Invisibility Cloak: ஜீபூம்பா! கேமராக்களுக்கு ஆப்பு வைக்கும் மேஜிக் ‘மாயஜால கோட்’

உலகத்தில் இருந்து உங்களை மறைக்கும் ‘மந்திர ஆடை’ இன்னும் சில நாட்களில் விற்பனைக்கு வந்துவிடும். இந்த சிறப்பு ஆடை, உலகத்திலிருந்து மட்டுமல்ல, பாதுகாப்பு கேமராக்களிலும் இருந்து உங்களை மறைத்துவிடும். நம்ப முடியவில்லை, சாத்தியமில்லை, சும்மா கதை விடாதீங்க என சொல்லத் தோன்றுகிறதா? ஹாரி பாட்டரின் ‘இன்விசிபிலிட்டி க்ளோக்’ உண்மையில் ஒரு யதார்த்தமாக மாற முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றர் சீன மாணவர்கள். அறிவியல் புனைகதைகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, தங்கள் புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது ஒரு மாணவர் பட்டாளம். குறைந்த … Read more

நிலவுக்கு ஏவப்பட்டது ஜப்பானின் லேண்டர் கருவி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கேப் கனாவரெல்-கிழக்காசிய நாடான ஜப்பானின் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ‘லேண்டர்’ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சின் ‘ரோவர்’ ஆகியவை நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று விண்ணில் ஏவப்பட்டன. நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஜப்பானின் டோக்கியோவைச் சேர்ந்த, ‘ஐ ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம், லேண்டர் கருவியை தயாரித்தது. இந்த ஆய்வில் இணைந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ‘ரோவர்’ கருவியை தயாரித்துள்ளது. இந்த இரு கருவிகளும், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ராக்கெட் … Read more

சீனாவில் கொரோனா பரவல் மருத்துவமனைகள் அதிகரிப்பு| Dinamalar

பீஜிங்,-நம் அண்டை நாடான சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் தற்காலிக மருத்துவமனைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுதும் 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவியது. இது முதன் முதலில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து தான் பரவியது என்று கூறப்பட்டாலும், இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால், 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கொரோனா பாதிப்பால் உலகமே முடங்கியது. 2021ல் தடுப்பூசி தயாரிக்கப்பட்ட பின், உலக நாடுகளில் இயல்பு … Read more

உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு தினம்| Dinamalar

உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12-ஆம் தேதி கடைபிடிக்கப் படுகிறது. உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் மலிவான தரமான சுகாதாரப் பராமரிப்பை வழங்க வேண்டும் என நாடுகளுக்கு முதன் முதலில் அறைகூவல் விடுத்த ஐக்கிய நாடுகள் அவையின் ஒருமனதான தீர்மானம் நிறைவேறிய நாள் இதுவே. ஐக்கிய நாடுகளால் தழுவப்பட்ட புதிய நிலையான வளர்ச்சி இலக்குகளில் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு உள்ளடக்கப்பட்டுள்ளது.உடலும் மனமும் தூய்மையாக இருந்தாலே, பெரும்பாலான நோய்கள் நம்மை அணுகாமலிருக்கும். சுகாதாரம், … Read more

ரஷ்யாவின் அதிரடி தாக்குதல்: இருளில் மூழ்கிய உக்ரைன்| Dinamalar

கீவ், -உக்ரைன் நகரங்கள் மீது, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா உளவு விமானங்கள் வாயிலாக ரஷ்யா நடத்திய தாக்குதலால், பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கின. இதனால், 15 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி அவதிப்படுகின்றனர். கிழக்கு ஐரோப்பியநாடான உக்ரைன் மீது கடந்த பிப்., 24ல் ரஷ்யா போர் தொடுத்தது. ரஷ்ய ராணுவத்தின் தொடர் தாக்குதலால், உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சிதிலமடைந்து உள்ளன. சில வாரங்களுக்கு முன், கெர்சோன் நகரில் இருந்து ரஷ்ய படை பின்வாங்கியது; இது, உக்ரைனுக்கு கிடைத்த … Read more

