அமெரிக்க அதிபர் மாளிகையில் ஜோபைடன் பேத்திக்கு எளிமையான முறையில் நடந்த திருமணம்..!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்தி நவோமிக்கு, வெள்ளை மாளிகையில் திருமணம் நடந்தது. வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியிலுள்ள புல்வெளியில் எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண வரவேற்பில் இருதரப்பு உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். 28 வயதான நவோமி, தன்னுடன் சட்டக்கல்லூரியில் பயின்ற 25 வயதான பீட்டரை மணம் முடித்தார். அதிபர் ஜோபைடன் அவரது மனைவி ஜில்பைடன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வெள்ளை மாளிகையில் அதிபரின் குடும்ப திருமண விழா நடைபெறுவதே இதுவே முதன்முறை என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. Source … Read more

4 குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: ரஷ்யாவின் அடுக்கு மாடிகுடியிருப்பில் நடந்த காஸ் கசிவு விபத்தில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவின் தென்கிழக்கு பகுதியை சேர்ந்த ஷாக்லீன் தீவில் இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. இது குறித்து அம்மாகாண கவர்னர் வலோரி லிமாரென்கோ கூறுகையில் மாஸ்கோ நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. 1980 ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. முதற்கட்ட தகவலன்படி … Read more

சீனாவில் 5 மாதங்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு

பெய்ஜிங், சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் வரை ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், இந்த மாதம் கொரோனா தொற்று மளமளவென உயர்ந்து, தினசரி 25 ஆயிரம் பாதிப்புகள் வரை பதிவாகி வருகிறது. இருப்பினும் அங்கு கொரோனாவால் உயிரிழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படாமலேயே இருந்து வந்தது. சீனாவில் கடைசியாக கடந்த மே 26-ந்தேதி கொரோனாவால் ஒருவர் உயிரிழந்தார். அதன் பிறகு கடந்த 5 … Read more

பெரிய ஆபத்து… ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுஉலை மீது தொடர் தாக்குதல் – எச்சரிக்கும் ஐநா

ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில், ரஷ்யா, உக்ரைன் என இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான மக்களும், போர் வீரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  வீடுகளை இழந்து அண்டை நாடுகளுக்கு உக்ரைனிய மக்கள் பலரும் அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர். மேலும், ரஷ்யா இதில் போர் நெறிமுறைகளை மீறி செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தன.  மேலும், உக்ரைனில் உள்ள பல்வேறு அணுமின் நிலையங்கள் தொடர் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு … Read more

நேபாளத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது…!

காத்மண்டு, நேபாளத்தில் 275 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றம், 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 7 மாகாணங்களிலும் 1.79 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். நாடாளுமன்றத்துக்கான 275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடி வாக்கு மூலமாகவும், மீதமுள்ள 110 … Read more

அமெரிக்காவில் ஆற்றில் தவறி விழுந்த 80 வயது முதியவரை கண்டுபிடித்த போலீஸ் நாய்

வாஷிங்டன், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் 80 வயதான முதியவர் ஒருவர் காட்டில் வேட்டைக்குச் சென்ற போது, ஆற்றில் தவறி விழுந்துள்ளார். மேலும் காட்டுப் பகுதியில் அவர் தொலைந்து போனதற்கு அடையாளமாக 3 முறை துப்பாக்கியால் சுட்ட சத்தத்தை அந்த முதியவரின் மனைவி கேட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், முதியவரை தேடும் பணியில் கே9-லோகி என்ற போலீஸ் நாய் களமிறக்கப்பட்டது. நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு ஆசேபில் என்ற ஆற்றின் கரையோரமாக முதியவரை அந்த … Read more

டொனால்டு டிரம்ப் டுவிட்டர் கணக்கின் தடை நீக்கம் – எலான் மஸ்க் அறிவிப்பு

வாஷிங்டன், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு முடக்கப்பட்டது. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக டொனால்டு டிரம்பின் கணக்கு முடக்கப்பட்டது. தற்போது டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியிருக்கும் நிலையில் டிரம்பிற்கு மீண்டும் அவரது டுவிட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுமா? என்பது குறித்த விவாதங்கள் அதிகரித்தது. இதனையடுத்து, டொனால்டு டிரம்பை டுவிட்டரில் மீண்டும் சேர்க்கலாமா என்பது குறித்து எலான் மஸ்க் டுவிட்டரில் வாக்கெடுப்பை நடத்தினார். இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலானவர்கள் … Read more

2வது டி-20யில் இந்தியா அபார வெற்றி| Dinamalar

மவுன்ட் மவுன்கனுயு: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சூர்ய குமார் அதிரடியாக விளையாடி சதமடித்தார். இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 2வது டி-20 போட்டி இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பவுலிங் செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் சிராஜ் மற்றும் … Read more

சிரியாவின் கோபேன் நகரில் துருக்கி ஏவுகணை தாக்குதல்

கோபனே, சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2011-முதல் நடைபெற்று வரும் இந்த போரால் பெண்கள், குழந்தைகள் உள்பட அந்நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், சிரியாவின் வடக்கு மாகாணங்களை குறி வைத்து துருக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரிய-குர்திஷ் படைகள் கட்டுப்பாட்டில் உள்ள கோபனே நகரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியாவின் சிரியாவின் வடக்கு … Read more

'மக்கள் தீர்ப்பே; இறைவன் தீர்ப்பு' – ட்ரம்ப் ட்விட்டர் தடையை நீக்கிய மஸ்க் கருத்து

சான் ஃப்ரான்சிஸ்கோ: 22 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ட்விட்டரில் இணைந்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பை மீண்டும் சமூக வலைதளங்களில் அனுமதிக்கலாமா என்று யோசனை கோரி ட்விட்டர் தளத்தில் வாக்கெடுப்பை நடத்தினார் அதன் உரிமையாளர் எலான் மஸ்க். வெள்ளிக்கிழமை அவர் வாக்கெடுப்பை தொடங்கினார். 24 மணி நேரம் வாக்கெடுப்பு நடந்த நிலையில் ட்விட்டரில் 237 மில்லியன் வாடிக்கையாளர்களில் 15 மில்லியன் பேர் வாக்களித்திருந்தனர். இதில் 48.2 சதவீத பேர் … Read more