இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் 76 சதவீத மக்களின் உணவுத் திட்டத்தில் மாற்றம்

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 76 சதவீதம் மக்களின் உணவுத்திட்டம் மாறி உள்ளதாக உலக உணவுத் திட்ட அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. மக்கள் தொகையில் 73 சதவீதமானோர் விலை மற்றும் ஊட்டச்சத்து குறைந்த உணவுகளை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, 52 சதவீதத்தினர் தங்களது உணவின் அளவை குறைத்துக் கொண்டிருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 40 சதவீத மக்கள் 3 வேளையும் உணவு சாப்பிடுவது இல்லையெனவும், இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளை விட தென் … Read more

உறைந்த ஏரியில் விழுந்து 3 இந்தியர்கள் பரிதாப பலி| 3 Indians tragically died after falling into the frozen lake

வாஷிங்டன்,-அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பெண் உட்பட மூன்று இந்தியர்கள், பனி உறைந்திருந்த ஏரியில் நடந்து சென்றபோது, பனிக்கட்டி உடைந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். அமெரிக்காவில், கடந்த சில நாட்களாக கடும் பனி சூறாவளி வீசுகிறது. இந்த சூறாவளியால், 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், அரிசோனா மாகாணம் சாண்ட்லெர் நகரில் வசித்த இந்திய வம்சாவளியைச்சேர்ந்த நாராயணா முதனா,49, கோகுல் மெடிசெட்டி,47, ஹரிதா முதனா ஆகிய மூவரும், அங்குள்ள வுட்ஸ் கேன்யான் ஏரியில் உறைந்திருந்த பனிப்பாறையில் நடந்து சென்றனர். திடீரென … Read more

பாகிஸ்தானில் ஹிந்து பெண் தலையை துண்டித்து படுகொலை: எம்.பி., தகவல்| Hindu woman beheaded, skin peeled off in Pakistan’s Sinjhoro, says lawmaker

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 40 வயது மதிக்கத்தக்க ஹிந்து மதத்தை சேர்ந்த விதவை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது தலை துண்டிக்கப்பட்ட நிலையில், மார்பகம் தனியாக அறுத்தெடுக்கப்பட்டும், தோல் உரிக்கப்பட்ட கொடூரமும் நடந்துள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த கிருஷ்ண குமாரி என்பவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இவர் தான், பாகிஸ்தான் பார்லிமென்டிற்கு தேர்வான ஹிந்து எம்.பி., ஆவார். அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஷின்ஜோரா கிராமத்தை சேர்ந்தவர் தயா … Read more

அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயலில் உறைந்த நயாகரா அருவி!

நியூயார்க்: அமெரிக்காவில் நிலவும் வரலாறு காணாத பனிப்புயலுக்கு அங்குள்ள நயாகரா அருவி பாதி உறைந்த நிலையில் காணப்படுகிறது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கூடவே, பனிப்புயலும் மக்களை வாட்டி வதைக்கிறது. மிகக் கடுமையாக வீசும் இந்தப் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. புத்தாண்டு விடுமுறையை கொண்டாட திட்டமிட்டிருந்த மக்கள் பலரும் தங்களின் வீடுகளிலேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் நிலவும் கடும் பனிக்கு பல்வேறு மாகாணங்களில் மின்சார விநியோக பாதிப்பு, … Read more

பிலிப்பைன்சில் வெள்ளம்: பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்வு| Floods in the Philippines: Death toll rises to 32

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிலிப்பைன்சில் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 24 பேர் … Read more

வெளிநாட்டிலும் இப்படியா? ஓடும் விமானத்தில் சரமாரியாக அடித்துக் கொண்ட வட இந்தியர்கள்

டிசம்பர் 27 ஆம் தேதி ‘தாய் ஸ்மைல்’ நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் பாங்காக்கில் இருந்து கொல்கத்தாவுக்கு செல்ல புறப்பட்டது. டாக்ஸிவேயில் விமானம் வந்து கொண்டிருந்தபோது, இருக்கை எண் 31C இல் அமர்ந்திருந்த வட இந்திய பயணி ஒருவர் தனது சீட்டை சாய்த்துக்கொண்டுள்ளார். இதனால் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதை கவனித்த விமான பணி பெண் அந்த பயணியிடம், இருக்கையை நேராக்கிக்கொள்ளுங்கள்; விமான விதிப்படி இருக்கையை இவ்வாறு சாய்த்துக்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தினார். அப்போது அந்த பயணி … Read more

கம்போடியாவில் சூதாட்ட விடுதியில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பலி: 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

கம்போடியாவின் பாய்பட் நகரில் உள்ள சூதாட்ட விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததோடு, 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கிராண்ட் டயமண்ட் சிட்டி என்ற அந்த சூதாட்ட விடுதியில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து நேர்ந்த போது, விடுதியில் 400க்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும் பெரும்பாலானோர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தை சுதாரித்துக் கொண்ட சிலர் ஜன்னல் வழியாக வெளியேறி உயிர் தப்பிய நிலையில், ஹெலிகாப்டர்கள் மூலமாக மீட்புப் பணிகள் … Read more

இந்த இருமல் டானிக் குடிச்ச 18 குழந்தைகள் பலி… அதிர்ந்த உஸ்பெகிஸ்தான்… சிக்கிய இந்திய நிறுவனம்!

காம்பியாவில் 70 குழந்தைகள் இருமல் மருந்து அருந்தி உயிரிழந்த சம்பவத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. இந்த அதிர்ச்சியில் இருந்தே இந்தியர்கள் இன்னும் மீளாத நிலையில் உஸ்பெகிஸ்தானில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தியாவின் நொய்டாவை சேர்ந்த மேரியன் பயோடெக் என்ற தனியார் நிறுவனம் தயாரித்த Doc-1 Max இருமல் மருந்து உஸ்பெகிஸ்தானிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருமல் மருந்தால் பலி இதனை அருந்திய 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஒருமுறை … Read more

இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் பலி; இந்தியா தயாரிப்பு மீது உஸ்பெஸ்கிஸ்தான் புகார்| 18 children died after drinking cough medicine; Uzbekistan complains about Indian product

தாஷ்கண்ட் : இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்து குடித்து உக்ரைனில் 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெஸ்கிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்தியாவில் டில்லி அருகே உள்ள நொய்டாவை மையமாக வைத்து டாக்1-மேக்ஸ் (குராமேக்ஸ் ) என்ற மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இருமல் மருந்து மற்றும் மாத்திரைகள் உட்கொண்ட 18 குழந்தைகள் இறந்துள்ளனர். இது தொடர்பாக இந்திய அரசுக்கு தகவல் அனுப்பி உள்ளோம். மேலும் இந்த மாத்திரை மருந்துகளை … Read more

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு.. புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ள அமெரிக்கா!

சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், அங்கிருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்கா புதிய கட்டுப்பாடுகளை விதிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானப்பயணம் தொடங்கும் 2 நாட்கள் முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான ஆதாரத்தை இணைக்க வேண்டும் எனவும், 10 நாட்கள் முன்பு தொற்று பாதித்தவர்கள் குணமடைந்ததற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும் எனவும், இந்த புதிய விதிகள் ஜனவரி 5-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வரும் … Read more