பிரமிக்க வைத்த சனி கிரகம் – நாசா பகிர்ந்த அதிசய புகைப்படம்

வாஷிங்டன், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, அவ்வபோது தனது சமூக வலைதள பக்கத்தில் விண்வெளியில் எடுக்கப்பட படங்கள் மற்றும் அரிய வீடியோக்களை பகிர்ந்து வருகிறது. வின்கலத்தின் மூலமாகவோ அல்லது தொலைநோக்கிகளின் மூலமாகவோ எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். இந்த நிலையில் நாசா, சனி கிரகத்தின் அரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளது, சூரியன் பின்னாலிருந்து ஒளி வீச, சனிக்கிரகத்தின் நிழலில் இருந்து கடந்த 2012 ஆம் ஆண்டில், காசினி … Read more

நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம் இன்று பூமிக்கு திரும்புகிறது

வாஷிங்டன், நிலவை ஆய்வு செய்வதற்காக நாசாவின் ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் நவம்பர் 25ம் தேதி முதல் சந்திரனை சுற்றி ஆய்வு செய்தது. மிக அருகில் நிலவின் புகைப்படங்களையும் எடுத்து அனுப்பியது. இந்த நிலையில் ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் நிலவில் தனது பணிகளை முடித்துக் கொண்டு அதன் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறி கடந்த வாரம் பூமிக்கு திரும்ப தொடங்கியது. இன்று இரவு 11.10 … Read more

ரஷியா ட்ரோன் தாக்குதல்: ஒடேசா நகர மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாக உக்ரைன் அதிபர் கவலை

கீவ், தனது அண்டை நாடான உக்ரைனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது. மிகப்பெரிய படைபலத்தின் மூலம் உக்ரைனை எளிதில் அடிபணிய வைத்துவிடலாம் என எண்ணி போரை தொடங்கிய ரஷியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகள் துணிவுடன் எதிர்த்து நிற்கிறது. அதே வேளையில் ரஷியாவும் போரில் இருந்து பின்வாங்குவதாக … Read more

ஜி-7 நாடுகளின் எண்ணெய் விலை உச்சவரம்பு முடிவுக்கு இந்தியா ஆதரவில்லை; ரஷியா வரவேற்பு

மாஸ்கோ, உக்ரைனில் ராணுவ நடவடிக்கை பெயரில் ரஷியா போர் தொடங்கியது முதல் சர்வதேச அளவிலான எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ரஷியாவை வழிக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட நாடுகள் பொருளாதார தடை விதித்தும் பலனில்லை. இதனால், ரஷிய இறக்குமதி எண்ணெய்க்கு விலை உச்சவரம்பு நிர்ணயிப்பது என்று கடந்த செப்டம்பரில் ஜி-7 நாடுகள் முடிவு செய்தன. இதன்படி, இந்த முடிவை ஐரோப்பிய ஒன்றியமும் அப்படியே ஏற்கிறோம் என கூறியது. இதனை தொடர்ந்து, ஜி-7 … Read more

விமர்சனத்துக்கு உள்ளாகும் ஹாரி – மேகன் ஆவணத் தொடர்

நெட்பளிக்ஸில் வெளியாகியுள்ள ஹாரி – மேகன் மார்கல் தொடர்பான ஆவணத் தொடர் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பல்வேறு எதிர்வினைகள் இந்த ஆவணத் தொடருக்கு வந்து கொண்டிருக்கிறது. பிரிட்டன் இளவரசர் ஹாரியை திருமணம் செய்ததன் மூலம் இங்கிலாந்தின் இளவரசியான முதல் கருப்பின பெண் என்ற பெருமையை மேகன் பெற்றிருந்தார். எனினும், அரச குடும்பத்தினரும், பிரிட்டன் ஊடகங்களும் கனிவான முகத்தை மேகனுக்கு காட்டவில்லை. பிரிட்டன் ஊடகங்களால் நிறம் சார்ந்து அவர் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தார். ஊடகங்களால் டயானாவுக்கு என்ன நடந்ததோ, … Read more