பிரேசில் நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் சூறை: ஐ.நா. சபை, அமெரிக்கா கடும் கண்டம்

ரியோ டி ஜெனரீயோ: பிரேசில் நாட்டில் அதன் முன்னாள் அதிபர் ஜேர் போல்சனரோ ஆதரவாளர்கள் நாடாளுமன்றம், உச்ச நீதிமன்ற கட்டிடங்களை சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு ஐ.நா. சபையும், அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரேசிலில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் போல்சனரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், வாக்கு வித்தியாசம் … Read more

புதிய அரசுக்கு எதிராக இஸ்ரேலில் போராட்டம் | Protests in Israel against the new government

டெல் அவிவ் : இஸ்ரேலில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு நீதித்துறையை கட்டுப்படுத்தும் வகையில் அறிவித்துள்ள கொள்கையை வாபஸ் பெற வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேற்காசிய நாடான இஸ்ரேலில் கடந்த மாதம் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் வலதுசாரி கூட்டணி வெற்றி பெற்று, பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக மீண்டும் பதவியேற்றார். இந்நிலையில் புதிய அரசுக்கு எதிராக இங்கு போராட்டம் வெடித்துள்ளது. குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தையும், நீதித்துறையையும் பலவீனப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கொள்கையை கண்டித்து, இந்த போராட்டம் … Read more

அரசு நிகழ்ச்சியில் பேண்ட் சட்டையில் சிறுநீர் கழித்த சூடான் அதிபர்.. வீடியோ காட்சிகள் பரவிய நிலையில், பத்திரிகையாளர்கள் 6 பேர் கைது!

அரசு நிகழ்ச்சி ஒன்றில் தெற்கு சூடான் அதிபர் சல்வா கீர் தனது கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், வீடியோவை பகிர்ந்ததாக கூறி பத்திரிகையாளர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டின் அரசு நிகழ்ச்சியில், தேசிய கீதம் இசைக்கப்படும் போது அதிபர் சல்வா கீர் அவரது கால்சட்டையில் சிறுநீர் கழித்தது அங்கிருந்த கேமராக்களில் பதிவானது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்படவில்லை என்றாலும், அதுகுறித்த வீடியோ காட்சி இணையத்தில் பரவியது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட அரசு … Read more

ரஷ்ய தாக்குதலில் 600 உக்ரைன் வீரர்கள் பலி – ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனின் கிழக்குப்பகுதியில் ராக்கெட் வீசி நடத்திய தாக்குதலில் 600 வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அண்மையில் மகீவ்கா நகரில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் 89 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, இந்த பயங்கரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிழக்கு உக்ரைனில் உக்ரைன் வீரர்கள் தங்கியிருந்த தற்காலிக ராணுவ தளத்தின் மீது ரஷ்ய படைகள் அடுத்தடுத்து ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனிடையே, ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று கிராமடோர்ஸ்க் மேயர் தெரிவித்துள்ளார்.  … Read more

தாலிபான்கள் 25 பேரை கொன்றேன்: சுயசரிதையில் ஹாரி தகவல்

ஆப்கானிஸ்தானில் ராணுவ சேவையாற்றியபோது 25 தாலிபான்களைச் சுட்டுக் கொன்றதாக இங்கிலாந்து இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார். தனது நினைவுக் குறிப்புகளை ஸ்பேர் என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகமாக அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர், தாலிபான்களை தான் மனிதர்களாகப் பார்க்கவில்லை என்றும்,  அகற்றப்பட வேண்டிய சதுரங்கக் காய்களாக அவர்களை கருதியதாகவும் குறிப்பிட்டுள்ளார். 17வது வயதில் தனது கன்னித்தன்மையை வயது முதிர்ந்த பெண்ணிடம் இழந்தது,  கொகைன் போதைப் பொருளை பலமுறை எடுத்து கொண்டது உள்ளிட்ட தகவல்களையும் ஹாரி பகிர்ந்துள்ளார்.  Source link

நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் அவசரமாக தரையிறங்கிய விமானம்| Flight made emergency landing due to mid-air bomb threat

டோக்கியோ : ஜப்பானில், நடுவானில் சென்ற பயணியர் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், அவசரமாக தரையிறக்கப்பட்டது. கிழக்காசிய நாடான ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இருந்து கியூஷி தீவில் உள்ள புகுவோவாவுக்கு பயணியர் விமானம் நேற்று புறப்பட்டது. அதில் ஆறு விமான ஊழியர்கள், 136 பயணியர் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர், தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். ஆங்கிலத்தில் பேசிய அவர், ஜெர்மனியில் இருந்து … Read more

பாக்.கில் உணவு பஞ்சம் மானிய விலையில் மாவு வாங்க சென்றவர் உயிரிழப்பு

லாகூர்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், சிந்து மாகாண அரசு மானிய விலையில் மாவு விற்பனையை மேற்கொண்டுள்ளது. மிர்புர்காஸ் மாவட்டத்தில், நேற்று முன்தினம் லாரிகளில் தலா 10 கிலோ எடையுள்ள மாவு மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. ஒரு கிலோ மாவு ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை வாங்குவதற்கு கூட்டம் முண்டியடித்தது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 40 வயது தொழிலாளி ஹர்சிங் கோல்ஹி என்பவர் உயிரிழந்தார். … Read more