ரஷ்ய ஏவுகணையை தகர்ப்பதற்காக உக்ரைன் ராணுவம் ஏவிய ஏவுகணை போலந்தை தாக்கியதால் பதற்றம்

கீவ்: ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த 7 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் உக்ரைன் எல்லையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடான போலந்தின் ஒரு கிராமத்தில் ஒரு ஏவுகணை தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த ஏவுகணை ரஷ்யாவின் தயாரிப்பு என போலந்து வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியது. இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தலைநகர் வார்சாவில் உள்ள ரஷ்ய தூதருக்கு சம்மன் அனுப்பியது. … Read more

இந்தோனேசியா: 271 பேருடன் சென்ற பயணிகள் படகில் தீ விபத்து

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 271 பேருடன் சென்ற பயணிகள் படகு தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. லிம்பர் துறைமுகத்தில் இருந்து கீட்டாபாங் நகரை நோக்கி சென்ற இந்தப் படகில் 236 பயணிகளும், 35 பணியாளர்களும் இருந்தனர். காரங்ககேசம் கடற்கரையில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் படகில் தீ விபத்து ஏற்பட்டது. பயணிகளைக் காப்பாற்ற இரண்டு கடற்படைக் கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. மீட்புப் படையினரும், மீனவர்களும் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் தெரியவில்லை என்று அங்கிருந்து … Read more

ஜி-20 நாடுகளின் தலைமையை ஏற்றார் பிரதமர் மோடி: இந்தோனேசிய உச்சி மாநாட்டில் அடுத்த ஓராண்டுக்கான பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைப்பு

பாலி: பாலி தீவில் நடந்த ஜி-20 உச்சிமாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டார். இந்தியாவின் தலைமையில் ஜி-20 அமைப்பு லட்சியமிக்கதாக, தீர்க்கமானதாக, சிறப்பாக செயல்படும் என்று அவர் உறுதி அளித்தார். ஜி-20 அமைப்பின் 17-வது உச்சிமாநாடு இந்தோனேசியாவின் பாலிதீவில் கடந்த 2 நாட்களாக நடந்தது. ஜி-20 அமைப்புக்கான தலைமையை அதன் உறுப்பு நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஏற்கும். கடந்த ஓராண்டாக இந்த பொறுப்பு இந்தோனேசியாவிடம் இருந்தது. அதன் … Read more

இன்று உலக தத்துவ தினம்| Dinamalar

தத்துவத்தின் முக்கியத்துவத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்து, பல பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐ.நா.,வின் யுனெஸ்கோ சார்பில் ஆண்டுதோறும் நவ., மூன்றாவது வியாழன் (நவ. 17) உலக தத்துவ தினமாக கடை பிடிக்கப்படுகிறது. மனித நாகரிகத்தை வழிமொழிவதில் தத்துவஞானிகளின் பங்கு அளப்பரியது. நீதி, நேர்மை, அமைதி, சுதந்திரத்தை தத்துவங்கள் மூலம் வழங்க முடியும் என யுனெஸ்கோ கருதுகிறது. சாக்ரடீஸ் போன்ற அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் படித்துணர்ந்து நடக்க வேண்டும். இந்த தினத்தைக் கொண்டாடுவதன் … Read more

 பிரிட்டனில் 41 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி:பிரிட்டனின் பணவீக்கம், அக்டோபர் மாதத்தில், 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 11.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. புதிய வரி மற்றும் செலவு திட்டங்களை பிரிட்டன் வெளியிட உள்ள நிலையில், தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து, மக்களின் வாழ்க்கை செலவுக்கான நெருக்கடியை தணிக்க, மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழல், அந்நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள், அக்டோபரில், பிரிட்டனின் சில்லரை விலை பணவீக்கம் 10.7 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தனர். … Read more

சல்யூட் அடித்த பைடன்: ஹாய் சொன்ன மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாலி: ஜி-20 மாநாட்டின் 2-வது நாளான நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை பார்த்து ‘சல்யூட்’ அடித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. நேற்று மாநாட்டின் நிறைவு நாளின் போது உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பாலிநகரில் உள்ள மாளிகையில் குவிந்தனர். அங்கு ஒவ்வொரு தலைவர்கள் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமரும் அருகருகே அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது எதிரே அமெரிக்க … Read more

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் 2024- ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அந்த நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். ப்ளோரிடா மாகாணத்தில் பேசுகையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். கடந்த 2016- ல் நடைபெற்ற தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு அதிபராக வெற்றிப் பெற்ற  டிரம்ப்,பிறகு 2020- ஆம் ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இப்போது 2024- ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்து உள்ள … Read more

50 ஆண்டுக்கு பின் நிலவுக்கு ராக்கெட் அமெரிக்காவின் நாசா அனுப்பியது| Dinamalar

கேப் கேனவரால்,நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சோதனை விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான ‘நாசா’ நேற்று செலுத்தியது. ‘அப்பல்லோ’ பயணத் திட்டம் முடிவுக்கு வந்து, ௫௦ ஆண்டு முடிந்துள்ள நிலையில் இந்தப் பயணம் நடந்துள்ளது. நாசா முதன் முதலில் ௧௯௬௯ல் நிலவுக்கு மனிதர்களை அனுப்பியது. இதைத் தொடர்ந்து, அப்பல்லோ ராக்கெட்கள் வாயிலாக ஐந்து முறை மனிதர்கள் நிலவுக்கு அனுப்பப்பட்டனர். இந்த ஆறு பயணங்களில், ௧௨ மனிதர்கள் நிலவில் தங்கள் கால்தடத்தை பதித்தனர். இந்த … Read more

குவைத்தில் 7 பேருக்கு துாக்கு நிறைவேற்றம்| Dinamalar

துபாய் சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையிலும், குவைத் நாட்டில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேற்காசிய நாடான குவைத்தில், கொலை உள்ளிட்ட வழக்குகளில், அந்நாட்டைச் சேர்ந்த மூன்று ஆண்கள், ஒரு பெண், சிரிய நாட்டைச் சேர்ந்த ஆண், பாகிஸ்தானைச் சேர்ந்த ஆண் மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஒரு பெண் ஆகிய ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக … Read more