கர்ப்பிணி எம்.பி.,யை தாக்கிய 2 எம்.பி.,க்களுக்கு 6 மாதம் சிறை| 2 MPs jailed for 6 months for assaulting pregnant MP

தாகர் : செனகல் நாட்டு பார்லிமென்டில் கர்ப்பிணி எம்.பி.,யை தாக்கிய இரண்டு எம்.பி.,க்களுக்கு, தலா ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேற்கு ஆப்ரிக்க நாடான செனகல் பார்லி.,யில் கடந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் மோதலாக மாறியது. அப்போது, ஆளுங்கட்சி எம்.பி.,யான ஆமி என்டியாயோ கினிபியை, எதிர்க்கட்சி எம்.பி., மசாதா சாம்ப், கன்னத்தில் அறைந்தார். பதிலுக்கு தாக்க முயன்ற கினிபியின் வயிற்றில் மசாதாவும், … Read more

முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் உடல் அடக்கம்

வாட்டிகன் சிட்டி: முன்னாள் போப் இரண்டாம் ஜான் பால் மறைவுக்குப் பிறகு போப் ஆண்டவராக பதவியேற்றவர் பதினாறாம் பெனடிக்ட். ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில் 1927-ல் பிறந்த இவரது இயற்பெயர் ஜோசப் அலாய்சியஸ் ரட்சிங்கர். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், அந்த மதத்தின் முக்கிய பொறுப்புகள் பலவற்றை வகித்தவர். இந்நிலையில் போப் ஆக இருந்த இரண்டாம் ஜான்பால் மறைவை தொடர்ந்து கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி போப் ஆண்டவராக ஆக பொறுப்பேற்றார். … Read more

ஜப்பானில் சுமார் 2.25 கோடிக்கு ஏலம்போன 212 கிலோ எடையிலான சூரை மீன்..!

ஜப்பானில், 212 கிலோ எடையிலான சூரை மீன், இரண்டேகால் கோடி ரூபாய்க்கு ஏலம்போனது. ஆண்டுதோறும், புத்தாண்டை முன்னிட்டு தொயோசு மீன் சந்தையில் நடைபெறும் ஏல நிகழ்வில், கடந்தாண்டு, ஒரு கோடியே 5 லட்ச ரூபாய்க்கு சூரை மீனை ஏலம் எடுத்த சுஷி கின்சா என்ற நட்சத்திர விடுதி, இந்தாண்டு அதே எடையிலான மீனை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் சூரை மீன் விலை வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. Source link

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் ஆஸ்திரேலிய நகரம் – அவசர நிலை பிரகடனம்

சிட்னி, மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பகுதியில் கடந்த புதன்கிழமை கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அந்நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. அங்குள்ள பிட்ஸ்ராய் ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த ஆற்றின் கரையோர மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்புப்படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணிகள் … Read more

உக்ரைனில் 2 நாட்கள் போர் நிறுத்தம்: ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பு

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ரஷ்யா தொடுத்த இந்த போர ஓரு ஆண்டை நெருங்கி செல்கிறது. எனினும், போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தற்போது வரை தெரியவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதரவு கொடுப்பதால் ரஷியாவுக்கு எதிராக போரில் வலுவாக சண்டையிட்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைனில் இரண்டு நாள் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரண்டு … Read more

அமெரிக்காவில் சுழன்றடித்த சூறாவளிக் காற்றால் மக்கள் பீதி – தானிய களஞ்சியம் கடும் சேதம்

வாஷிங்டன், அமெரிக்காவின் மத்திய இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள மேகன் கவுண்ட்டி பகுதியில் சூறாவளிக் காற்று வீசியது. அங்குள்ள காற்றாலைகளின் அருகே சூறைக்காற்று மையம் கொண்டு வீசியதால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். மத்திய இல்லினாய்ஸ் பகுதியில் 6 சூறாவளி சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக அந்நாட்டின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில் மேகன் கவுண்ட்டி பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றால் அங்கிருந்த தானிய களஞ்சியம் கடுமையாக … Read more

அமெரிக்காவில் தம்பதி, குழந்தைகளுடன் மலையில் கவிழ்ந்த டெஸ்லா கார்; திடுக் பின்னணி…

கலிபோர்னியா, அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் டெவில் ஸ்லைடு என்ற செங்குத்து பாறைகள் நிறைந்த மலைப்பாங்கான பகுதி உள்ளது. இந்த பகுதி வழியே மலையேற்ற வீரர்கள், சைக்கிள் ரேஸ் வீரர்கள் என சாகசகங்களில் ஈடுபடுவோர் செல்வதுண்டு. இந்த பகுதி அதிக ஆபத்து நிறைந்து, விபத்து ஏற்படுத்த கூடிய பகுதியாக அறியப்படுகிறது. இந்த நிலையில், இந்திய வம்சாவளியான தர்மேஷ் ஏ பட்டேல் (வயது 41) என்பவர் தனது மனைவி, 9 வயது மகன் மற்றும் 4 வயது மகள் ஆகியோருடன் … Read more