சீனாவுடன் ராணுவ, அரசியல் உறவை வலுப்படுத்த நம்பிக்கை தெரிவித்த ரஷ்ய அதிபர்..

சீனாவுடனான, ராணுவ மற்றும் அரசியல் ரீதியிலான ஒத்துழைப்பை பலப்படுத்த விரும்புவதாக ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் தெரிவித்துள்ளார். காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற சந்திப்பில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்து வரும் நிலையில், எதிர்கொள்ள ரஷ்யாவுடன், சீனா இணைந்து எடுத்துவரும் முயற்சிகளுக்கு புதின் பாராட்டு தெரிவித்தார். மேலும், ரஷ்யாவிற்கு அரசுமுறை பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகையை எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார். இதனிடையே, இக்கட்டான … Read more

2025க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியா: ஜெய்சங்கர் உறுதி| Our goal is to make India a major manufacturing hub and to emerge as a $5 trillion economy by 2025

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நிகோசியா: 2025க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதே இலக்காக நிர்ணயித்துள்ளோம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியாக கூறியுள்ளார். சைப்ரஸ் சென்றுள்ள ஜெய்சங்கர், நிகோசியா நகரில் நடந்த தொழில் மாநாட்டில் பங்கேற்று பேசியதாவது: உலக பொருளாதாரத்தில் இந்தியா தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மூலம் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள், அன்னிய நேரடி முதலீட்டிற்கான வலுவான இலக்குகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றியது. … Read more

ஆங் சான் சூச்சிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை: மியான்மர் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு

நேபிதாவ்: மியான்மரில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான ஆங் சான் சூச்சி-க்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மியான்மரில் ஜனநாயகபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராகவும், அந்நாட்டின் ஆட்சியாளராகவும் இருந்தவர் ஆங் சான் சூச்சி. இவரது ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம் கவிழ்த்தது. மேலும், ரகசிய காப்பு பிரமாணத்தை மீறியது உள்பட 14 குற்றச்சாட்டுக்களைக் கூறி அவரை வீட்டுச் சிறையில் அடைத்தது. அதோடு, மேலும் 19 … Read more

இனிமேலும் சீனாவை நம்ப முடியாது; அமெரிக்கா முக்கிய நகர்வு.!

கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது, சுகாதாரத் துறைக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய பரவலுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் உருமாறிய பிஎப் 7 வகை தொற்று காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த வகை தொற்றால், அடுத்த மூன்று மாதங்களில், சீனாவின் … Read more

ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த மியான்மர் நீதிமன்றம்!

யாங்கூன்: மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஆட்சியாளருமான ஆங் சான் சூகிக்கு ஊழல் குற்றச்சாட்டில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மியான்மரில் உள்ள ராணுவ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. 18 மாதங்களாக நீடித்த வழக்கு விசாரணைக்கு பிறகு அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது மொத்த தண்டனை 33 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளில் சூகிக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020ம் ஆண்டு நடந்த … Read more

சீனாவில் ருத்ர தாண்டவமாடும் கொரோனா; உலக சுகாதார அமைப்பு கவலை!

சீனாவில், கொரோனா வைரஸ் தொற்றின் எழுச்சியால் உலக சுகாதார அமைப்பு கவலை கொண்டுள்ளதாக அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்து உள்ளார். அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை … Read more

ஒரேநாளில் 120 ஏவுகணைகளை தொடர்ந்து ட்ரோன் தாக்குதல்; வேகம் காட்டும் ரஷ்யா .!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்ததது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் கடந்த 10 மாதங்களாக போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. கடந்த 10 மாதங்களாக நீண்டு வரும் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கும் தயங்காது என ரஷ்ய அதிபர் புதின் கடந்த டிசம்பர் 3ம் … Read more

ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த ராணுவ நீதிமன்றம்| Aung San Suu Kyi jailed for a further seven years

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நைபைடவ்: மியான்மர் நாட்டு தலைவர் ஆங் சான் சூகிக்கு, ஏற்கனவே 12 வழக்குகளில் 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த அந்நாட்டு ராணுவ நீதிமன்றம், தற்போது 5 ஊழல் வழக்குகளில் அவருக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (வயது 77). இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் … Read more

ஊழல் வழக்கு: ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை!

ஊழல் வழக்கில், ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. எனினும், தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம், ஜனநாயக அரசை கவிழ்த்து … Read more

பிரதமர் மோடியின் தாயார் மறைவு: உலக தலைவர்கள் இரங்கல்| World Leaders Mourn Death Of PM Modi’s Mother

டோக்கியோ: தாயார் ஹீராபென் மறைவுக்காக பிரதமர் மோடிக்கு, ஜப்பான், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். உடல்நலக்குறைவால் ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று (டிச.,30) அதிகாலை 3 : 30 மணியளவில் காலமானார். வீட்டில் மரியாதை செலுத்திய பிறகு, தாயார் உடலை மோடி சுமந்து வந்தார். காந்தி நகரில் உள்ள மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. … Read more