்து ஹாம்-வொர்க் எழுதி வர வேண்டும் என அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தின் யூஜின் நகரில் உள்ள சர்ச்சில் உயர்நிலைப் பள்ளியின் சுகாதார வகுப்பு (Health Class) மாணவர்கள், அரசு நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட … Read more

பிட்டு பட நாயகிக்கு பணம் கொடுத்த விவகாரம்; டொனால்ட் டிரம்ப் கைது.!

தேர்தலுக்கு முன்னதாக ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த காலத்தில் தன்னுடன் நெருங்கிய உறவில் இருந்ததாக ஆபாசபட பிரபலம் ஸ்டோர்மி டேனியல்ஸ் முன்பு தெரிவித்தார். போர்ன் பட நாயகியின் குற்றச்சாட்டை டிரம்ப் மறுத்தார். இந்தநிலையில் கடந்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்ற போது, போர்ன் நடிகையின் செய்திகள் வெளிவந்ததால் டிரம்பிற்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டது. … Read more