பிரிட்டனில் 18 வயது வரை மாணவர்களுக்கு கணிதம் கட்டாயம்: ரிஷி சுனக் விருப்பம்

லண்டன்: பிரிட்டனில் உள்ள அனைத்து மாணவர்களும் 18 வயது நிரம்பும் வரை கணிதத்தை ஒரு பிரிவாக படிக்க வேண்டும் என்பதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக, அந்நாட்டுப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறும்போது, “18 வயது வரை ஏதேனும் ஒருவகையில் கணிதத்தைப் படிக்க வேண்டும் என்று நமது பிள்ளைகளை கட்டாயப்படுத்தாத சில நாடுகளில் நாமும் ஒருவராக இருக்கிறோம். தற்போது நமது நாட்டில் ​​16-19 வயதுடையவர்களில் பாதி பேர் மட்டுமே ஏதேனும் … Read more

கரோனாவின் உண்மை பாதிப்பை சீனா குறைத்துக் காட்டுகிறது – உலக சுகாதார அமைப்பு குற்றச்சாட்டு

நியூயார்க்: கரோனாவின் உண்மையான பாதிப்பை சீனா குறைத்துக் காட்டுவதாக உலக சுகாதார அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. சீனாவில் கரோனா பாதிப்பு தற்போது எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து உலக நாடுகள் பலவும் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில், ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு, கரோனாவின் உண்மையான பாதிப்பு குறித்த தரவுகளை தருமாறு சீனாவை கடந்த வாரம் வலியுறுத்தியது. இதையடுத்து, சீனா சில தகவல்களை பகிர்ந்துகொண்டது. அதில், டிசம்பர் மாதத்திலிருந்து இதுவரை 22 கரோனா இறப்புகள் மட்டுமே … Read more

Sri Lanka Milk: பால் உற்பத்தியில் தன்னிறைவடைய இலங்கைக்கு உதவும் இந்தியா

நியூடெல்லி: பால் உற்பத்தியை தன்னிறைவு அடையச் செய்யும் முயற்சியில், இலங்கை இந்தியாவின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) மற்றும் சந்தைத் தலைவர் அமுல் ஆகியோரிடமிருந்து தொழில்நுட்ப உதவியை நாடியுள்ளது, இது 1990 களின் பிற்பகுதியில் தீவு முயற்சித்த ஒத்துழைப்பை மீட்டெடுக்கிறது, ஆனால் அந்த  முயற்சி அப்போது தோல்வியடைந்த நிலையில், மீண்டும் இந்தியாவில் இருந்து தொழில்நுட்ப உதவிகளைப் பெறும் முயற்சிகளை இலங்கை முன்னெடுத்துள்ளது. இலங்கையின் விவசாய அமைச்சகம் மற்றும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் அதிகாரிகள், இந்தியாவில் … Read more

“என்னை அடித்து கீழே தள்ளினார் வில்லியம்” – ஹாரி பகிர்ந்த அதிர்ச்சித் தகவல்கள்

லண்டன்: தனது சகோதரர் வில்லியம் தன்னை அடித்து கீழே தள்ளி காயம் ஏற்படுத்தியதாக இளவரசர் ஹாரி அதிர்ச்சித் தகவல்களைப் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் சுயசரிதை புத்தகமான ‘ஸ்பேர்’ (Spare) இம்மாதம் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. அதில், தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவங்கள் பலவற்றை பதிவிட்டுள்ளார். குறிப்பாக, மேகன் மார்கல் உடனான தனது காதலுக்கு இளவரசர் வில்லியம் எவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறித்தும், அவர் தன்னை தாக்கியது குறித்தும் ஹாரி அதில் குறிப்பிட்டுள்ளார். … Read more

இங்கிலாந்து அரச குடும்பத்தில் மோதல்: ஹாரியை தாக்கினாரா வில்லியம்ஸ்?

மேகன் மார்கலை திருமணம் செய்யும் விவகாரத்தில் தமது சகோதரர் வில்லியம்ஸ் தனது கழுத்தை பிடித்து தாக்கி தரையில் தள்ளியதாக இளவரசர் ஹாரி தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதியுள்ளதாக தி கார்டியன் செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு பின்னர் அந்நாட்டின் அரசராகியுள்ள சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகனான இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகனும் காதலித்து, அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால், ஏற்கனவே திருமணமான, … Read more

18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான் நிறுவனம்?

பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டதாலும், நிறுவனத்தின் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மையாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக, அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜெஸ்ஸி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், பொருளாதார மந்தம், பணவீக்கம் உள்ளிட்டவற்றால், செலவுகளை குறைக்கும் நோக்கில், இந்த முடிவு எடுக்க … Read more

வெளிநாடுவாழ் இந்தியர் விருதுக்கு இலங்கையின் சிவக்குமார் நடேசன் தேர்வு | Sivakumar Natesan of Sri Lanka selected for Overseas Indian Award

கொழும்பு : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் பிரவாசி பாரதீய சம்மான் விருதுக்கு, இலங்கையின் வீரகேசரி தமிழ் நாளிதழின் நிர்வாக ஆசிரியர் சிவக்குமார் நடேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் இந்தியர்களைப் பாதுகாக்கும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் பிரவாசி பாரதீய சம்மான் விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. நம் நாட்டின் உயரிய விருதான இதற்கு, இலங்கையைச் சேர்ந்த வீரகேசரி தமிழ் நாளிதழின் நிர்வாக ஆசிரியரான சிவக்குமார் நடேசன், தேர்வு … Read more

பாகிஸ்தானில், சிலிண்டர் தட்டுப்பாடு – பிளாஸ்டிக் பைகளில் எரிவாயு நிரப்பி செல்லும் மக்கள்..!

பாகிஸ்தானில், சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் பிளாஸ்டிக் பைகளில் எரிவாயு நிரப்பி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்கள் அன்றாட வாழ்வில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அங்கு வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் சிலிண்டர் உற்பத்தி போதிய அளவு இல்லாததால், சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கைபர் பக்துங்வா மாகாணத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையால், மக்கள் … Read more

கடினமான பொருளாதார சூழல்: 18 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது அமேசான்!| Difficult economic environment: Amazon laid off 18 thousand employees!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: கடினமான பொருளாதார சூழலை காரணம் காட்டி, ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மேலும் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் உலகம் முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். கடந்த ஆண்டு நவ.,ல் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. செலவினங்களைக் குறைப்பதற்காக இந்த லே ஆஃப் நடவடிக்கையை செய்ததாக அமேசான் தெரிவித்தது. இந்நிலையில், இன்று காலை, அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி … Read more

'18 ஆயிரம் பேரை தூக்க போறோம்…' – ஓப்பனாக அறிவித்த பிரபல நிறுவனத்தின் சிஇஓ… என்னங்க சொல்றீங்க?

பொருளாதார மந்தநிலை, நிறுவனங்களின் நிதி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பிரபல தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கப் படலத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்குறைப்பு நடவடிக்கை ஒன்றும் தனியார் துறையில் புதிதில்லை என்றாலும், கரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதாரம் சற்று மீண்டெழும் நேரத்தில் மீண்டும் ஆட்குறைப்பு என்பது பலரின் வாழ்க்கையை புரட்டிப்போட வாய்ப்புள்ளது. தற்போது, இந்த பணிநீக்க டிரெண்டை ஆரம்பித்து வைத்தவர், எலான் மஸ்க்.  ட்விட்டரில் சுமார்  3 ஆயிரத்து 700 பேரை பணிநீக்க … Read more