காதலன் திருமணத்தில் திரண்ட மாஜி காதலிகள்: திருந்திவிட்டதாக காதலன் சரண்டர்| Chinese groom’s ex-girlfriends crash wedding with protest banner

யுனான்: சீனாவை சேர்ந்த ஒருவரின் திருமணத்தின்போது அவரின் முன்னாள் காதலிகள் ஒன்றுதிரண்டு கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இளமைகாலத்தில் காதலிகளை காயப்படுத்தியதற்கு மன்னிப்பு கோரினார் அந்த காதலன். உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை (பிப்.,14) கொண்டாடப்படும் சூழலில், கடந்த ஒரு வாரமாக காதலர்கள் சாக்லேட் தினம், கட்டிப்பிடி தினம், முத்த தினம் என ஒவ்வொரு நாளும் கொண்டாடி வருகின்றனர். அப்படி இருக்கையில் சீனாவில் ஒருவரின் திருமணத்தின்போது அவரின் முன்னாள் காதலிகள் ஒன்றுசேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் … Read more

சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளும் ஈரான் அதிபர் ரெய்சி

தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி அரசு முறைப் பயணமாக சீனாவுக்கு செல்ல இருக்கிறார். அதன்படி பிப்ரவரி 14 முதல் 16 வரை இப்ராஹிம் ரெய்சி சீனாவிற்கு வருகை தரவுள்ளதாக சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீன துணை அதிபர் ஹு ஹுன்ஹுவா ஈரானுக்கு வருகை புரிந்தார். அப்பயணத்தில் மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த பயணத்தைத் தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் ஈரான் அதிபர் … Read more

அண்ணாமலை இலங்கை பயணம்; உயிருடன் வந்த பிரபாகரன்… வெடிக்கும் புதிய அரசியல்!

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த போராளி. இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு கோரி ஆயுதப் போராட்டத்தை கையிலெடுத்தவர். 2009ஆம் ஆண்டு ஈழப் போர் உச்சம் அடைந்த போது இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் இடையிலான போரில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிரபாகரன் மரணம்அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு மரணம் உறுதி செய்யப்பட்டது, புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சி, இலங்கை தமிழர்கள் படுகொலை என சர்வதேச அரசியல் அரங்கை … Read more

இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 2 மோப்ப நாய்களால் 6 வயது சிறுமி மீட்பு..!

துருக்கியில் கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த 6 வயது சிறுமியை இந்தியாவில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட மோப்ப நாய்கள் காப்பாற்றியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளுக்காக சென்றுள்ள இந்திய மீட்புக்குழுவினருடன், தேசிய பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த ஜூலி மற்றும் ரோமியோ மோப்ப நாய்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இரு மோப்ப நாய்களும் நூர்தாகியில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த 6  வயது சிறுமியை காப்பாற்றியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

ஆப்கானிஸ்தானில் ஒரு மாதத்தில் 2-வது முறையாக நிலநடுக்கம்

பைசாபாத், ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் நகரில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 135 கி.மீ. தொலைவில் இன்று காலை 6.47 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மித அளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. இதனை நிலநடுக்க அறிவியல் மையம் இன்று தெரிவித்து உள்ளது. ஆப்கானிஸ்தானில் ஒரு மாதத்தில் 2-வது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம் இதுவாகும். கடந்த ஜனவரி 22-ந்தேதி அந்நாட்டின் பைசாபாத் நகரில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 79 கி.மீ. தொலைவில் காலை 9.04 … Read more

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது

துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. ஆனால் அந்த இரு நாடுகளிலும் அழு குரலும், மரண ஓலமும் ஓய்ந்தபாடில்லை. கான்கிரீட் குவியல்களுக்குள் இருந்து அள்ள அள்ள பிணங்கள் கிடைப்பதால் பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இருநாடுகளிலும் நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்து விட்டது. 92 ஆயிரத்துக்கு அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். பலியானவர்களில் துருக்கியில் மட்டுமே 29 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் … Read more

சீனாவின் கடல் பரப்பின் மீது பறந்த மர்ம பொருள்; சுட்டு வீழ்த்த முடிவு

பீஜிங், அமெரிக்காவில் கனடா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள மொன்டானா மாகாணத்தின் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த வெள்ளை நிற ராட்சத பலூன் கடந்த 4-ந்தேதி போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த பலூன் சீனா அனுப்பிய உளவு பலூன் என்றும், பல ஆண்டுகளாக இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் சீனா பலூன் மூலம் உளவு பார்த்ததாகவும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் குற்றம் சாட்டியது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த சீனா, அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்பட்டது, … Read more

துருக்கி பூகம்ப பலி 34,000 ஐ கடந்தது: தவிக்கும் சிரியாவுக்கு நீளுமா உதவிக்கரம்?

அங்காரா: துருக்கியில் ஏற்பட்ட வரலாறு காணாத பூகம்பத்தால் துருக்கி மற்றும் அதன் அண்டை நாடான சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,800 என்றளவைக் கடந்துள்ளது. இந்நிலையில் மேற்குலக பொருளாதாரத் தடை, உள்நாட்டுப் போர், போதிய மருத்துவக் கட்டமைப்பு வசதியில்லாத சிரியாவின் நிலை மிக மோசமாக உள்ளதால் அங்குள்ள மக்கள் இந்த பூகம்பத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஏற்கெனவே போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவிற்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்ப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதை கவலையுடன் ஒப்புக் கொண்டுள்ள ஐ.நா. சபை, இந்த … Read more

துருக்கி, சிரியாவை உலுக்கிய நிலநடுக்கம்: தரமற்ற கட்டிடங்கள் தொடர்பாக 113 பேருக்கு பிடிவாரண்டு

அங்காரா, துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. ஆனால் அந்த இரு நாடுகளிலும் அழு குரலும், மரண ஓலமும் ஓய்ந்தபாடில்லை. கான்கிரீட் குவியல்களுக்குள் இருந்து அள்ள அள்ள பிணங்கள் கிடைப்பதால் பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இருநாடுகளிலும் நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்து விட்டது. 92 ஆயிரத்துக்கு அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். பலியானவர்களில் துருக்கியில் மட்டுமே 29 ஆயிரத்துக்கும் அதிகமான … Read more

மீண்டும் மர்மப் பொருள் | ஒரே வாரத்தில் அமெரிக்கா நடத்திய 4வது தற்காப்பு தாக்குதல்

வாஷிங்டன்: அமெரிக்க வான்வெளியில் மீண்டும் ஒரு மர்மப் பொருள் அந்நாட்டு ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் இது 4வது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி சீன உளவு பலூன் ஒன்று அமெரிக்க ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த பலூன் தங்கள் நாட்டுடையதுதான் வானிலை ஆய்வுக்காக தனியார் நிறுவனம் அனுப்பியது திசை மாறி அமெரிக்க வான் எல்லைக்குள் வந்துவிட்டது என்று சீனா விளக்கமளித்தது. ஆனால் அதை ஏற்க மறுத்த அமெரிக்க அந்த … Read more