Zero Covid: சீனாவில் மக்கள் போராட்டம்! 'ஜீரோ-கோவிட்' கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு
ஷாங்காய்: சீனாவின் கடுமையான ‘ஜீரோ-கோவிட்’ கட்டுப்பாடுகளுக்கு உள்நாட்டில் எதிர்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், பிற நாடுகளிலும் அதற்கு ஆதரவு அதிகரிக்கிறது. சீன மக்கள் வழக்கமாக போராட்டங்களில் அதிகம் ஈடுபடுவதில்லை. ஆனால், தற்போது தங்கள் கோபத்தை, போராட்டங்களாக வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர். கடந்த வார இறுதியில் சீன மக்கள் நாட்டின் கடுமையான பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை எதிர்த்து வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினார்கல். இதற்கிடையில், நவம்பர் 26 அன்று 39,791 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியிருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. … Read more