சீனாவின் அடாவடிதனத்தை சகித்து கொள்ள முடியாது; அமெரிக்கா ஹீட்.!

இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய பிராந்தியங்கள் தங்களது நாட்டிற்கு சொந்தமானது என இரு நாடுகளும் உரிமை கோரி வருகின்றன. ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலகட்டத்தில் கடந்த 1962ம் ஆண்டு சீன போர் வெடித்தது. இதில் இந்தியா படுதோல்வி அடைந்து. இந்த தோல்வி குறித்த சிந்தனையிலேயே பிரதமர் நேரு உடல் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் கூறிவருகின்றனர். இந்தநிலையில் கடந்த … Read more

7 கிலோவில் பிறந்த ஆண் குழந்தை… உயரம் எவ்வளவு தெரியுமா?

பிரேசில் நாட்டில் உள்ள ஒரு பெண்மனி சமீபத்தில் 7.3 கிலோ எடையுடன் குழந்தையைப் பெற்றெடுத்தார். அங்கர்சன் சாண்டோஸ் என பெயரிடப்பட்ட அக்குழந்தை அறுவை சிகிச்சை மூலம் அமேசானாஸ் மாகாணத்தில் உள்ள பார்ண்டின்ஸ் பகுதியின் மருத்துவமனையில் பிரசவிக்கப்பட்டது.  2016இல் 6.8 கிலோ எடையில் பிறந்த பெண் குழந்தையை, அங்கர்சன் சாண்டோஸ் மிஞ்சியுள்ளது. எனினும், 1955இல் இத்தாலியில் பிறந்த 10.2 கிலோ எடையில் பிறந்த பெண் குழந்தை அவரால் நெருங்க முடியவில்லை என கூறப்படுகிறது. தற்போது, பெண் குழந்தை அங்கர்சனும், … Read more

கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக குடியிருப்பில் திடீர் தீ விபத்து..!

கிரிமியாவில் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக குடியிருப்புகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் எட்டு பேர் உயிரிழந்தனர். மின் சாதன பொருட்களில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. நெடுஞ்சாலை கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த இரண்டு மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்ட போது, அங்கு 185 பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்யாவின் புலனாய்வுக் குழுவினர் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source link

உக்ரைன் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள்: ரஷ்ய முன்னாள் ராணுவ வீரர் அதிர்ச்சி வாக்குமூலம்

கீவ்: “போரில் உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டனர், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்” என முன்னாள் ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். கோன்ஸ்டான்டின் எஃப்ரெமோவ் என்ற ராணுவ வீரர், ரஷ்யா – உக்ரைன் போரில் ரஷ்யா சார்பாக உக்ரைனில் போரிட்டவர். தற்போது அவர் போர்க்களத்திலிருந்து விலகியுள்ளார். அவரை துரோகி என்று ரஷ்யா அடையாளப்படுத்துகிறது. இந்த நிலையில், பிபிசி-க்கு கோன்ஸ்டான்டின் அளித்த நேர்காணலில் கோன்ஸ்டாண்டி பேசும்போது, “போரில் உக்ரைன் ஆண்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகினர். இந்தக் கொடுமைகள் … Read more

கரன்சி நோட்டுகளில் பிரிட்டன் அரசர் புகைப்படம் நீக்கம் – அரசு முடிவு!

ஆஸ்திரேலிய கரன்சி நோட்டுகளில் இருந்து பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லசின் புகைப்படத்தை நீக்குவது என அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது. பிரிட்டன் நாட்டின் காலனி நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா இருந்து வருகிறது. பிரிட்டன் ராணி 2வது எலிசபெத் இருந்த வரை அவரது உருவப் படங்கள் பதித்த கரன்சி நோட்டுகள் ஆஸ்திரேலியாவில் புழக்கத்தில் இருந்தன. அவர் மறைவுக்கு பின்னர், பிரிட்டன் அரசராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்றார். இதனை தொடர்ந்து, பழைய கரன்சி நோட்டுகளில் உள்ள ராணி உருவப் … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்: இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே போட்டி?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் 5 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. ஆனால் இப்போதில் இருந்தே அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் ஜனநாயக காட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அதே போல் கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் … Read more

Radioactive Danger: கதிரியக்க காப்ஸ்யூல் கிடைச்சிடுச்சு! நிம்மதி பெருமூச்சுவிடும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் தொலைந்து போன கதிரியக்க காப்ஸ்யூல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்நாட்டுக்கு அரசுக்கு ஆசுவாசம் ஏற்பட்டுள்ளது. மிகவும் சிறிய ஒரு  காப்ஸ்யூல், சொல்லப்போனால், ஒரு விரல் நகம் அளவில் உள்ள ஒரு காப்ஸ்யூல் உலகையே ஆட்டி வைத்தது என்றால் அதன் வீரியம் எப்படி இருக்கும் என்பதை அனுமானிக்க முடிகிறதா? அனுமானிப்பதைவிட, உண்மையின் அது எவ்வளவு ஆபத்தானது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். கடந்த ஒரு வாரமாக ஆஸ்திரேலிய அரசையும் மக்களையும் பீதியில் வைத்திருந்த காப்ஸ்யூல் காணமல் போனதும், சுமார் 14 … Read more

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா திட்டம்..!

போரின் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. போர் தொடங்கி இம்மாதம் 24-ம் தேதி இரண்டாமாண்டு தொடங்க உள்ள நிலையில், உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் ரஷ்யா ராணுவ பலத்தை அதிகரித்து வருவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டொனெட்ஸ்க் மாகாண நகரமான கிராமடோர்ஸ்கில் ஒரு அடுக்குமாடி கட்டடம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில், 3 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் படுகாயம் அடைந்தனர். Source link

உணவு, மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்… PoK பகுதியில் தீவிரமடையும் போராட்டம்!

பாகிஸ்தான் வரலாற்றில் இது வரை இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்து, பெரும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது. இங்கு பொது மக்கள் அத்தியாவசிய உணவு மற்றும் பானங்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. மக்கள் உணவின்றி தவிக்கும் நிலையில், சுத்தமான குடிநீரும் கூட கிடைக்காத அளவிற்கு நாட்டின் நிலைமை மோசமாகியுள்ளது. அதன் தாக்கம் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதாவது PoK பகுதியிலும் காணப்படுகிறது. அங்கு முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை மக்கள் பட்டினியால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால்,  … Read more

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரிட்டனில் போராட்டம் – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

லண்டன்: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரிட்டனில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பிரிட்டனில் கடந்த சில மாதங்களாக விலைவாசி அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இரு பிரதமர்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, தற்போது ரிஷி சுனக் பிரதமராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் ஓய்வூதியம், சம்பள உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள், … Read more