பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து-3 சிறுவர்கள் உள்பட 4 பேர் பலி

பிரேசிலில், பேருந்து பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஜூனியர் கால்பந்து அணியை சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். அலெம் பரைபா (Alem Paraiba) நகரில் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 28 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். Vila Maria Helena கால்பந்து கிளப்பை சேர்ந்த அணிகள், கோபா தேசிய போட்டியில் கோப்பையை வென்று திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. Source … Read more

பெஷாவர் மசூதி குண்டுவெடிப்பில் பலி 92 ஆக அதிகரிப்பு; தாக்குதலுக்கு பாக். தலிபான்கள் பொறுப்பேற்பு

பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் மசூதியில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்கவா மாகாணத் தலைநகர் பெஷாவரில் பாதுகாப்பு மிகுந்த போலீஸ் லைன் பகுதி உள்ளது. இங்குள்ள மசூதியில் நேற்று மதியம் முஸ்ஸிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் மசூதி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. காவல் துறையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து, … Read more

பிரதமர் மோடி குறித்த BBC ஆவணப்படம் – ரஷ்யா பரபரப்பு கருத்து!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படம் குறித்து ரஷ்யா பரபரப்பு கருத்து தெரிவித்து உள்ளது. குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மதக் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரம் நடைபெற்ற போது குஜராத்தின் முதலமைச்சராக இருந்தவர் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி. இதனிடையே, குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. “இந்தியா: மோடி கேள்விகள்” என்ற … Read more

கனடாவில் இந்துக் கோயில் சேதம்! வலுவான கண்டத்தை பதிவு செய்த இந்திய தூதரகம்!

கனடாவில் உள்ள பிராம்ப்டனில் உள்ள ஒரு இந்து கோவில், இந்தியாவுக்கு எதிரான  வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. இது  இந்திய சமூகத்தினரிடையே சீற்றத்தைத் தூண்டியுள்ளது. டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் திங்கள்கிழமை (உள்ளூர் நேரப்படி) கௌரி சங்கர் மந்திரில் நடந்த நாசவேலைக்கு கண்டனம் தெரிவித்தது. இந்தச் செயல் கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் உணர்வுகளை மிகவும் புண்படுத்தியுள்ளது என்று கூறினார்.  தூதரக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய பாரம்பரியத்தின் சின்னமான பிராம்ப்டனில் உள்ள கௌரி சங்கர் கோயிலில், இந்திய … Read more

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கரை ஒதுங்கிய 35 அடி நீளமுள்ள ராட்சத திமிங்கலம்!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள லிடோ கடற்கரையில் ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. ஹெம்ப்ஸ்டெட் நகரில் உள்ள அந்த கடற்கரையில், 35 அடி நீளமுள்ள ஹம்ப்பேக் திமிங்கலமொன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் கரை ஒதுங்கி பின்னர் உயிரிழந்தது. கடற்கரையில் மிதந்த திமிங்கலத்தின் உடலில் கயிற்றைக் கட்டி அதிகாரிகள் கரைக்குக் கொண்டு வந்தனர்.    Source link

போராட்டம் நடத்திய இந்தியர்கள் மீது தாக்குதல்: ஆஸி.,யில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்| Protesting Indians Attacked: Khalistan Supporters Atrocity in Aus

மெல்போர்ன்-ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடத்திய இந்தியர்கள் மீது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் காயம் அடைந்தனர். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு எதிராக, இங்கு வசிக்கும் காலிஸ்தான் சீக்கிய ஆதரவாளர்கள் சமீப காலமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹிந்து கோவில்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதுடன், கோவில் சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான வாசகத்தையும் எழுதி வருகின்றனர். இதற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய துாதரகம் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. துாதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: அமெரிக்காவை மையமாக … Read more

பெஷாவர் மசூதி குண்டுவெடிப்பு; பின்வாங்கிய தலிபான்கள்- அப்ப செஞ்சது யார்?

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மசூதிகளில் வழிபாட்டிற்கு செல்வர். அதில் அதிகாரிகள் மட்டும் 300 முதல் 400 பேர் வரை இருப்பர். இந்நிலையில் நேற்று பிற்பகல் மசூதி ஒன்றில் திடீரென குண்டுவெடித்தது. இதில் அந்த மசூதியின் பெரும்பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதுபற்றி தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பலி எண்ணிக்கை உயர்வு தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றி காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. … Read more

2023ம் ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1%: சர்வதேச நிதியம் கணிப்பு| Indias economic growth to 6.1% in 2023: International Finance Project

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: 2023ம் ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1% ஆக இருக்கும். 2024ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 6.8 ஆக உயரும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது. இது குறித்து சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்டுள்ள அறிக்கை: 2023ம் ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1% ஆக இருக்கும். 2024ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 6.8 ஆக உயரும். உலகப் பொருளாதாரத்தை பொறுத்த வரையில், 2022ல் கணிக்கப்பட்டுள்ள 3.4 சதவீதத்தில் … Read more

ஃப்ளோரிடா துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயம்: ஜனவரியில் மட்டும் அமெரிக்காவில் 3 சம்பவங்கள்

ஃப்ளோரிடா: அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர். சம்பவம் ஃப்ளோரிடாவின் ப்ளம் நகரில் அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.43 மணிக்கு நடந்துள்ளது. இதனை லேக்லேண்ட் காவல்துறை உறுதி செய்துள்ளது. போலீஸ் விசாரணையின்படி சம்பவ இடத்தில் நின்றிருந்த ஒரு நீல நிற காரில் இருந்த 4 பேர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அந்தக் காரின் 4 ஜன்னல்களும் ஒரே நேரத்தில் இறக்கிவிடப்பட்டு துப்பாக்கிச் சூடு ஒரே நேரத்தில் நடத்தப்பட்டுள்ளது. … Read more