சீனாவில் திருமணமாகாதவர்கள் சட்டப்பூர்வமாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி

பீஜிங், சீனாவில் சமீப ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும் அங்கு பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் மக்கள் தொகை சரிந்துள்ளது. எனவே நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அங்கு பல ஆண்டுகளாக அமலில் இருந்த ஒரே குழந்தை கொள்கையை கடந்த 2016-ம் ஆண்டு அரசு … Read more

ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது, இந்தியாவுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல் – 413 பக்க அறிக்கையில் அதானி குழுமம் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டுஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் சமீபத்தில் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், “அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக அபரிமிதமாக உயர்ந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளது. மேலும், போலி நிறுவனங்களைத் தொடங்கிவரி ஏய்ப்பிலும், பண மோசடி யிலும்ஈடுபட்டுள்ளனர்” என கூறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தன. இதற்கு, அதானி குழுமம் 413 பக்கங்களைக் கொண்ட மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது, உள்நோக்கம் … Read more

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே அண்மைக்காலமாக நடந்த வன்முறைகளுக்கு போப் பிரான்சிஸ் கடும் கண்டனம்

ரோம், புனித பூமியில் அமைதிக்கு அழைப்பு விடுக்கும் போது, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே அண்மைக்காலமாக வன்முறை அதிகரித்து வருவதற்கு போப் பிரான்சிஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக ரோமில் நிகழ்வு ஒன்றில் பேசிய போப் பிரான்சிஸ், “இஸ்ரேல் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருப்பதை அறிந்து நான் கவலை கொள்கிறேன். மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யூதர்கள் கொல்லப்பட்டதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. புனித பூமியான ஜெருசலேமிலிருந்து வரும் செய்திகள் என்னை மிகவும் வேதனை அடையச் … Read more

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு.. 150க்கும் மேற்பட்டோர் காயம்!

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாதுகாப்பு மிகுந்த காவலர் குடியிருப்பு அருகே உள்ள மசூதியில் மதியத் தொழுகையின்போது பயங்கரவாதி, தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் மசூதியின் 2 மாடிகள் இடிந்து தரைமட்டமாகின. கட்டிட இடிபாடுகளுக்கு இடையே ஏராளமான உடல்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. Source link

போரில் ரஷியாவை வீழ்த்திவிடலாம் என நம்புவது முட்டாள்தனம் – குரோஷியா அதிபர்

சஹ்ரெப், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 341-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி … Read more

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல் – குண்டுவெடிப்பில் 47 பேர் உயிரிழப்பு

பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 47 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்கவா மாகாணத் தலைநகர் பெஷாவரில் பாதுகாப்பு மிகுந்த போலீஸ் லைன் பகுதி உள்ளது. இங்குள்ள மசூதியில் நேற்று மதியம் முஸ்ஸிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் மசூதி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால், அங்கு பதற்றமான சூழல் … Read more

நைஜீரியா சாலை விபத்துகளில் குழந்தைகள் உட்பட 20 பேர் பலி| 20 killed in Nigeria road accidents, including children

அபுஜா : நைஜீரியாவில் நேற்று முன்தினம் நடந்த இருவேறு சாலை விபத்துகளில், இரு குழந்தைகள் உட்பட 20 பேர் பலியாகினர். இதில் ஒரு விபத்தில் 11 பயணியர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்ரிக்கா நாடான நைஜீரியாவில் மிகப்பெரிய வணிக நகரான லாகோசில் உள்ள பாலத்தில், நேற்று கன்டெய்னர் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பஸ் மீது மோதியது. இதில் லாரி பஸ்சின் மீது விழுந்ததையடுத்து, இடிபாடுகளில் சிக்கி இரு … Read more

பாக்., மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல்: 48 பேர் பரிதாப பலி; 157 பேர் காயம்| Suicide attack on mosque in Pak.: 48 dead; 157 people were injured

பெஷாவர்: பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு நிறைந்த போலீஸ் வளாகத்தில் உள்ள மசூதியில் தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில், 48 பேர் கொல்லப்பட்டனர்; ௧57 பேர் காயமடைந்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று மதியம் தொழுகைக்காக மக்கள் கூடியிருந்தனர். போலீஸ் எஸ்.பி., அலுவலகம், போலீஸ் குடியிருப்பு அமைந்துள்ள இந்தப் பகுதி, பலத்த பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் அமைந்துள்ள இந்த மசூதியில், … Read more