இந்தோனேஷிய நிலநடுக்கத்தில் பலி ௨௬௮ ஆக உயர்வு| Dinamalar
சியான்சுர், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, ௨௬௮ஆக உயர்ந்துள்ளது. மேலும், ௧௫௧ பேரை காணவில்லை. இதற்கிடையே, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் உள்ள சியான்சுரில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. இந்த நில நடுக்கத்தால் பள்ளி, மருத்துவமனை மற்றும் ஏராளமான வீடுகள் இடிந்தன. … Read more