கறுப்பின மக்களின் விடுதலைக்கு வித்திட்ட மாமனிதர் ; ஆப்ரகாம் லிங்கன்!

Abraham Lincoln 214th Birth Anniversary: ஒழுக்கமுடமை எனும் அதிகாரத்தை உருவாக்கிய வள்ளுவப் பெருந்தகை, அதில் பல ஒழுக்க நெறிகளை மிக விரிவாகவும் விளக்கமாகவும் விவரித்துள்ளார். “ஒழுக்கம் உயர்வைத் தரும்” என்பதற்கேற்ப, ஒழுக்கத்தின் மூலம் உயர்ந்த இடத்தை எட்டிப் பிடித்தவர்தான் ; முன்னாள் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன். அவருக்கு இன்று 214வது பிறந்த நாளாகும். இந்நன்னாளில் அவரை நினைவுகூர்வது காலத்தின் கட்டாயமாகும். ஏனெனில், எவ்வித பின்புலமும் இல்லாமல் அமெரிக்க நாட்டின் உச்சபட்சமாக கருதப்படும் அதிபர் பதவியை … Read more

வியட்நாமின் தூங்காத மனிதர் குறித்த சுவாரஸ்யம்… 60 ஆண்டுகளாக தூங்காமல் உயிர்வாழும் முதியவர்

வியட்நாமில் 80 வயது முதியவரொருவர் 60 ஆண்டுகளாகத் தூங்காமல் வாழ்ந்து வருவதாகத் தெரியவந்துள்ளது.  1962-ஆம் ஆண்டில் இருந்தே தாய் நகோக் என்ற முதியவர், தூங்காமல் உயிர் வாழ்ந்து வருகிறார். இவரை பற்றி அறிந்த யூடியூப் சேனல் ஒன்று, வியட்நாமுக்கு சென்று அவருடன் செலவிட்டு அவரது அன்றாட நடவடிக்கைகளை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. அவரது மனைவி, குழந்தைகள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் எவருமே இத்தனை ஆண்டுகளில் நகோக் உறங்கியதை கண்டது இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். 20 வயதில் ஏற்பட்ட காய்ச்சல் … Read more

துருக்கி நிலநடுக்க பாதிப்புக்கு மத்தியில் திருட்டில் ஈடுபட்ட 48 பேர் கைது

அங்காரா, துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த வாரம் ஓய்வு நாளான ஞாயிற்று கிழமை முடிந்து அடுத்த நாள் விடியல் தொடங்குவதற்கு முன்னரே, சோகம் ஏற்பட்டது. துருக்கியின் எல்லையில் கடந்த வார திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் … Read more

சிரியாவில் இடிபாட்டுக்குள் உயிருக்கு போராடும் சிறுவன் பகிர்ந்த வீடியோ

சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி கொண்டுள்ள சிறுவன் ஒருவன் வீடியோ பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த நிலநடுக்கத்தை எவ்வாறு விவரிப்பது என்று தனக்கு தெரியவில்லை, திரும்பத் திரும்ப நிலநடுக்கம் வருவதாக சிறுவன் பதற்றத்துடன் கூறிய நிலையில் வீடியோ முடிவடைகிறது…

கனடாவில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஜஸ்டின் ட்ரூடோ தகவல்

கனடா, அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே ராட்சத பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கடந்த 1-ந் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் குற்றம் சாட்டியது. ஆனால் சீனாவோ அது உளவு பலூன் இல்லை என்றும், வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்ட பலூன் திசை மாறி அமெரிக்காவுக்குள் வந்துவிட்டதாகவும் விளக்கம் அளித்தது. ஆனால் அமெரிக்கா அதை ஏற்கவில்லை. இதனையடுத்து, ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின் … Read more

துருக்கி- சிரியாவில் பலி எண்ணிக்கை இருமடங்காகும்? ஐ.நா. அதிகாரி அச்சம்

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்து விட்ட நிலையில், இந்த எண்ணிக்கை இருமடங்காக உயரும் என்று ஐநா அதிகாரி தெரிவித்துள்ளார்.  துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்திற்கு இதுவரை 28 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 6 வது நாளாக குவிந்து கிடக்கும் இடிபாடுகளை அகற்றும் போது பிறந்த சிசு முதல் முதியவர்கள் வரை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சிலர் சடலங்களாகவும், படுகாயங்களுடனும் மீட்கப்பட்டு வருகின்றனர். ஹாத்தே நகரில் வானுயர … Read more

உலக அரசு உச்சி மாநாடு துபாயில் நாளை தொடங்குகிறது

உலக அரசு உச்சி மாநாடு இதுகுறித்து அமீரக அமைச்சரவை விவகாரத்துறையின் மந்திரியும், உலக அரசு உச்சி மாநாட்டின் தலைவருமான முகம்மது பின் அப்துல்லா அல் கெர்காவி கூறியதாவது:- துபாயின் ஜுமைரா பகுதியில் உள்ள மதினத் ஜுமைரா நட்சத்திர ஓட்டலில் உலக அரசு உச்சி மாநாடு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு 15-ந் தேதி வரை நடக்கிறது. அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் திட்டத்தின் … Read more

துருக்கி பூகம்பத்தில் உயிரிழந்த மகளின் கையை பிடித்து அமர்ந்திருந்த தந்தை

கரமன்மராஸ்: துருக்கியின் கரமன் மராஸ் பகுதியில், நெஞ்சை உருக்கும் ஒரு காட்சியை ஏஎஃப்பி நிறுவனத்தின் போட்டோகிராபர் ஆடம் அல்தான் பார்த்துள்ளார். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட அந்த பகுதியில் மீட்பு குழுவினர் வந்து சேரவில்லை. இடிந்து நொறுங்கிய கட்டிடத்துக்கு வெளியே கடும் குளிரில் ஒருவர் மிகுந்த சோகத்துடன் அமர்ந்திருந்தார். அருகே சென்று பார்த்த போதுதான், இடிபாடுகளுக்கு இடையே தெரியும் விரல்களை பிடித்தபடி அவர் அமர்ந்திருந்தது தெரிந்தது. இந்த சோக காட்சியை தூரத்தில் இருந்து படம்பிடித்தார் ஆடம் அல்தான். போட்டோகிராபரை அருகில் … Read more

40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த பொருளால் அமெரிக்காவுக்கு அவஸ்தை| 40,000-foot flying object hits America

வாஷிங்டன் : அலாஸ்காவில், 40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த மர்ம பொருள், ஏவுகணை வாயிலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் வான் எல்லைக்குள் நுழைந்த சீனாவைச் சேர்ந்த பலுான் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த பலுான், உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. மேலும், சுட்டு வீழ்த்தப்பட்ட பலுானின் பாகங்களை ஒப்படைக்கவும் மறுத்தது. ஆனால், இந்த பலுான் தட்ப வெப்பநிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்டதாக சீனா கூறியுள்ளது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரமாகியுள்ள நிலையில், … Read more

பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதல் – 3 பேர் பலி

பாகிஸ்தானில், பாதுகாப்புப் படையினரின் வாகனத்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள கஜோரி சௌக் பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள், பணிநேரம் முடிந்து பலத்த பாதுகாப்புடன் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்கு பாதுகாப்புக்கு சென்ற படையின் வாகனத்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 3 சக்கர வாகனத்தை கொண்டு தீவிரவாதி ஒருவன் மோதியுள்ளான். இதில், சம்பவ இடத்திலே 3 பேர் உயிரிழந்த நிலையில், 20 பேர் காயமடைந்தனர்.  Source … Read more