சீனாவில் இம்மாதத்தில் மட்டும் சுமார் 25 கோடி பேருக்கு கோவிட் பாதிப்பு.. கட்டுப்பாடுகள் தளர்ந்ததால் கட்டுக்குள் அடங்க மறுக்கும் கொரோனா..!

சீனாவில் இம்மாதத்தில் மட்டும் சுமார் 25 கோடி பேர்  கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட் பாதிப்பில் இருந்து சீனா விடுபட பலமாதங்களாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பணிந்து பூஜ்யம் கோவிட் கொள்கையை சீன அரசு தளர்த்தியதையடுத்து இருபதே நாட்களில் 3 ஆண்டுகளாக கட்டுக்குள் வைத்திருந்த கோவிட் சுனாமி பேரலையாக சீனாவை சூழ்ந்துள்ளது. தற்போது உருமாறிய பி.எப். 7 வகை கொரோனா பாதிப்பால் சீனாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. Source link

சீனாவில் மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பு உள்ளதாக அரசு தரப்பு விளக்கம்

பெய்ஜிங், சீனாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் சீனாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. அதே சமயம் கொரோனா பாதிப்புகளை சீன அரசு முறையாக பதிவு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. அண்மையில் சீனாவில் அறிகுறில் இல்லாத கொரோனா பாதிப்புகளை பதிவு செய்யப்போவதில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்தது. இந்த நிலையில் இனி தினசரி கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களயும் வெளியிட மாட்டோம் … Read more

இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடமாக போற்றப்படும் பெத்லஹேமில் சிறப்பு பிரார்த்தனை..!

இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடமாக போற்றப்படும் பெத்லஹேமில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஜெருசலேமைச் சேர்ந்த பாதிரியார், கிறிஸ்துமஸ் தின சேவையை வழிநடத்த, பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்டோர் தேவாலய பீடங்களில் அமர்ந்திருந்து பாடல்களை பாடினர். இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். 2 வருட கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு, இம்முறை பெத்லகேம் தேவாலயத்திற்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தந்தனர். Source link

நேபாளத்தில் மீண்டும் பிரதமராகிறார் பிரசந்தா

நாடாளுமன்ற தேர்தல் 275 உறுப்பினா்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 20-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆட்சி அமைக்கத் தேவையான 138 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை. எனினும் பிரதமர் ஷேர் பகதூர் தூபா தலைமையிலான நேபாள காங்கிரஸ் கட்சி 89 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதை தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசை அமைப்பதற்கான முயற்சிகளில் ஷேர் பகதூர் தூபா இறங்கினார். அதன்படி முன்னாள் பிரதமர் புஷ்ப … Read more

ஸ்பெயினில் 65 அடி உயர பாலத்திலிருந்து ஆற்றுக்குள் பேருந்து விழுந்து விபத்து.. 3 பேர் பலி!

ஸ்பெயினில்,  65 அடி உயர பாலத்திலிருந்து, ஆற்றுக்குள் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் உயிரிழந்தனர். இரவு வேளையில், 8 பயணிகளுடன் விகோ நகரம் நோக்கி அந்த பேருந்து சென்றுக்கொண்டிருந்த நிலையில், மழை பெய்ததன் காரணமாக, சாலையில் பேருந்தின் டயர்கள் வழுக்கியதால், பாலத்தின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு, ஆற்றுக்குள் பாய்ந்தது. ஓட்டுநர் உள்பட 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், 3 பேர் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 4 பேரை தேடும் பணிகள் விடிய விடிய தொடர்ந்து நடைபெற்றன. … Read more

பாகிஸ்தானில் பரபரப்பான சாலையில் குண்டு வெடிப்பு – அதிர்ச்சி சம்பவம்

லாகூர், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குட்டா நகரில் ஷப்சல் என்ற பரபரப்பான சாலை உள்ளது. இந்த பகுதியில் இன்று மாலை வழக்கம்போல வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அப்போது, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கையெறி குண்டு திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் அங்கு நின்றுகொண்டிருந்த 4 பேர் படுகாயமடைந்தனர். இதில், 3 பேர் பெண்கள் ஆகும். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். மேலும், படுகாயமடைந்த 4 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் … Read more

கால்பந்து ஜாம்பவான் பீலே அனுமதிக்கபப்ட்டுள்ள மருத்துவமனைக்கு விரைந்த குடும்பத்தினர் – பரபரப்பு…!

பிரேசிலா, தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீப நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் பீலே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடந்து சிகிச்சை அளித்து … Read more

பிரான்ஸில், இனவெறித்தாக்குதலில் ‘குர்து’ இன மக்கள் 3 பேர் உயிரிழப்பு..!

பிரான்ஸில், இனவெறித்தாக்குதலில் குர்து இன மக்கள் 3 பேர் கொல்லப்பட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. 2013-ம் ஆண்டு, பாரிஸில், குர்து பெண்கள் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் 10-ம் ஆண்டு நினைவேந்தல் அனுசரிக்கப்பட இருந்த நிலையில், குர்து கலாச்சார மையத்தில், 69 வயது முதியவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். அதனை கண்டித்து குர்து மக்கள் நடத்திய பேரணியில் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. கார்களை தலைகீழாகக் கவிழ்த்தும், கையில் … Read more

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இருவரின் கோரிக்கை மனுக்கள் ஏற்பு – மறுவிசாரணை செய்ய ஈரான் நீதிமன்றம் உத்தரவு

தெஹ்ரான்: ஈரானில் தூக்குத் தண்டனையை எதிர்த்து மனுதாக்கல் செய்த ராப் பாடகர் உள்ளிட்ட இரு போராட்டக்காரர்களின் மனுவை அந்நாட்டு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு மறுவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ’கடவுளுக்கு எதிரான போர்’ என்ற குற்றச்சாட்டில் ஈரான் கால்பந்தாட்ட வீரர், அமீர் நசீர் உள்ளிட்ட 20 பேருக்கு ஈரான் மரண தண்டனை விதித்துள்ளது. இவர்களில் சிலருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மனித உரிமை அமைப்புகளும் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் … Read more